இணையத்தால் இணைந்தோம் மகிழ்ந்தோம்-2
. இரண்டாவது நபராக திரு.துளசிதரன் அவர்களைத் தொடர்புகொண்டு பேசியபோது ஓ..மீசைக்கார நண்பரா என்று கேள்விகேட்டுவிட்டு அவரே தொடர்ந்து நிச்சயம் நான் உங்களைச் சந்திக்க வேண்டும்உங்களை எங்கு எப்படி எப்போது காண்பது என்று ஆசிரியருக்கே உரித்தான கேள்விகளால் மகிழ்வோடு கேட்டார்.நானும் திங்கட்கிழமை வந்து அன்றிரவே சென்னைத் திரும்ப இருக்கிறேன் என்றதும் ஏன் இன்னொருநாள் தள்ளிபோட முடியாதா என்று திரு.தேவதாஸ் அவர்களைப் போலவே கேட்டார். நான் என் நிலையைச் சொல்லி அவசர வேலையாக வந்த காரணத்தினால் இப்போது முடியாது மற்றொருநாள் வருகிறேன் பிறகு பார்க்கலாமே என்றதும் உடனே இல்லை இல்லை நண்பரே உங்களை நான் எப்படியும் பார்த்துவிட வேண்டும் நான் பணி செய்யும் இடம் பாலக்காடு என்றும் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிசெய்வதாகவும் இங்கிருந்து 180 கிலோ மீட்டர் தள்ளி எனது வீடு உள்ளதென்றும் திங்கள் வந்து வெள்ளியன்று வீடு திரும்புவேன் என்றும் சொல்லியதுடன் இன்றிரவு 10.30 மணிக்கு உங்களது தொடர் வண்டி பாலக்காடு வரும் அப்போது உங்களைச் சந்திக்க முடியுமா அல்லது தூங்கி விடுவீர்களா என்றார்."கரும்புதின்னக் கூலியா நண்பரை சந்திக்க சிர