தெய்வங்கள்

தெய்வங்கள்

பருவம் மாறிய மழையினாலே.....

பருவம் மாறிய மழையினாலே
பசுமை வயலும் மாறுது
பருவ மழைப் பொய்த்ததாலே
பயிரும்  கருகி வாடுது

நீர்நிலைகள் எங்கும் நீரின்றி
நீரோட்டம் குறைந்தே போகுது
நிலத்தின் தன்மை மாறியே
நீர்குளமும் காய்ந்தே பொய்க்குது

செடிகொடிகள் காய்வதாலே
சிறுபூச்சியும்  மடிந்துபோகுது
சின்னஞ்சிறு உணவைத் தின்னும்
சினம்கொண்டே பாம்பும் அலையுது

வனங்கள் எங்கும்  வறட்சியாகி
வனவிலங்கும் மடிந்தே போகுது
வானத்திலே ஓட்டை விழுந்து
வானிலையும் மாறிப்போகுது

சூரியனின் கண் சிவந்தால்
சூழ்நிலைகள் மாறிப்போகுமே
சுடு கதிர்கள் பட்டதாலே
சூழும் மரணம் உறுதியாகுமே

மனிதன் வாழ மரமும் செழிக்க
மழையும் பொழிய  வனமும் செழிக்க
உணவை  மீண்டும் உறுதி செய்ய
உழைக்க வேண்டும் மழையே பொழிய

இதைக்கண்டே இனியேனும் மக்கள்
இயற்கை வளத்தைக் காக்க
இனமே தழைக்க  இனியேனும்
இயன்ற உதவி செய்யலாமே

Comments

  1. ஹ்ம்ம்... சரியாக சொன்னீர்கள் ஐயா... இயற்க்கையை காக்க தவறியதால் எதிர் கொள்ளும் இன்னல்கள் தான் எத்தனை எத்தனை

    ReplyDelete
  2. You are right sir. People must do their best to preserve nature

    ReplyDelete
  3. அனைவரும் உணர வேண்டிய கருத்துக்கள் ஐயா...

    ReplyDelete
  4. இயற்கை வளங்களை வளர்க்காவிடினும் பரவாயில்லை..
    அழிக்காமல் இருப்பதே சால சிறந்தது....

    ReplyDelete
  5. வணக்கம்
    ஐயா

    நல்ல விழிப்புணர்வுக்கருத்துள்ள கவிதை அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. மரம் வளர்ப்போம்னு சொன்னாலே ஒரு மாதிரியாக பார்க்கிறவர்கள் இருக்கிறார்கள் - மரம் நடுவோம் வரும் தலைமுறைகளை காப்போம் மழை பெறுவோம்.

    சூப்பர் அண்ணே....!

    ReplyDelete
  7. பாடம் சொல்லும் பாடல்...
    நல்ல தமிழாசிரியர்கள் வகுப்பில் பயன்படுத்துவார்கள் ...

    அருமை...

    ReplyDelete
  8. அருமையான விழிப்புணர்வுக் கவிதை ஐயா....
    வாழ்த்துக்கள்...
    தொடர்ந்து கவி தாருங்கள்...
    நாங்கள் பருகிச் சுவைக்கிறோம்...

    ReplyDelete
  9. உண்மைதான். ஐப்பசியின் அடைமழை கூட கார்த்திகையில்தான் 'வரட்டுமா' என்கிறது! தமிழ்நாடு வறட்சி மாநிலம் என்ற நிலை நோக்கிப் போய்க்கொண்டிருப்பதாகச் செய்தித் தாள்களில் படித்தேன்.

    ReplyDelete
  10. இப்போதெல்லாம் அடிக்கடி இயற்கையைப் பற்றி எழுத ஆரம்பித்துவிட்டீர்களே! ஏதாவது விசேஷமான காரணம் உண்டா? (நான் இருக்கும் குடியிருப்புப் பகுதியிலும் இப்படித்தான் மழை வரட்டுமா வேண்டாமா என்று கேட்கிறது...!)

    ReplyDelete
  11. இயற்கை வளத்தைக் காக்க
    இயன்ற உதவி செய்வோம்.
    Eniya vaalththu.
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
  12. இயற்கையை பேணுவோம்.

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more