நட்பை நானும் மறக்கவில்லை
  பணத்தை நானும் மதிப்பதில்லை-அதனால்  பணமும் என்னிடம் தங்குவதில்லை   தப்பாக நட்பை சொன்னதில்லை-இன்றும்  தவறாக யாரிடமும் பழகுவதில்லை   தோல்வியின் முகத்தை ரசித்ததுண்டு-அங்கே  தோழனின் நட்பை கண்டதில்லை   விடியும்வரை நான் காத்திருந்து -விளக்கை  விரைந்தும் அணைத்த தில்லை   துணையாய் நானும் இருந்ததுண்டு-அன்பாய்  துணிந்து நெருங்கி வந்ததுண்டு  நன்றி மறந்து வாழவில்லை-அதையும்  நானும் மறுத்துப் பேசவில்லை   கொள்கை மறந்து நினைவில்லை-என்றும்  கோழையாக நானும் விரும்பவில்லை   இத்தனை தூரம் வருவதற்கு-நட்பே  இணைத்து வந்ததை மறக்கவில்லை     (கவியாழி)   
