தெய்வங்கள்

தெய்வங்கள்

இணையத்தால் இணைந்தோம் மகிழ்ந்தோம்

          நான் அவசர வேலையாக கேரளாவிலுள்ள  கொச்சின் நகருக்கு செல்வதாய் இருந்தேன்.நான் செல்லும் எல்லா ஊர்களிலும் ஏதாவதொரு இணைய நண்பர்களை சந்திக்க விரும்புவது வழக்கம் அப்படி செல்லும் முன் இணையத்தின் இணையில்லாத தவிர்க்க இயலாத அனைவரும் அறிந்த நண்பர் திரு.திண்டுக்கல்.தனபாலனிடம் கேரளாவில்  இணைய நண்பர்கள் உள்ளனரா என்று ஒரு நாள் முன்புதான் கேட்டேன்.மாலை என்னை அழையுங்களேன் என்று  சொன்னார் மாலையில் அவர் இரண்டு நண்பர்களின் கைப்பேசி எண்களைத் தந்து நீங்களே பேசிவிடுங்கள் என்றார்.

        23.03.2014 அன்று  மாலை நான் திரு.தேவதாஸ் அவர்களை தொடர்பு கொண்டபோது மகிழ்ச்சியுடன் என்னை நினைவு கூர்ந்து  எனது தளத்துக்கு வந்து அனைத்தையும் படிப்பேன் என்றும் மற்ற இணைய நண்பர்களைப் பற்றியும் விசாரித்தார்..அப்போது இன்று இரவு புறப்பட்டு நாளைக் காலை எர்ணாக்குளம் வருகிறேன், நான் பயணிக்க ஒரு வாடகை மகிழுந்து (கார்) வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தேன் உடனே இன்னும் சிறிது நேரத்தில் தொடர்பு கொள்கிறேன் என்று சொன்னபடியே உங்களுக்கு வாடகைக் கார் பேசிவிட்டேன் என்றார்.மேலும் நானே நேரில் வருகிறேன் என்று மனமுவந்து சொன்னது எனக்கு மகிழ்ச்சியாய் இருந்தது.

        அடுத்த நாள்  சொன்னபடியே அதிகாலையில் அவரே தொடர்வண்டி நிலையம் (ரயில்)வந்திருந்து என்னை வரவேற்றது மிக்க மகிழ்ச்சியாய் இருந்தது. இணையம் நம்மை எப்படியெல்லாம் இணைக்கிறது என்று பெருமைபட்டுக் கொண்டேன்.பின்பு என்னுடனே பயணித்து நான் தங்குமிடம் வரை உடன் வந்து வழிகாட்டியது மகிழ்ச்சியாய் இருந்தது.மேலும் கொச்சினில் செல்ல வேண்டிய முக்கிய இடங்களைப் பற்றியும் சொன்னார்.





            நான் அவரைப்பற்றி விசாரித்தப்போது  அவர் கொச்சினில் அஞ்சனா நெய் (ANJANA GHEE) என்ற நிறுவனத்தை நடத்துவதாகவும்  அங்கேயே குடும்பத்துடன் தங்கிஇருப்பதாகவும்  கூறினார். தமிழ் உணர்வாளராகவும் பெரும்பாலான தளங்களுக்கு சென்று படிக்கும் வாசகராகவும் அதற்குமேல் நல்ல  பண்பாளராகவும் இருக்கும் நண்பர் திரு.தேவதாஸ் போன்ற நண்பர்கள்
இணையத்தில் மூலமாக கிடைத்ததில் நான் பெருமையடைகிறேன்.

         இணையத்தில் நாம் உலாவருவது மகிழ்ச்சியான நல்ல நிகழ்வுதான்  என்பதை எனது எனது குடும்பத்தாருக்கு சொன்னேன் அவர்களும் மகிழ்ந்தார்கள் உண்மையை உணர்ந்தார்கள்.

         நாளை இன்னொரு இணைய நண்பரைப் பற்றியும்  நெகிழ்வான சந்திப்புப் பற்றியும் சொல்கிறேன்.

(கவியாழி)

Comments

  1. வலையுலகம் நமக்கு தந்திருக்கும் நல்ல விஷயங்களில் இதுவும் ஒன்று. தெரிந்தவர் இருக்கிறார் என்று நம்பிக்கையுடன் செல்லலாம்....

    த.ம. +1

    ReplyDelete
  2. ,izஇணைய மூலமாக இணைவது என்பது தனி மகிழ்வே. தங்களின் சந்திப்பின் மூலமாக எங்களுக்கும் அறிமுகம் இணைய நண்பரின் அறிமுகம் கிடைத்தது.நன்றி.

    ReplyDelete
  3. திரு.தேவதாஸ் அவர்கள் ஓரிரு முறை தான் கைபேசியில் பேசி இருப்போம்... அதுவும் வலைத்தளம் வந்த புதிதில்...

    உங்களை விட நான் மிகவும் சந்தோசப்படுகிறேன் இப்போது...

