கோவிலுக்குள்ள இருப்பது யார்?
கடவுளை பார்க்க போனேன்
கடன்கார பூசாரிக்கு
காசு கொடுத்தால்
நோட்டை பார்தப் பின்பே
தட்டை எடுக்கிறான்
மொட்டை போட்டாலும்
விரட்டி தள்ளுறான்
பட்டைபோட்டவனுக்கும்
பூணூல் உள்ளவனுக்கும்
காணிக்கை கொடுக்காமலே
கழுத்துமாலை போடுறான்
கண்ணு தெரியாதா
கடவுளும் கேட்காதா
ஐம்பதுக்கு அரைமுழம்
நூறுக்கு கழுத்து மாலை
ஐநூறுக்கு பரிவட்டம்
அனைத்திலும் லஞ்சம்
ஆண்டவனே உன்னை காண
அடியேனிடம் என்ன தொகை வேண்டும்?
அதனாலா ஒளிந்துகொண்டாய்
அவனுக்குமே அடிமை ஆகிவிட்டாய்?
இறைவனைக் காணக்கூட லஞ்சம் கொடுக்க வேண்டியதை நினைத்தால் கொடுமையாகத்தான் இருக்கிறது..கவிதை சிறப்பு
ReplyDelete