Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

குடும்பம் சிறக்கச் செய்வீர்

மனமே மனிதனின் எதிரி மாற்றமே அவனின் நண்பன் தினமும் நல்லதை செய்தால் திடமாய்  மாறும் மனிதமே கெடுதல் செய்யா மனதே கொடுக்கும் நன்மை நன்றே அடுத்தவர் மனதை  வருத்தி ஆறுதல் சொல்ல வேண்டாமே துணையாய் நல்ல வார்த்தை துயரம் போக்க இயலும் துணிவு என்று நினைத்து துச்சம் கொள்ள வேண்டாமே பழிகள் செய்யா வாழ்வும் பழுதாய் போனதும் இல்லை பயந்தும் வாழ்வோர்  என்றும் பெருமை பேசிய தில்லையே கொடுத்தும் உதவி செய்து கோழை யாகக  வேண்டாமே கொள்கை நன்றே வகுத்து குடும்பம் சிறக்கச் செய்வீரே

ஏழையுமே ஏழையாய் ......

ஏழையுமே ஏழையாய்  இல்லை ஏளனமாய் சொல்ல வில்லை எழுச்சியாக  வளர்வ தில்லை ஏற்றமிகு  வாழ்க்கை யில்லை குற்றமுடன்  சொல்ல வில்லை கொள்கையிலே மாற்ற மில்லை கூடி வாழும் வாழ்கையினை கெடுத்ததாக வாழ்வ தில்லை கோழைகளாய் இருந்ததில்லை கொடுத்தவரை மறப்ப தில்லை கொடுப்பதிலே குறையுமில்லை கொடுத்தவரைக் குறைத்ததில்லை போதுமென்ற மனதே எல்லை போட்டிப் போடுவது மில்லை பொக்கிஷமாய் நல்லுறவை பேணிக்காக்க தவற வில்லை நாளைக்கான தேவையினை நாள்தோறும் நினைப்ப தில்லை நன்மையென அறிய வில்லை நாட்டுநடப்பு  தெரிவ தில்லை வேலையுமே  நாளும்  மில்லை வீட்டில் மட்டும் பஞ்சமில்லை விருந்தினரும் வந்து விட்டால் விருந்தளிக்க மறுப்ப தில்லை பேழையாக நட்பதுவை  அவன் பிரிந்து நின்று பார்த்த தில்லை பெற்றவரை விடுவ தில்லை பேணிக்காக்க தவற வில்லை

புலவர் அய்யாவின் வருகை

Image
 மதிப்பிற்குரிய புலவர் ராமநுசம் அய்யா. ஐரோப்பிய நாடுகளின் சுற்றுலா முடித்து இன்று 18.08.2013 காலை 8.30  மணிக்கு புலவர்.அய்யா மகிழ்ச்சியுடன் வீடுதிரும்பி விட்டார்  மகிழ்ச்சியை  என்னோடு பகிர்ந்து உற்சாகத்துடன் இருக்கிறார்  என்பதையும்   தெரிவித்துக் கொள்கிறேன். அய்யாவின் பிரத்யோகப்படங்கள் மற்றும் பதிவுகள் இனித்  தொடந்து அய்யாவின் தளத்தில் வெளிவரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்

நேற்று -இன்று வாழ்க்கை

 கடந்த கால வாழ்க்கைமுறை ஈரெட்டில் கல்லா கல்வி. பதினாறு வயதுக்குள் கல்வியின் அவசியத்தைப் புரிந்து  படிக்கவேண்டும் மூவெட்டில் ஆகாத்திருமணம் இருபத்திநாலு வயதிற்குள் திருமணம் செய்யவேண்டும் அல்லது அதைப்பற்றி முயற்சியும் வேண்டும் .இதற்குள்  செய்யும் திருமணம் இனிமையை  தரும் என்பதே சிறப்பு. நாலெட்டில் பெறாப்பிள்ளை முப்பத்திரெண்டு வயதிற்குள் பிள்ளைப்பேறு அடைந்திருக்க வேண்டும்  அல்லது தகுதியை நிருபிக்க வேண்டும்.அதற்குமேல் பெற்ற பிள்ளைக்கும் பெற்றோருக்கும் புரிதல் இருக்காது . ஐயெட்டில் சேராச் செல்வம் நாற்பது வயதிற்குள் தனியாக பணம் சேர்த்து வீட்டையும் கட்டி செல்வத்தையும் தேடி வைத்து விடவேண்டும். இதை பெரியோர்கள் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன் ஆனால்.... இன்றைய வாழ்க்கை முறை 1-5       குழந்தைப் பருவம் மகிழ்ச்சியானது மகிழ்வார்கள் 5-25     படிப்பு படிப்பு வேறெதுவும்  முடியாது 25-35   வேலை கிடைத்தல்,திருமணம், உழைப்பு,சொத்து சேர்த்தல்  35-40   சேமிப்பு  ,மனக்குழப்பம் 40-60 பிள்ளைகளின் வாழ்க்கைப் பற்றிய  நிம்மதியில்லாத நிலை இறுதிவரை அவர்களின் நல்வாழ்வு குறித்த

மனமே. தினமே உன் குணமே

ஆற்றின் வழியைப்போல் தினமும் அகன்றே நெளிந்து விரிந்தும் மாற்று வழியில்லா மனமே மாற்றமே உனது வாழ்க்கையா போற்றும்போது புகழ்ந்தே இருக்கிறாய் பூரிப்பால்  கனிந்தே புன்னகையாகிறாய் நேற்று நடந்ததை மறந்துவிடுகிறாய் நிம்மதியாய்  மகிழ்ச்சியில் சிரிக்கிறாய் ஏற்றம் கொண்டாலும் மகிழ்கிறாய் ஏமாந்து போனாலும் அழுகிறாய் தூற்றும்போது கோபம் கொள்கிறாய் துடித்தெழுந்தே தீயாய் எரிக்கிறாய் தோற்றதால் துவண்டு விழ்கிறாய் தோல்வியால்  துள்ளி எழுகிறாய் ஊற்றுவழி தெரிந்தும் உண்மையாய் ஒன்றும் யரியாது வாழ்கிறாய் மாற்றம் தேவையெனில் அழிக்கிறாய் மாறியதும் உடனே அமைதியாகிறாய் மக்கள் வாழவும் வழியாக்கும்நீ மனதில் நலமாய் தங்கிடு ஏய் மனமே ...... இனிமேல்  மாறிவிடு மனிதனை வாழவிடு மனதில் நிம்மதி கொடு

ரசித்தவர்கள்