Wednesday, 27 November 2013

ஷேர் ஆட்டோ பயணம்......ஆபத்தா?ஆதாயமா?

இன்றைய விஞ்ஞான காலத்திலும் பலபேர் தங்களது கார்,பைக் போன்ற சொந்த வாகனங்கள் இருந்தாலும் பஸ்,ரயில் போன்ற போக்குவரத்து வசதி மிகுந்து காணப்பட்டாலும்  ஷேர் ஆட்டோவை பயன்படுத்தாதவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு என்றே சொல்லலாம்.

ஷேர் ஆட்டோ கிராமத்திலும் சரி  நகரத்திலும் சரி  இதன் பயன்பாடு அவசியமான ஒன்றாய் விளங்குகிறது.பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள்,
அலுவலகம் செல்பவர்கள் காய்கறி சந்தைக்கும் செல்பவர்கள் ,கூலித் தொழில் செய்வோர்கள் ,மருத்துவமனைக்கும் செல்பவர்கள் போன்ற எல்லோரும் விரும்பும் அவசியம்  இந்தவாகனத்தைப் பயன்படுத்த தவறுவதில்லை.

இது பணத்தை மிச்சப்படுத்தவும் விரும்பிய இடத்தில் இறங்கவும் பயமின்றி அதிக மக்களுடன் செல்லவும் வசதியாய் இருக்கிறது..பஸ் வசதி இல்லாத இடங்களிலும்,நேரத்தை மிச்சப்படுத்தவும் மற்ற ஆட்டோக்களின் அதிக கட்டண வசூலைத் தவிர்க்கவும் இதன் பயன்பாடு மெச்சத்தகுந்த வகையில் உள்ளது. கிராமங்களில் எல்லோருமே உபயோகப்படுத்துகின்றனர்

அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட அதிக பயணிகளை ஏற்றுவதால்  பல இன்னல்களை சந்திக்க வேண்டியுள்ளது.நெரிசல் அதிகமாகி இடவசதி குறைவாகவே இருக்கும் .ஆண்பெண் பாகுபாடின்றி இடநெருக்குதலில் ஒருவரையொருவர் திட்டிக்கொண்டும் உரசிக்கொண்டும்  மௌனமாகவே பயனிக்கவேண்டியுள்ளது.இருந்தாலும் குடிகாரர்கள் பான் போட்டும் ,
வெற்றிலைப் புகையிலை நாற்றத்துடனும் வருவோரைத் தவிர்க்க இயலாமல் இருக்கும்.

போக்குவரத்துத் துறையின் அனுமதியானது பயணிகளின் எண்ணிக்கை  மற்றும் ஓட்டுனரையும் சேர்த்து 3+1,7+1  என்று இருந்தாலும் அதையும் மீறி அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றுவதால் அங்கங்கே போக்குவரத்து போலீசார்,வாகன தணிக்கை அதிகாரிகளின் எச்சரிக்கையுடன்  அபராதமும் விதித்து  ஒழுங்குபடுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

சாலை விபத்துகளில் அதிக எண்ணிகையில் பாதிப்படைவது இம்மாதிரியான  ஷேர் ஆட்டோக்களில் பயணிக்கும் பயணிகள் தான். பெருபாலான ஓட்டுனர்களின்  பணதேவையினால் மக்களின் நலன் புறக்கணிக்கப்பட்டு சுயநலத்தால் அதிகப்பயனிகளை ஏற்றுவதால் விபத்துநேரத்தில் உயிர் உடமைக் காயம் போன்ற சேதாரம் அதிகமாகிறது.

விதிகளை மீறி ஓட்டுவது தெரிந்தும்  அவசியம் மற்றும் அவசரமாயும் சில நேரங்களில் பயனிக்கவேண்டியுள்ளது. காரணம் எரிபொருள் சிக்கனம் குறைந்த செலவு விருப்பமான இடத்தில் இறங்கவே இம்மாதிரிப்பயணம் வசதியாய் உள்ளது.சட்டப்படி தவறான பயணமானாலும் வசதிக்காகவும் இதில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகமாய் உள்ளது.


17 comments:

 1. வேறு வழியில்லை... பலரின் நிதி நிலைமை அப்படி...

  ReplyDelete
 2. நிதி நிலைமை என்றில்லை. உடனே செல்வதற்கு இவைதான் தோது! பஸ்ஸின் பிதுங்கி வழியும் கூட்டத்துக்கு இவை பரவாயில்லை.

  ReplyDelete
 3. ஷேர் ஆட்டோவை பயன்படுத்தாதவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு என்றே சொல்லலாம்.//

  அவசிய தேவை ஆகிவிட்டது ஷேர் ஆட்டோ.

  ReplyDelete
 4. திண்டுக்கல் தனபாலன் அவர்களின்
  கருத்துத்தான் என் கருத்தும்

  ReplyDelete
 5. பொருண்மிய (நிதி) நிலை - நேர முகாமைத்துவம் என பயணிகள் சிந்தித்தாலும் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் வருவாயை மட்டும் எண்ணுகிறார்கள். நான் சென்னைக்கு வந்திருந்த போது கண்ட உண்மை.

