தெய்வங்கள்

தெய்வங்கள்

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு


"அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு" இந்த பழமொழியை அறியாதவர் சொல்லாதவர் பெரும்பாலும் இருக்க முடியாது.காரணம் இதன் தனித்துவம் அப்படி.எல்லா விசயங்களிலும் எல்லோரும் சொல்லும்படியாய் இருக்கும்
சாப்பிடும் உணவாக பழமாக மேலும் நட்பாக, எதிரியாக,கோபமாக ,சொல்லாக இருந்தாலும் தொழிலாக ,பயணமாக ,தூக்கமாக ஏக்கமாக இப்படியே நிறைய விசயங்களை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.

என்ன இருந்தாலும் தமிழ்ப் பழமொழியை நமது சொல்லாடல் சிறப்பாக சொல்லவே இப்படி பழமொழிகள் மூலம்  நமது முன்னோர்கள் சுருங்க சொல்லி விளங்க வைத்தார்கள்.ஆயிரம் அர்த்தங்களை இரண்டே வரிகளில் ரத்தினச் சுருக்கமாக சொல்லிய நமது வள்ளுவர் பெருமான்கூட இதுபற்றி சொல்லி இருக்கிறார்.

நாம் உண்ணும் உணவு நமது உடலுக்குத் தேவையான சக்தியைத் தருகிறது  என்பது உண்மைதான்.அதற்காக எப்போதும் எல்லா உணவு வகைகளையும் பிடிபிடியென்று சாப்பிட்டு  விட்டால் செரிமானம் செய்ய நேரமும் காலமும் இருக்காது அதனால்தான் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அவயங்களைப் பாதிக்கிறது என்பது எவ்வளவு உண்மை.

அதுபோலவே பணம் பணம் பணம் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் முடிவு என்பது நமது என்னத்தைப் பொறுத்தது.தேவை தேவையென்று கடுமையாக உழைத்து சேர்த்தாலும் அதை உடனே பயன்படுத்தா விட்டால் உங்களின் உழைப்பு வீணாகிவிடும்.ஆனால் பணம் மட்டும்  பத்திரமாக இருக்கும்.அதைக் காப்பாற்ற பெரும் பாடுபட வேண்டும் .சேமிப்பைத் தாண்டி பணம் சேர்த்தால் அதுவே கவலையும் மனகுழப்பத்தையும் சேர்த்து விடும்.

சொல்லுமே அளவாக இருக்கவேண்டும்.அது அடுத்தவரின் மனத்தைக் காயப்படுத்தும்படியோ .ஏளனப்படுத்தியோ அவதூறாகவோ சொல்லக் கூடாது.வயதுக்கு மீறியும்  பேசக்கூடாது.தகுதியறிந்து பேசுதல் நலம்.பெரியோர்களிடம் பேசும்போது அடக்கத்துடனும் மரியாதையுடனும் நடந்துகொள்ள தெரிந்திருக்க வேண்டும்.இல்லையெனில் அவர்தம் பெற்றோர்கள் சரியாக வளர்க்கவில்லை என்ற தவறான எண்ணம் வரும்

எனவே உணவாகினும், பணமாகினும், பிள்ளைகளாகினும், செல்வங்களும் அளவோடு இருந்தால் வாழ்க்கைக்கு நிம்மதி அளவுக்கு மீறினால் அதைக் காக்கவே நேரம் சரியாகி விடும் உறக்கம் கவலை நோய்கள் வந்து சேரும் .இறுதி நாட்களில் நிம்மதியில்லா நிலை ஏற்படும். அனவே அளவோடு வாழுங்கள் ஆனந்தமாய் மகிழுங்கள்.

Comments

  1. "அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு"

    இந்தக் கூற்று நமது அன்றாட வாழ்வில் பல விஷயங்களுக்கு பொருந்தக் கூடியது. அழகாகச் சொல்லியுள்ளீர்கள் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் உங்களின் வருகைக்கு நன்றி

      Delete
  2. Replies
    1. ஆம்.நீங்கள் சொன்னதுபோல் சரியே

      Delete
  3. சரிய சொன்னீங்க

    ReplyDelete
  4. அளவோடு வாழுங்கள் ஆனந்தமாய் மகிழுங்கள்.

    அறிவான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  5. "அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு"

    எம் வாழ்வில் ஒவ்வொரு நொடியும் எம் உணர்வோடு உணர்வாய்க் கொண்டு பின்பற்ற வேண்டிய ஒன்று!

    அதன் அவசியத்தை அழகாகக் கூறினீர்கள் சகோதரரே!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க சகோ

      Delete
  6. அனவே அளவோடு வாழுங்கள் ஆனந்தமாய் மகிழுங்கள்.//

    சொல், செயல் எல்லாவற்றிலும் அளவோடு வாழ்ந்தால் வாழ்வில் நலம் பல பெறலாம் என்று அழகாய் சொன்னீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றிங்கம்மா

      Delete
  7. என்னத்தை #எண்ணத்தை என்றும் ,பானம்#பணம் என்றும் திருத்துங்கள் நண்பரே !எழுத்துப் பிழை என்பதை தவிர உங்கள் கருத்துப் பிழை அல்ல !

    ReplyDelete
    Replies
    1. பானம் என்பது தவறு அதைத் திருத்திவிட்டேன்.சுட்டிக்காட்டியமைக்கு நன்றி

      Delete
  8. இன்றைய சூழலில் அனைவரும் அவசியம்
    மனதில் கொள்ள வேண்டிய கருத்து
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க சார்

      Delete
  9. அளவோடு ஆசைப்பட்டு வளமோடு வாழ நல்ல யோசனை.

    ReplyDelete
  10. Replies
    1. உங்கள் வருகைக்கு நன்றி

      Delete

  11. வணக்கம்!

    அளவுக்கு மிஞ்சினால் ஆரமுதும் நஞ்சாம்!
    உளத்துள் பதிப்பாய் உணா்ந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் கருத்துத் தருகைக்கும் நன்றிங்க அய்யா.

      Delete
  12. எனவே உணவாகினும், பணமாகினும், பிள்ளைகளாகினும், செல்வங்களும் அளவோடு இருந்தால் வாழ்க்கைக்கு நிம்மதி அளவுக்கு மீறினால் அதைக் காக்கவே நேரம் சரியாகி விடும்// உண்மை...

    ReplyDelete
    Replies
    1. அதனால் நிம்மதியாய் இருக்க நிறைந்த மனதும் குறைந்த செல்வமும் போதுமே

      Delete
  13. தெரிந்த விஷயம் தான் என்றாலும் அவ்வப்போது நமக்கு நாமே சொல்லிக் கொள்ள வேண்டிய கருத்து இது. அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க நீங்க சொல்லறதும் சரிதான்

      Delete
  14. உணவாகினும், பணமாகினும், பிள்ளைகளாகினும், செல்வங்களும் அளவோடு இருந்தால் வாழ்க்கைக்கு நிம்மதி //

    உணவு ஜாஸ்தியா சாப்பிட முடியாம உடம்புக்குள்ளவே ஒரு 'செக்' இருக்கு. போதும் சாப்ட்டதுன்னு வயிறு சொல்லிறும். ஆனா அப்படி மத்த ரெண்டுக்கும் செக்கே இல்லையே?

    ReplyDelete
    Replies
    1. நமக்கு நாமே ஏற்படுத்தும் தேவைக் கோடுதான் உள்ளதே நண்பரே

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more