தெய்வங்கள்

தெய்வங்கள்

பெண்மையின் பேரின்பம்


      
நாள்பார்த்து நல்ல நேரம் பார்த்து
நல்லோர்கள் வாழ்த்து நல் சொல்ல
பார்த்து பேசி இருவீட்டாரும்-மகிழ்ந்து
சேர்த்து வைத்த திருமணம் சிறப்பாக

தாலி கட்டியதும் தவம் ஆரம்பம்
தனியறையில் நாளும்  ஏற்படும் பூகம்பம்
தாகமென கடக்கும் முப்பதுநாளும்_ ஆசை
தாகமது மட்டும் தணியும் முடியும்!

கருவுற்றதும் கனவுகள் ஆரம்பம் அதை
கருத்தாய் கவனித்து சினம் கொள்ளாமல்
சிறிதளவும் அசைக்காமல் உருவேற்ற- உள்ளத்தில்
சீரான முகமாக்கி ரணத்தையே உணவாக்குவாள்!

அன்பையும் நற்பன்பையும் நாளும் சொல்லி
அன்னையின் தவிப்பை அன்றே சொல்லிடுவாள்
வயிட்றை தடவி வழியெல்லாம் பார்த்த- அறிவை
பயிற்றுடுவாள் மகிழ்வாள் மனமெல்லாம் பூரிப்பாள்!


பிறக்குமுன்னே பிள்ளை  செய்யும் சேட்டையை
பிறரிடம் சொல்வாள் நாளும் சிரிப்பாள்
பித்தாய் இருப்பாள் பிறப்பை கேட்பாள்- பூவே
இத்தனை நாளாய் இதற்குத்தானே என்பாள்!

நல்லோரின் நல் ஆசியுடன் பெயரை
எல்லோர் நினைவில் சொல்லி வைத்து
பல்லாண்டு வாழ்கவென வாழ்த்தி-குழந்தைக்கு
எல்லோரும் கூடி தாயை-சேயை வாழ்த்துவார்கள்

Comments

 1. தாய்மையின் பெருமை! அருமை! :-)

  ReplyDelete
  Replies
  1. உங்களின் கருத்து எனக்கு பெருமை

   Delete
 2. நன்றி நண்பரே ,நானும் இப்போது குழந்தை தான் என்னையும் வாழ்த்துங்கள்

  ReplyDelete
 3. அருமை.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஐயா,உங்களின் கருத்து எனக்கு பெருமை

   Delete
 4. நான் எழுதும் கமெண்ட்ஸ் எங்கே போய்விட்டது?

  ReplyDelete
  Replies
  1. நன்றி.இந்த பகுதியில் கருத்து சொல்ல வில்லையே?

   Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more