Showing posts with label பதிவர்கள்/சந்திப்பு/மகிழ்ச்சி. Show all posts
Showing posts with label பதிவர்கள்/சந்திப்பு/மகிழ்ச்சி. Show all posts

Tuesday, 26 November 2013

திருவாளர்.எஸ்.ரமணி .அவர்களின் சென்னை விஜயம்

திருவாளர்.எஸ்.ரமணி .அவர்களின் சென்னை  விஜயம் பற்றி திருமிகு.செல்லப்பா அவர்களின் விருப்பத்திற்கிணங்க நான் அவசியம் தெரிவித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.

எனக்கு வியாழன் காலை பதினோரு மணியளவில் அலைபேசிச் சிணுங்கியது.நான் சென்னை வந்து கொண்டிருக்கிறேன் நீங்கள் முடிந்தால் மாம்பலம் ரயில் நிலையத்திற்கு வாருங்கள் என்று  அன்பு கட்டளையிட்டார்
.( பெங்களூரில் இருந்தபோதே   சென்னை வருவது பற்றி சொல்லி இருந்தார்)

திரு.ரமணி அவர்கள் சென்னை வந்தால்  சொல்லுங்களேன் என்று திரு.செல்லப்பா அவர்களும் சொல்லி வைத்திருந்ததால் அவரிடம் தகவல் சொன்னேன்.அவர் உடனே ஐம்பது கிலோமீட்டர் தொலைவிலிருந்தாலும் சுமார் இரண்டு மணிக்கே மாம்பலம் ரயில் நிலையம் வந்துவிட்டார். இருவரும் அருகிலுள்ள ஏதாவதொரு ஹோட்டல் சென்று மதிய உணவை அவரோடு உண்ணலாமே என்று சொன்னார்.

சரியாக இரண்டுமணி முப்பது நிமிட நேரத்தில் திரு.ரமணி அவர்களும் வந்துவிட்டார்.மூவரும் மேற்கு மாம்பலத்திலுள்ள டாட்டா உடுப்பி ஓட்டலில்  (அப்போதுதான் ரமணி அவர்களைப் பார்த்ததும் ஒரு நடுத்தர வயது மங்கை ஆச்சரியப்படுத்தி விட்டார்.) உணவருந்தியப்பின் திருமிகு.புலவர்.ராமாநுசம்  அவரது  வீட்டை அடைந்தோம். புலவர் அய்யாவுக்கு ஆச்சரியம் என்ன இப்படி அதிர்ச்சியைக் கொடுத்துவிட்டீர்கள்  என்று மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.


சிறிது நேரம் பேசிக்கொண்டிருத்தப்பின் எனக்கு அவசர அழைப்பு வந்ததால் நான் வெளியில் சென்று விட்டேன் .அய்யாக்கள் மூவரும் உரையாடி மகிழ்ந்தார்கள்..பின்பு மாலையில் அங்கிருந்து கிளம்பி விட்டோம்.அடுத்து திரு.பாலகணேஷ்  அவர்களையும் பார்க்க வேண்டுமென்றார்

பின்னர் எனது வீட்டில் கணேஷ் அவர்களின் வருகைக்காக காத்திருந்து கணேஷ் வந்ததும் மூவரும் சற்று பேசிக்கொண்டிருந்துவிட்டு மூவரும் தனித்தனியே சென்றது  இப்போதுதான் சொல்ல முடிந்தது.

தமிழ்க் குழும நண்பர்களே  நீங்களும் சென்னை வந்தால்  இங்குள்ள பதிவர்களிடம் தகவல் தெரிவித்தால் இதுபோல  இன்னும் சில பதிவர் நண்பர்களையும் பேசி மகிழலாம்.

வாருங்கள் சென்னைக்கு............


.......கவியாழி.......
Tuesday, 16 July 2013

காதலுக்காய் கடிதம் எழுதி....


வீட்டுப் பாடம் படித்தெழுத
விடியற்காலை எனக்குப் பிடிக்கும்
விடிஞ்சதுமே நீண்ட நேரம்
வீசும் காற்றும் பிடிக்கும்

தாண்டிஓடி ஆடப் பிடிக்கும்
தைரியமாய் மரத்திலேற பிடிக்கும்
சைக்கி லோட்டப் பிடிக்கும்
சடுகுடு ஆடவும் பிடிக்கும்

மரத்தின் உச்சிஏறி நின்று
அங்கிருந்து குதிக்கப் பிடிக்கும்
ஒற்றுமையாய் நண்பர்களுடன்
ஊர்முழுக்கச் சுற்றப்பிடிக்கும்

சீக்கிரமேப் பள்ளிச் சென்று
சேர்ந்துப் பழகப் பிடிக்கும்
சிணுங்கி அடிக்கும் அவளழகை
சற்றுத்தள்ளி ரசிக்கப் பிடிக்கும்

கற்பதனைக் காத்து நிற்கும்
கன்னியரும் எனக்குப் பிடிக்கும்
காதலுக்காய் கடிதம் எழுதி
கண்டவுடன் கிழிக்கப் பிடிக்கும்

இப்படித்தான் இமைமையை கழிந்ததாய்
இன்றுதான் எனக்குப் புரிந்தது
தப்பதெவும் செய்யாமல் இருந்ததால்
நட்பதுவே நல்லவனாய் மாற்றியதுWednesday, 5 June 2013

மகிழ்வான தருணங்கள் --பதிவர்கள் சந்திப்பு


     இன்று 05.06.2013  மாலை 5.00 மணிக்கு புலவர் ஐயாவையும் மற்றும் பிற நண்பர்களையும் காண வந்திருந்த அருமைச் சகோதரி மஞ்சுபாஷினி சம்பத்குமார் அவர்கள் புலவரைய்யா வீட்டிற்க்கு வந்திருந்தார்.அய்யாவின் அவர்களின் விருப்பப்படி நாங்கள் அய்யா வீட்டிற்கு சென்றிருந்தோம்.
எல்லோரையும் அய்யாவின் இளையமகள் சித்ரா அவர்கள் உபசரித்து வரவேற்றார். அதன்பின் நாங்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக உரையாடி மகிழ்ந்த தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப் படங்கள்

படத்தில் முதலில் நான். புலவர்.ரமாநுசம் அய்யா.பாலகணேஷ்,மதுமதி.இபான்.சசிகலா சங்கர்
மஞ்சுபாஷினி


நான்(கவியாழி),(மின்னல் வரிகள் )பாலகணேஷ்,புலவர் அய்யா,
(தென்றல் )சசிகலா,(கதம்ப உணர்வுகள்.)மஞ்சுபாஷினி,மதுமதி

புலவர் அய்யாவுடன் சசிகலாவும்,மஞ்சுபாஷினியும் மகிழ்ச்சியுடன். தனியாக எடுத்துக் கொண்ட  புகைப்படம்.

  ஏறக்குறைய இரண்டு மணி நேரம் எல்லோரும் மகிழ்ச்சியாக சிரித்துச் சந்தோசமாய் பேசிக் கொண்டிருந்தது நிச்சயம் எல்லோருக்கும் புத்துணர்ச்சியும் மகிழ்ச்சியாய் இருந்தது. மறக்க முடியாத நிமிடங்கள் மகிழ்ச்சியான தருணங்கள்