தெய்வங்கள்

தெய்வங்கள்

சலூன்கடையும் சாமியின் மடமும்

      சிறுவயதில்  முடிவெட்ட  சலூன் கடைக்கு அனுப்ப மாட்டார்கள் .காரணம் அங்கு அறைமுழுதும் கண்ணாடி  சீருடை அணிந்தவர் அதிக கட்டணம் வசூலிப்பார்கள் சுகாதாரம் என்ற பேரில்  சுழலும் சக்கர நாற்காலி  தினசரிப் பத்திரிகை வெளிநாட்டு முகப்பூச்சு கலர்கலரான பாட்டில்களில்  தண்ணீர்த்  தெளிப்பான் மற்றும்  வானொலிப்பெட்டி என்று மட்டுமே இருந்தது.

        இன்றைய நாட்களில்  பெரும்பாலான நகரங்களில் சுகாதாரம் சுத்தம்  வேண்டி பொதுமக்கள் வந்து செல்லுமிடங்களில்  குளிரூட்டப்பட்ட வசதி செய்யப்பட்டுள்ளது .குஷன் மெத்தைகள் அழகிய வேலைப்பாடுகள் ,நறுமணம் வீசிக்கொண்டே நாளும் இருக்கும் வசதி போன்றவற்றுடன் கண்கவர் வண்ண விளக்குகள் போன்ற மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் உள்ளது.

        ஆனாலும் மக்கள் சாதாரணக் கடைகளுக்கே செல்லுகிறார்கள்  அன்று வெறுத்த இடமே இன்று அவசியம் தேவையெனப் பட்டது.இப்போதெல்லாம்  எல்லோரும் விரும்புவதேக் காரணம்.காசு கொஞ்சம் கூட இருந்தாலும்  பரவாயில்லையென அவ்வாறான சலூன் கடைக்கே செல்வது வாடிக்கையாகிவிட்டது. ஆனால் அங்கு எப்போதும்போல் கூட்டத்திற்கு குறைச்சலில்லாமல்  இருக்கும்

           சொந்தகதைகள் ஊர்க்கதைகள் எப்போதும் பேசிக்கொண்டே இருக்கும் ஒருசிலர் எப்போதும் வாடிக்கையாய் அரசியல் ,சினிமா,சண்டைகள்,சிரிப்பு தேவையில்லாத  வாதங்கள் விவாதங்களும் அங்கு நடைபெறத் தவறுவதில்லை.அப்படித்தான் அன்றும் பேச்சுவாக்கில் சாமியார் மடம் பற்றிய விவாதம் நடந்தது.கிராமம்தானே என்றிருந்த எனக்கு அதிர்ச்சி.

       எல்லோருமே அத்துபடியாய் மிக தெள்ளத்தெளிவாக விளக்கமாய்ப் பேசுகிறார்கள்.அதிர்சியானத் தகவல்களை அள்ளி வீசியது எனக்கும் வியப்பாய் இருந்தது.ஒருகட்டத்தில் நானே வாய்மூடி மௌநியாக இருக்க வேண்டிய நிர்பந்தம் வந்தது, மாநிலத்திற்கு ஒருவராவது ஏதேனும் சிக்கலில் மாட்டிச் சீரழிவது இப்போதெல்லாம் வாடிக்கையாகி விட்டது எனச் சொல்லியது உண்மையென்றே  எனக்கும் தோன்றியது.


Comments

  1. நண்பரே, இது எந்த வருடம் எழுதிய கட்டுரை?
    இப்போதெல்லாம் சலூனில் யாரும் அரசியல் பேசுவதில்லை. அந்தக்காலம் மாதிரி அழகிகளின் படங்களும் சலூனில் இருப்பதில்லை. அது மட்டுமல்ல, முடி வெட்டுவது மட்டுமே சற்று விலைகுறைவான விஷயம். தலைக்குச் சாயம் பூசுவதென்றால் ஐந்நூறு ரூபாய் வரை வாங்குகிறார்கள். அதைப் பற்றி எழுதியிருந்தால் ஆறுதலாக இருக்குமே! இன்னும் சில சலூன்களில் அழகிய பெண்கள் தான் ஆண்களுக்கும் முடி திருத்துகிறார்கள். அந்த அனுபவத்தை எழுதாதது ஏனோ?

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கு நன்றி

      Delete
  2. ISO பெற்ற சலூன் கடைகளும் இன்று உண்டு....!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கு நன்றி

      Delete
  3. பதிவும் பின்னூட்டங்களும் அருமை..

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கு நன்றி

      Delete
  4. இன்னும் விரிவாக எழுதி இருக்கலாமோ எனத்
    தோன்றியது,பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க சார்.நேரமின்மையே காரணம்.இனி கட்டுரை எழுதினால் நிச்சயம் விரிவாக எழுதுகிறேன்.தங்களின் வருகைக்கு நன்றி

      Delete
  5. Replies
    1. தங்களின் வருகைக்கு நன்றி

      Delete
  6. இது எனக்கு அவுட் ஆஃப் சப்ஜக்ட். போயிட்டு அப்பாலிக்கா வரேன்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கு நன்றி

      Delete
  7. good .
    Eniya vaalththu....
    wellcome to my web

    Vetha.Elangathilakam.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கு நன்றி

      Delete
  8. ரமணி ஐயா கூறுவதுபோல் இன்னும் கொஞ்சம் விரிவாய் எழுதியிருக்கலாம். நன்றி ஐயா

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் இனி சிறப்பாய் எழுதுகிறேன்தங்களின் வருகைக்கு நன்றி

      Delete
  9. இன்றைய சலூன்கள் நிறைய மாறிவிட்டன!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கு நன்றி

      Delete
  10. நிறையவே மாற்றங்கள் இங்கே... கொஞ்சம் விரிவாக எழுதி இருக்கலாம்.... என எனக்கும் தோன்றியது.

    ReplyDelete
  11. நகரங்களில் சலூன்களில் யாரும் பேசுவதே இல்லை. தனது முறைக்காகத் தவிப்புடன் காத்திருப்பதோடு சரி!

    //மாநிலத்திற்கு ஒருவராவது ஏதேனும் சிக்கலில் மாட்டிச் சீரழிவது இப்போதெல்லாம் வாடிக்கையாகி விட்டது எனச் சொல்லியது...//

    இப்படிப் பொதுவாகச் சொல்லாமல் எதில், எதைப் பற்றி என்று சொல்லியிருக்கலாம்! :))

    ReplyDelete
  12. Confused mandaiya

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more