கான்க்ரீட் காற்றும் காடுகளும் மரங்களும்
தென்றல் காற்று ,மழைக் காற்று ,சோலைக் காற்று ,வாடைக் காற்று என பலவாறு அழைத்தேப் பழக்கப்பட்ட நமக்கு கான்க்ரீட் காற்றுப் பற்றியும் தெரிந்திருக்கும்.அவ்வாறு தெரியாத நண்பர்களுக்காக இந்தப் பதிவைப் பகிர்வதற்கு விரும்புகிறேன். தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுதும் காட்டிலும் குடிசையிலும் கொட்டடியிலும் சாலை ஓரத்திலும் குறுகியக் குடிலையே வசிப்படமாகக் கொண்ட அடித்தட்டு மக்களின் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டினால் சிறிதேனும் சேமிப்பை வைத்துக் கொண்டு கடன் வாங்கியாவது ஒரு சிறிய தார்சுக் கட்டிடத்தை கட்டி வசிக்கும் நிலையில் எல்லோருமே ஆசைப் படுகிறார்கள். கட்டுமான நிறுவனங்களும் போட்டிப் போட்டுக்கொண்டு அழகிய சிறந்த பாதுகாப்பான காற்றோட்டமான ,வெளிச்சமான வீடுகளை தொகுப்பு வீடுகளாய்,அடுக்குமாடிக் குடியிருப்புகளாய் தனி பங்களாக்களாய் கட்டி அவரவர் விரும்பும் வண்ணம் கண்ணைக்கவரும் வகையில் விலையைக் கூட்டியும் கட்டிக் கொடுக்கிறார்கள். மேலும் கூட்டுக் குடும்பமுறை நடைமுறையில் தவிர்க்கப் படுவதாலும் ,வேலைக்காக சொந்த ஊரை விட்டு தனிக்குடித்தனமாய் வாழ வேண்டிய அவசியம் ஏற்படுவதனால