    திரு.தேவதாஸ் அவர்களுக்கு நன்றி... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. நல்லது ஐயா, நான்கூட மூணாறு சென்றபோது முகநூல் நண்பர் ஒருவர் எந்த உதவி தேவைப்பட்டாலும் அழைக்குமாறு உள்டப்பியில் சொல்லியிருந்தார்...

    ReplyDelete


  5. நீங்க இராசியான ஆளய்யா!

    ReplyDelete
  6. தங்கள் சந்திப்பும் பகிர்வும் ஒரு நல்ல வழிகாட்டலாக இருக்கிறது.

    ReplyDelete
  7. இணையம் தந்த நல்ல விஷயங்களில் நட்பு வட்டமும் ஒன்று.. நல்லதோர் சந்திப்பு.

    ReplyDelete
  8. மிக்க மகிழ்ச்சி
    அவர் இணைய தள முகவரியையும்
    கொடுத்திருக்கலாமோ ?

    ReplyDelete
  9. வலையுலகம் பரந்து விரிந்து உதவி செய்யும் நட்புக்களை பெற்றுக்கொடுப்பது பெருமிதம் அளிக்கிறது! இனிய நண்பர் தேவதாஸ் பற்றி தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி! நன்றி!

    ReplyDelete
  10. ஆஹா ..புதிய நண்பரிடம் எங்களைப் பற்றியும் சொன்னீர்களா இல்லையா ?....:))))
    வாழ்த்துக்கள் சகோதரரே உறவுகளைத் தேடி அலையும் அன்பு உள்ளங்களுக்கு
    இந்த வலையுலகம் என்பது ஒரு வரப் பிரசாதம் தான் என்பதை உணர வைத்த
    பகிர்வுக்கும் தேடிப் பெற்ற புதிய நட்பிற்கும் .த .ம .8

    ReplyDelete
  11. வலையுலகம் அங்கே உங்களை வரவேற்றது மிக்க மகிழ்வைத் தந்திருக்கும் படிக்கும் எங்களுக்குத் தருவது போலவே.

    ReplyDelete
  12. நெகிழ்வான மகிழ்ச்சியான செய்தி உண்மையான அன்பும் நட்பும் வலை யுலகத்தில்தான் பூக்கிறது பூத்து மணம் பரப்பட்டும். வாழ்த்துக்கள்......!

    ReplyDelete
  13. அன்பர் திரு தேவதாஸ் அய்யா அவர்களுக்கு கனிவான நன்றி. நண்பர்களை இணைப்பதில் வலைப்பூவின் பங்கு பெரும் பங்கு வகிக்கின்றது . நன்றி அய்யா பகிர்விற்கு!

    ReplyDelete
  14. உங்களைப் போலவே நானும் மகிழ்கிறேன் கவியாழியாரே!
    “இணையம்” என்பது எவ்வளவு பொருத்தமான சொல் என்பதை வலைநண்பர்களைச் சந்திக்கும்போது நானும் உணர்ந்திருக்கிறேன். அடுத்த நண்பரைச் சந்திக்க ஆவலுடன்...

    ReplyDelete
  15. வலையால் கிடைக்கும் உறவுகள் நமக்கு வரப்பிரசாதம் ஐயா.

    ReplyDelete
  16. வலை உலகம் நமக்கு எத்தனை எத்தனை ந்ல்ல நண்பர்களைத் தந்திருக்கின்றது! இது கண்டிப்பாக த் தொடரப்படவேண்டிய ஒன்று நண்பரே!
    மிக்க் மகிழ்சி!

    ReplyDelete
  17. அன்பு இனிய இணைய நல்ல உள்ளங்களே வணக்கம்.
    கொச்சினில் தங்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் எப்பொழுது வேண்டுமானாலும் செய்து தரக்
    காத்திருக்கிறேன்.
    இந்த பதிவின் பின்னுாட்டத்தில் கிடைத்த வாழ்த்துக்கள் அனைத்தும்
    திரு.தனபாலன் அவர்களுக்கும்,சகோதரர் திரு.கவியாழி அவர்களுக்கே சாரும்
    இணையம் வாயிலாக திரு.கவியாழியின் நட்புக் கிடைத்தது
    எனது பேறாகக் கருதுகிறேன்.
    இணைய நண்பா்களுக்கு உதவி செய்ய எனக்கு வாய்ப்புக் கிடைத்தால்
    அதுவே நான் செய்த பாக்கியமாகும்.
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

    ReplyDelete
  18. இணையம் உண்மையிலேயே வலிமையானதுதான். நல்ல இதயங்களை இணைக்கும் அன்புச் சங்கிலிதான் இணையம். வாழ்க தேவதாஸ் அவர்களின் நட்பு!

    ReplyDelete
  19. பதிவர் நட்பு வட்டம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு போவது மகிழ்ச்சி அளிக்கும் விஷயம். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. இணையத்தின் மூலம் இணையும் நட்புக்கள் பல வழிகாட்டிகள் ஐயா!

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்