குடும்பம் சிறக்கச் செய்வீர்
மனமே மனிதனின் எதிரி மாற்றமே அவனின் நண்பன் தினமும் நல்லதை செய்தால் திடமாய் மாறும் மனிதமே கெடுதல் செய்யா மனதே கொடுக்கும் நன்மை நன்றே அடுத்தவர் மனதை வருத்தி ஆறுதல் சொல்ல வேண்டாமே துணையாய் நல்ல வார்த்தை துயரம் போக்க இயலும் துணிவு என்று நினைத்து துச்சம் கொள்ள வேண்டாமே பழிகள் செய்யா வாழ்வும் பழுதாய் போனதும் இல்லை பயந்தும் வாழ்வோர் என்றும் பெருமை பேசிய தில்லையே கொடுத்தும் உதவி செய்து கோழை யாகக வேண்டாமே கொள்கை நன்றே வகுத்து குடும்பம் சிறக்கச் செய்வீரே