Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

காதலா? காமாமா? நட்பா?

Image
   விழியோடு மொழிபேசி விரலாலே கோலமிட்டு புரியாத  வார்த்தையாலே புதிராக சேர்ந்து பேசி பதியாத  நட்போடு பரிதவிப்பில் கலந்து இதழோடு இதழ் இரண்டுமே  சண்டைபோட்டு இனிமை போற்றி இனிமையான தருணமாக்கி முனகலும் முக்கலும் முகமிறுக்கி நக்கலும் கனி இரண்டையும் கசக்கி சுவைத்து இடையிடையே இணைந்து முடிவில்லா ஆனந்தமாய் முடிந்தவரை  நாதமாக்கி முடியாமல் முடிதிட்டு முகமிரண்டும் பார்த்தால் முடியாது  இன்னும் வேண்டும் மொழி தெரியா மௌனமாய் முடிதிட்டால் என்ன சொல்ல காதலா? காமாமா? நட்பா?..............

முதல்நாள் இரவு

Image
  இரவெல்லாம் விழித்திருந்து இமை மூடா தவமிருந்து ஊரெல்லாம் கூடிவந்து-இன்பமாய் உற்றாரின் நலம் பகிர்ந்து விளக்கு தோரணம் விடியும்வரை  எரிந்தும் நலுங்கு நாட்டியமும்-கச்சேரி நாளெல்லாம்  பெரு விருந்தாய் விடியும்முன் எழுந்து விமரிசையான சடங்குகளுடன் காலை கதிரவனை கைகூப்பி-வணங்கி மாலை மாற்றி  மகிழ்ந்தேன் தாலிகட்டி தவம் கலைத்தேன் தைரியமாய் அருகில் அமர்ந்தேன் நாளை குறித்து நல்பழங்களுடன்-சத்தான நலபாகத்துடன் விருந்து படைத்து சேலைமாற்றி சிவந்த முகத்துடன் சொம்பில் பாலுடன் நடந்தேன் மாலை அணிந்து  மங்கலமாய்-நாணமாய் ஆளை பார்த்தேன்  ஆர்வமாய் தோளை பிடித்து தொட்டதும் துவண்டு விழுந்தேன் சரிந்தேன் துணிகளை  இழந்தேன் மகிழ்ந்தேன்-மீண்டும் தொடங்கி  மீண்டும் மகிழ்ந்தேன்

மெல்ல பேசும் செல்ல கூட்டம்

Image
  துள்ளி யோடி துரத்தி பிடித்து மெல்ல வந்து பல்லை காட்டி சொல்மாய்  சிணுங்கி மெல்ல ஓடிடும் மின்னலென ஓடி மேகமாய் மறைந்திடும் பிள்ளை மொழி பேசியே பிடிசோறும் திண்ணிடும் தொல்லை என்ற வார்த்தையே மெல்ல நம்மை ஈர்திடும் இல்லையென்று சொல்லாமல் இன்பமேங்கும் தந்திடும் பிள்ளை கூட்டம் பிரச்சனைகளின் கூடாரம் இல்லை  அதுபோல் இன்பமான மழை நேரம்

சின்ன பசங்க நாங்க

Image
சிவந்த உதடும்  சிற்றிதலும் நவ அழகும் நிறைத்திருக்க தவழ்ந்து வரும் பேரழகே-கண்ணே தவம்கிடந்தேன் உன்னை காண கவலை மறந்து கண் சிமிட்டி கண்டோரையும் உடன் அழைத்து மலர்ந்து விரிந்த முல்லைபோல்-சிரித்து கவர்ந்திழுக்கும் கண்ணு குட்டிகள் தூங்கி எழுந்ததும் துள்ளிவரும் பாங்கினை  பார்த்தாலே  சிரிக்கும் ஏங்கி என்னை அள்ள துடிக்கும்- அன்போடு தூக்கியதும் முத்தம் கொடுக்கும் மழை வந்தாலே  பல் இளிக்கும் மறைந்து ஓடி முழுதும் நனையும் மறுநாள் காய்ச்சல் வந்தாலும்-கவலையின்றி மறக்காம திரும்பவும் செய்யும் குரங்கு போல சேட்டை செய்யும் கூப்பிட்டவுடன்  பயந்து நடிக்கும் விலங்கு போட்டால் வீட்டுப் பாடம்-முழுவதும் விரைவுடனே  விந்தையாக செய்திடும் வீடு பாடம் செய்ய சொன்னா விடியகாலை செய்வேன் என்று ஓடிபோகும் உட்கார்த்தே சாப்பிடும்-அம்மாவிடம் கூடி பேசிய கும்மாலத்தையும் சொல்லும்

கோவிலுக்குள்ள இருப்பது யார்?

Image
கஷ்டமென்னு சொல்லி கடவுளை பார்க்க போனேன் கடன்கார பூசாரிக்கு காசு கொடுத்தால் நோட்டை பார்தப் பின்பே தட்டை எடுக்கிறான் மொட்டை  போட்டாலும் விரட்டி  தள்ளுறான் பட்டைபோட்டவனுக்கும் பூணூல் உள்ளவனுக்கும் காணிக்கை கொடுக்காமலே கழுத்துமாலை போடுறான் கண்ணு தெரியாதா கடவுளும் கேட்காதா ஐம்பதுக்கு அரைமுழம் நூறுக்கு கழுத்து மாலை ஐநூறுக்கு  பரிவட்டம் அனைத்திலும்  லஞ்சம் ஆண்டவனே உன்னை காண அடியேனிடம் என்ன தொகை வேண்டும்? அதனாலா ஒளிந்துகொண்டாய் அவனுக்குமே அடிமை ஆகிவிட்டாய்?

ரசித்தவர்கள்