பணத்தை மதிக்க மாட்டேன்....
பணமும் தேவை யானாலும்
பணத்தை மதிக்க மாட்டேன்
பணத்தாசை இல்லா நானும்
பணத்தால் அடிமை ஆகேன்
இனிமைப் பேசத் தயங்கேன்
இன்முகம் காட்ட மறவேன்
இழித்தே எளிதில் பேசேன்
இறைவனை அதற்க்காய் தேடேன்
நல்லோரை வணங்கி மகிழ்வேன்
நாளும் சென்றுப் பார்ப்பேன்
நலிந்தோரின் வாழ்க்கைச் சிறக்க
நல்லதை சொல்லியே வருவேன்
பொல்லாதோர் நட்பை மதியேன்
பொய்யாக எதையும் சொல்லேன்
புகழுக்கு அடிமை ஆகமாட்டேன்
புரிந்தோரைக் கைவிட மாட்டேன்
உள்ளத்தில் நட்பை வைப்பேன்
உண்மையில் அன்பைப் பகிர்வேன்
உரிமையாய் குறைகளைச் சொல்லி
உண்மை நட்பை வளர்ப்பேன்
````````````கவியாழி```````````
பணத்தை மதிக்க மாட்டேன்
பணத்தாசை இல்லா நானும்
பணத்தால் அடிமை ஆகேன்
இனிமைப் பேசத் தயங்கேன்
இன்முகம் காட்ட மறவேன்
இழித்தே எளிதில் பேசேன்
இறைவனை அதற்க்காய் தேடேன்
நல்லோரை வணங்கி மகிழ்வேன்
நாளும் சென்றுப் பார்ப்பேன்
நலிந்தோரின் வாழ்க்கைச் சிறக்க
நல்லதை சொல்லியே வருவேன்
பொல்லாதோர் நட்பை மதியேன்
பொய்யாக எதையும் சொல்லேன்
புகழுக்கு அடிமை ஆகமாட்டேன்
புரிந்தோரைக் கைவிட மாட்டேன்
உள்ளத்தில் நட்பை வைப்பேன்
உண்மையில் அன்பைப் பகிர்வேன்
உரிமையாய் குறைகளைச் சொல்லி
உண்மை நட்பை வளர்ப்பேன்
````````````கவியாழி```````````
உள்ளத்தில் நட்பை வைப்பேன்
ReplyDeleteஉண்மையில் அன்பைப் பகிர்வேன்
உரிமையாய் குறைகளைச் சொல்லி
உண்மை நட்பை வளர்ப்பேன்
உன்னத வரிக்ள்........
தங்களின் வருகைக்கு நன்றி
Deleteஅழகிய கவிதை.
ReplyDeleteபாராட்டுகள்.
அன்பு நட்பு மரியாதை... இவைகள் தான் கடைசியில் எம்மைச் சேரும் இவற்றுக்கு முன் பணமெல்லாம் தூசு
ReplyDeleteநல்ல கவிதை
எல்லோரும் பின்பற்றவேண்டிய நெறிகள் ... உங்களின் தன்னிலை விளக்கம் அருமை !
ReplyDeleteதமிழ் மணத்தில் பதிவிட ,ஒட்டு போட முடியலே ,என்னாச்சு ?
தங்களின் வருகைக்கு நன்றி
Deleteநல்ல கவிதை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஐயா
நல்ல கருத்துள்ள கவிதை வடித்த விதம் அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களின் வருகைக்கு நன்றி
Deleteவணக்கம் சகோதரரே..
ReplyDelete//உள்ளத்தில் நட்பை வைப்பேன்
உண்மையில் அன்பைப் பகிர்வேன்
உரிமையாய் குறைகளைச் சொல்லி
உண்மை நட்பை வளர்ப்பேன்// இது தான் உண்மையான நட்பு.
வரிகள் அனைத்தும் வழக்கம் போல் அருமை. தொடருங்கள் பகிர்வுக்கு நன்றி.
நல்ல உறுதிமொழிகள்.
ReplyDeleteதங்களின் வருகைக்கு நன்றி
Deleteசிறந்த கவிதை
ReplyDeleteதன்னிலை முன்னிறுத்தி
மற்றவரை வழிநடத்தும் பாங்கு சிறப்பு
தங்களின் வருகைக்கு நன்றி
Deleteஉள்ளத்தில் நட்பை வைப்பேன்
ReplyDeleteஉண்மையில் அன்பைப் பகிர்வேன்
உரிமையாய் குறைகளைச் சொல்லி
உண்மை நட்பை வளர்ப்பேன்//
நட்பை வளர்க்கும் கவிதை அருமை.
நட்பை வளர்க்கும் கவிதை அருமை.
ReplyDeleteதங்களின் வருகைக்கு நன்றி
Deleteநன்நெறிகளை எடுத்துச்சொல்லும் கவிதை அருமை.
ReplyDeleteநாளும் சென்று நல்லோரை காண சொல்லும் கவிதை
ReplyDeleteமறந்து போய்விட்ட விழுமியங்களை நினைவூட்டும் கவிதை..