  ReplyDelete
 6. வேற வழியில்லை. போகுமிடம் சீக்கிரம் போய் சேர இதான் உகந்தது

  ReplyDelete
 7. என்ன சொல்வது ஐயா...தனபாலன் அவர்கள் சொல்வதுபோல நிதி நிலைமையால் இதைப் பயன்படுத்துவோர் உண்டு...அஸ்ஸாமில் சேர்ந்துபயணிக்கும் இத்தகைய வண்டி ஒன்றில் ஒரு பெண் பாலியல் கொடுமைக்கு ஆளாகி கொல்லப்பட்டிருக்கிறார்.....அனைவரும் கவனமாக இருக்கட்டும்...

  ReplyDelete
 8. நிதி நிலைமைக்கு ஏற்றப் பயணம் ஷேர் ஆட்டோ பயணம்தான். ஆனாலும் மூன்று சக்கர வாகனமாக இருப்பதால், வேகமாக சென்று திரும்பும் பொழுது விபத்தினை எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கின்றது. பொறுப்புமிக்கு ஓட்டுநர்களே இன்றைய தேவை

  ReplyDelete
 9. பஸ்கள் செல்லாத இடத்திற்கு செல்கின்றன! நிற்க சொல்லுமிடத்தில் நிற்கின்றன! நெரிசல் ஒன்றே இதன் குறை! நல்லதொரு பகிர்வு! நன்றி!

  ReplyDelete
 10. பலர் பஸ்ஸை எதிர்பார்ப்பதில்லை. பஸ் கட்டணத்துக்கும் ஷேர் ஆட்டோக் கட்டணத்துக்கும் பெரிய வித்தியாசமில்லை.

  ReplyDelete
 11. ஷேர் ஆட்டோ - பற்றிய உங்கள் பகிர்வு நன்று. தில்லியில் பல வருடங்களுக்கு முன்னரே Phat Phat Seva என ஒன்று இருந்தது - அது பல வடிவங்களை எடுத்து இன்றைக்கும் இருக்கிறது..... பல விபத்துகளுக்கு காரணமாகவும் இருக்கிறது!

  ReplyDelete
 12. சரியாக சொன்னீர்கள்... ஆனால் பெரும்பாலும் பெருந்து கட்டணமும் ஷேர் ஆட்டோ கட்டணமும் ஒன்று போலவேதான் உள்ளது..நேர மேலாண்மை வேண்டுமானால் இதன் அதிகப் படியான உபயோகத்திற்க்கு காரணமாய் இருக்கலாம்... அடுத்ததாய் கிராமங்களில் ஷேர் ஆட்டோ குறித்து கூறினீர்கள், ஆனால் எங்கள் பகுதியிலெல்லாம் கிராமங்களில் சாதரண ஆட்டோவே இல்லையே இதில் எங்கிருந்த்து வரும் ஷேர் ஆட்டோக்கள், :( வந்தால் அருகில் உள்ள இடங்கலுக்கெல்லாம் செல்ல வசதியாகவே இருக்கும்... :)

  ReplyDelete
 13. ஷேர் ஆட்டோ விபத்துக்கு காரணம் அனுமதிக்கப் பட்ட எண்ணிக்கைக்கு மேல் பயணிகளை ஏற்றிக் கொள்வதுதான் ,கட்டுப் படுத்த வேண்டிய காவல் துறையின் கறுப்பாடுகள் சிலர் காசைப் பார்க்கிறார்கள் !
  த .ம +1 c d

  ReplyDelete
 14. பங்கீட்டுப் பணத்தில் பயணிக்கும் வாடகை வண்டியின் நன்மை தீமைப் பதிவு நன்று.
  இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 15. ஷேர் ஆட்டோவைப் பற்றியும், பயணம் செய்வோர் படும் கஷ்டங்களையும் நன்றாகவே சொன்னீர்கள்.

  முன்பெல்லாம் எங்கள் பகுதியிலிருந்து அரை மணிக்கு ஒரு டவுன் பஸ் புறப்பட்டுச் செல்லும். இப்போது சிலசமயம் ஒரு மணிக்கும் மேலாக காத்து இருக்க வேண்டியுள்ளது. இது மாதிரி சமயங்களில் மக்களுக்கு அவசரத்திற்கு ஷேர் ஆட்டோ உதவியாக இருக்கிறது. எனக்கு ஷேர் ஆட்டோ என்றால் பயம்தான். ஆசிரியர் கரந்தை ஜெயகுமார் சொல்வதைப்போல “ மூன்று சக்கர வாகனமாக இருப்பதால், வேகமாக சென்று திரும்பும் பொழுது விபத்தினை எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கின்றது” இதனைத் தவிர்க்க ஷேர் வேன்களை அங்கீகரிக்கலாம்.

  ReplyDelete

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்