தெய்வங்கள்

தெய்வங்கள்

நட்பை நானும் மறக்கவில்லை

பணத்தை நானும் மதிப்பதில்லை-அதனால்
பணமும் என்னிடம் தங்குவதில்லை

தப்பாக நட்பை சொன்னதில்லை-இன்றும்
தவறாக யாரிடமும் பழகுவதில்லை

தோல்வியின் முகத்தை ரசித்ததுண்டு-அங்கே
தோழனின் நட்பை கண்டதில்லை

விடியும்வரை நான் காத்திருந்து -விளக்கை
விரைந்தும் அணைத்த தில்லை

துணையாய் நானும் இருந்ததுண்டு-அன்பாய்
துணிந்து நெருங்கி வந்ததுண்டு

நன்றி மறந்து வாழவில்லை-அதையும்
நானும் மறுத்துப் பேசவில்லை

கொள்கை மறந்து நினைவில்லை-என்றும்
கோழையாக நானும் விரும்பவில்லை

இத்தனை தூரம் வருவதற்கு-நட்பே
இணைத்து வந்ததை மறக்கவில்லை

(கவியாழி)

Comments

  1. நன்று......

    பாராட்டுகள்.

    ReplyDelete
  2. என்றும் தொடரும்... வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  3. நல்ல கவிதை

    நட்பு
    வாழ்வின்
    வசந்தம்

    தொடர்க

    ReplyDelete
  4. நல்ல கவிதை

    நட்பு
    வாழ்வின்
    வசந்தம்

    தொடர்க

    ReplyDelete
  5. மிகவும் ரசித்தேன்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. வணக்கம்
    ஐயா.

    கவிதையின் வரிகள் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. இனிய நட்புக்கள் இனிதே தொடர வாழ்த்துக்கள் சகோதரா .த .ம.4

    ReplyDelete
  8. நட்பின் பெருந்தக்க யாவுள
    வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  9. 'கொள்கை மறந்து நினைவில்லை-என்றும்
    கோழையாக நானும் விரும்பவில்லை' என்னும வரிகளை ரசித்தேன். அழகு.

    ReplyDelete
  10. நட்பு உறவுப்பட்டியலில் இல்லை ஆனால் உள்ளத்துப்பட்டியலில் நட்புக்கே முதலிடம்.உங்கள் கவிதை வரிகள் நன்று.

    ReplyDelete
  11. வணக்கம் நண்பர்களே

    உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்

    ReplyDelete
  12. "பணத்தை நானும் மதிப்பதில்லை-அதனால்
    பணமும் என்னிடம் தங்குவதில்லை" என்பதில்
    நானும் உடன்படுகிறேன்.
    நட்பை நானும் மறக்கவில்லை - அதை
    என்னால் மறக்கவும் இயலாதே!
    தங்கள் சிறந்த பதிவை வரவேற்கிறேன்

    ReplyDelete
  13. நல்ல கவிதை

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்