குடும்பம் சிறக்கச் செய்வீர்
மனமே மனிதனின் எதிரி
மாற்றமே அவனின் நண்பன்
தினமும் நல்லதை செய்தால்
திடமாய் மாறும் மனிதமே
கெடுதல் செய்யா மனதே
கொடுக்கும் நன்மை நன்றே
அடுத்தவர் மனதை வருத்தி
ஆறுதல் சொல்ல வேண்டாமே
துணையாய் நல்ல வார்த்தை
துயரம் போக்க இயலும்
துணிவு என்று நினைத்து
துச்சம் கொள்ள வேண்டாமே
பழிகள் செய்யா வாழ்வும்
பழுதாய் போனதும் இல்லை
பயந்தும் வாழ்வோர் என்றும்
பெருமை பேசிய தில்லையே
கொடுத்தும் உதவி செய்து
கோழை யாகக வேண்டாமே
கொள்கை நன்றே வகுத்து
குடும்பம் சிறக்கச் செய்வீரே
அனைத்தும் கருத்துள்ள வரிகள்... வாழ்த்துக்கள் ஐயா...
ReplyDeleteநன்றிங்க நண்பரே.நலமோடும் வளமோடும் வாழ்க
Deleteநான் மட்டும் ஆட்சிப் பொறுப்பில் இருந்தால் இதை எட்டாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இடம் பெறச் செய்வேன் ஐயா..
ReplyDeleteஒருநாள் அப்படி நடந்தால் இந்த வார்த்தையை மறக்காதீங்க.ஆட்ட்சிப் பொறுப்புக்கு வாங்க எனக்கும் ஆதரவு தாங்க
Deleteகருத்தாழம் மிக்க வரிகள் ஐயா. பகிர்ந்தமைக்கு நன்றிகள் ஐயா.
ReplyDeleteநன்றிங்க .மனதுள் எழுத ஆதங்கத்தின் வலிகளே இப்படி எழுதச் செய்தது
Deleteநல்ல கருத்தாழம் உள்ள கவிதை.
ReplyDeleteநன்றி பகிர்விற்கு.
உங்களுக்கும் நன்றி.உளமார்ந்த நன்றி
Deleteதலைப்பும் அதற்கான விளக்கமும் அருமை
ReplyDeleteவாழ்த்துக்கள்
நன்றிங்க சார்.
Deleteஅற்புதமான கருத்துள்ள வரிகள்...
ReplyDeleteமனிதனாய் பிறக்கும் ஒவ்வொருவரும் பண்புடன் செயல்பட்டு நல்லவை செய்தாலும் கெடுதல் நடந்தாலும் அதில் இருந்து மீண்டு வரும் சக்தி மனதுக்கு கிடைக்கிறது...
மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் கண்ணதாசன்....
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி
Delete#தினமும் நல்லதை செய்தால்
ReplyDeleteதிடமாய் மாறும் மனிதமே#
நான் இன்று செய்த நல்லது ...உங்களுக்கு த .ம ஆறாவது ஓட்டு போட்டதுதான் !
நன்றிங்க பகவானே.உங்க கடாட்சம் கிடைக்கத்தானே வேண்டுகிறேன்
Deleteபகவானே தவறிழைக்க முடியுமா?
Delete"துணையாய் நல்ல வார்த்தை
ReplyDeleteதுயரம் போக்க இயலும்" என்ற அடி
என் நெஞ்சில் நிறைகிறது...
நல் வழிகாட்டல் இது.
ஆமாம் .மனம் வருந்துவோருக்கு மகிழ்ச்சியாய் சொல்லலாமே
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteபழிகள் செய்யா வாழ்வும்
ReplyDeleteபழுதாய் போனதும் இல்லை
பயந்தும் வாழ்வோர் என்றும்
பெருமை பேசிய தில்லையே
அவசியமான கருத்துக்கள் அருமை................வாழ்த்துக்கள் 6
நன்றிங்க அய்யா.
Deleteநல்ல கருத்துள்ள கவிதை.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கு நன்றி
Delete///பழிகள் செய்யா வாழ்வும்
ReplyDeleteபழுதாய் போனதும் இல்லை///
அருமையான வார்த்தைகள் பாவலரே...
நன்றிங்க அன்பரே.
Deleteகெடுதல் செய்யா மனதே
ReplyDeleteகொடுக்கும் நன்மை நன்றே
அடுத்தவர் மனதை வருத்தி
ஆறுதல் சொல்ல வேண்டாமே//
அருமையான வரிகள்.
அடுத்தவரைப் புண்படுத்திப் பேசுவதால் நன்மை யாருக்கு?
Deleteஅனைத்து வரிகளும் கருத்தாழமும், இன்றைய நடைமுறை வாழ்க்கைக்கும் துணை புரிவன. நடைமுறைகளை படைப்பில் காட்டுவதே சிறந்த படப்பாக இருக்க முடியும். அவ்வகையில் மட்டுமல்ல எவ்வகையிலும் சிகரத்தின் உச்சியில் உமது வரிகள். என்றும் அன்புடன் அ.பாண்டியன்.
ReplyDeleteதங்களின் வருகைக்கும் தருகைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
Delete