தெய்வங்கள்

தெய்வங்கள்

விரும்பி உன்னை முத்தமிட...

நண்பரையே இன்று காணவில்லை
நாளும் கடந்து போகவில்லை
எந்நிலையை எடுத்துச் சொல்ல -அவரன்றி
எவரிடமும் மனது இல்லை

பொன்பொருளைக் கேட்டதில்லை
பெரும் தொகையும் தருவதில்லை
என்னிடமும் கிடைப்பதற்கு வழியுமில்லை-அவரும்
எனக்கும் சுமையாய் இருந்ததில்லை

இரவிலின்று தூங்கவில்லை
இன்று மனதில் மகிழ்ச்சியில்லை
என்னவென்று புரியவில்லை -எப்படியோ
என்னிடம் அமைதி இல்லை

திரும்பி வரும் நேரத்தை நான்
திசையெங்கும் பார்த்திருக்கிறேன்
தெருவோரம் நின்று நானும்-உனக்காய்
தேடிவந்து  தவமிருக்கிறேன்

Comments

  1. ரசிக்க வைக்கும் நட்பு வரிகள் ஐயா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நட்பின் ஆழம் நல்ல வெளிப்பாடு!! அதை உணர முடிகின்றது!! அருமை! வாழ்த்துக்கள்! கவியாழி!!

    ReplyDelete
  3. நட்பின் ஆழத்தை வெளிப்படுத்திய கவிதை அருமை.

    ReplyDelete
  4. சிறப்பான வரிகள்..

    ReplyDelete
  5. நட்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்....

    ReplyDelete
  6. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

252,205

பதிவுகள் இதுவரை

Show more