காதலுக்காய் கடிதம் எழுதி....
வீட்டுப் பாடம் படித்தெழுத
விடியற்காலை எனக்குப் பிடிக்கும்
விடிஞ்சதுமே நீண்ட நேரம்
வீசும் காற்றும் பிடிக்கும்
தாண்டிஓடி ஆடப் பிடிக்கும்
தைரியமாய் மரத்திலேற பிடிக்கும்
சைக்கி லோட்டப் பிடிக்கும்
சடுகுடு ஆடவும் பிடிக்கும்
மரத்தின் உச்சிஏறி நின்று
அங்கிருந்து குதிக்கப் பிடிக்கும்
ஒற்றுமையாய் நண்பர்களுடன்
ஊர்முழுக்கச் சுற்றப்பிடிக்கும்
சீக்கிரமேப் பள்ளிச் சென்று
சேர்ந்துப் பழகப் பிடிக்கும்
சிணுங்கி அடிக்கும் அவளழகை
சற்றுத்தள்ளி ரசிக்கப் பிடிக்கும்
கற்பதனைக் காத்து நிற்கும்
கன்னியரும் எனக்குப் பிடிக்கும்
காதலுக்காய் கடிதம் எழுதி
கண்டவுடன் கிழிக்கப் பிடிக்கும்
இப்படித்தான் இமைமையை கழிந்ததாய்
இன்றுதான் எனக்குப் புரிந்தது
தப்பதெவும் செய்யாமல் இருந்ததால்
நட்பதுவே நல்லவனாய் மாற்றியது
சிணுங்கி அடிக்கும் பிடித்தவை உட்பட எல்லாம் ரசிக்க வைத்தவை... முடித்ததும் அருமை...
ReplyDeleteவாழ்த்துக்கள் ஐயா...
எப்போதும் தொடர்ந்துவரும் தப்பாத நண்பர் தனபாலனுக்கு நன்றி
Deleteகலக்குறீங்க ஐயா.... த.ம.3
ReplyDeleteஇதெல்லாம் உங்களமாதிரி ஸ்கூல் பையனாய் இருந்தபோது.
Deleteபிடித்தவை பற்றிய வரிகள் இரசிக்க வைத்தன. இரசித்தேன் . வாழ்த்துகள் ஐயா !!
ReplyDeleteவாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க
Deleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
Deleteஎல்லாம் சரி, புளியம்பழம், கொடிக்காய்ப்புளி, கொய்யாக்காய் (காய்தான் சுவை) எல்லாம் இன்னொருவர் தோட்டத்தில் திருடி சாப்பிட்டதில்லையா ஐயா? அதையெல்லாம் விட்டுவிட்டீங்களே? :)
ReplyDeleteபழசை எல்லாம் நெனச்சு பெருமூச்சுவிட வச்சுட்டீங்க! :(
இதெல்லாம் சும்மா விளையாட்டுக்கு.மத்ததெல்லாம்அடுத்தப் பகுதியில் வரும்
Deleteயவனப் பருவம் எப்போதும் இனிமையானது.
ReplyDeleteஆமாமா அனுபவிக்க வேண்டிய வயதில் காதல் கடிதம் இன்னும் எழுதித் தரச் சொன்னா எப்படி?
Deleteயவனப் பருவம் எப்போதும் இனிமையானது.
ReplyDeleteஎடுத்துச் சொல்லுங்க ...
Deleteஇளமைக்கால நினைவுகளில் பிடித்தவை அருமை.
ReplyDeleteஇன்னும் சொல்ல எத்தனையோ இருக்கு ஆனாலும் இந்த நிகழ்வுகளும் இனிமையானவை
Deleteபடிக்கப் படிக்க மிகவும் பிடித்தது பிடித்ததைச் சொன்னவிதம் வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க
Deletetha, ma 5
ReplyDeleteசிணுங்கி அடிக்கும் அவளழகை
ReplyDeleteசற்றுத்தள்ளி ரசிக்கப் பிடிக்கும்...
அழகு...
த.ம: 7
உண்மைதானே .பள்ளி நாட்களில் புரியாமல் செய்யும் சேட்டைகளில் ஒன்று
Deleteசிணுங்கி அடிக்கும் அவளழகைப் பற்றியும், அவளுக்காக நீங்கள் எழுதி (கிழித்த) கடிதத்தையும் போட்டிக்கு அனுப்புங்களேன் - புதிதாக எழுதி!
ReplyDeleteஇப்படித்தான் 'இளமையை' என்று இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.
நல்ல மலரும் நினைவுகள்!
இளையோருக்கு வழிவிட வேண்டுமல்லாவா? அதனால்தான் விட்டுக் கொடுக்கிறேன்.
Deleteஇளமைக்கால நினைவுகள் சுகம்
ReplyDeleteஇளமையில் எல்லோருக்குமே எல்லா நிகழ்வுகளும் சுகமானதுதான்
Delete
ReplyDeleteவணக்கம்!
தமிழ்மணம் 9
இளமை இனிக்க இயற்றிய பாட்டு
வளமை நிறைந்ததென வாழ்த்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்கயா
Deleteபிடிக்கும் பிடிக்குமே பிடித்த யாவுமே
ReplyDeleteபடிக்கும் நாட்களில் துடித்த நினைவுமே...
மிகவும் அருமையாக நினைவுகளை சுற்றவிட்டீர்கள்!
இளமை இனிமையானதே!
நினைத்து ரசித்திடவேண்டியவைதான்!
வாழ்த்துக்கள் சகோ!
காதலுக்காய் கடிதம் எழுதி
ReplyDeleteகண்டவுடன் கிழிக்கப் பிடிக்கும்//
இந்த கிறுக்கு எனக்கும் இருந்தது, எத்தனை பேப்பர் கிழித்திருப்பேன்.
இளமையை அருமையாக சொல்லி விட்டீர்கள் அண்ணே....!
எல்லோருக்குமே இருந்திருக்கும் உங்களைப்போல என்னைப்போல உண்மையைச் சொல்லவார் எவரோ?
Deleteஇளமையை நினைவு கூர்ந்த விதம் அருமை.
ReplyDeleteஉண்மைதாங்க .அந்த காலம் அப்படி உங்ககாலம்தான் உங்களுக்கே தெரியுமே
Deleteகண்ணதாசன் சார் ரொம்ப நல்லவரு. கிழிச்சு போட்ட கடித்ததை எடுத்து விடுங்க சார்
ReplyDeleteஇன்னும் எத்தனையோ இருக்கு எனக்கு அன்று வந்த கிறுக்கு
Deleteபிடித்தவை அருமை.
ReplyDeleteவருகைக்கு நன்றிங்க
Delete