பருவம் மாறிய மழையினாலே.....
பருவம் மாறிய மழையினாலே பசுமை வயலும் மாறுது பருவ மழைப் பொய்த்ததாலே பயிரும் கருகி வாடுது நீர்நிலைகள் எங்கும் நீரின்றி நீரோட்டம் குறைந்தே போகுது நிலத்தின் தன்மை மாறியே நீர்குளமும் காய்ந்தே பொய்க்குது செடிகொடிகள் காய்வதாலே சிறுபூச்சியும் மடிந்துபோகுது சின்னஞ்சிறு உணவைத் தின்னும் சினம்கொண்டே பாம்பும் அலையுது வனங்கள் எங்கும் வறட்சியாகி வனவிலங்கும் மடிந்தே போகுது வானத்திலே ஓட்டை விழுந்து வானிலையும் மாறிப்போகுது சூரியனின் கண் சிவந்தால் சூழ்நிலைகள் மாறிப்போகுமே சுடு கதிர்கள் பட்டதாலே சூழும் மரணம் உறுதியாகுமே மனிதன் வாழ மரமும் செழிக்க மழையும் பொழிய வனமும் செழிக்க உணவை மீண்டும் உறுதி செய்ய உழைக்க வேண்டும் மழையே பொழிய இதைக்கண்டே இனியேனும் மக்கள் இயற்கை வளத்தைக் காக்க இனமே தழைக்க இனியேனும் இயன்ற உதவி செய்யலாமே