தெய்வங்கள்

தெய்வங்கள்

சின்ன பசங்க நாங்க
சிவந்த உதடும்  சிற்றிதலும்
நவ அழகும் நிறைத்திருக்க
தவழ்ந்து வரும் பேரழகே-கண்ணே
தவம்கிடந்தேன் உன்னை காண

கவலை மறந்து கண் சிமிட்டி
கண்டோரையும் உடன் அழைத்து
மலர்ந்து விரிந்த முல்லைபோல்-சிரித்து
கவர்ந்திழுக்கும் கண்ணு குட்டிகள்


தூங்கி எழுந்ததும் துள்ளிவரும்
பாங்கினை  பார்த்தாலே  சிரிக்கும்
ஏங்கி என்னை அள்ள துடிக்கும்- அன்போடு
தூக்கியதும் முத்தம் கொடுக்கும்

மழை வந்தாலே  பல் இளிக்கும்
மறைந்து ஓடி முழுதும் நனையும்
மறுநாள் காய்ச்சல் வந்தாலும்-கவலையின்றி
மறக்காம திரும்பவும் செய்யும்

குரங்கு போல சேட்டை செய்யும்
கூப்பிட்டவுடன்  பயந்து நடிக்கும்
விலங்கு போட்டால் வீட்டுப் பாடம்-முழுவதும்
விரைவுடனே  விந்தையாக செய்திடும்

வீடு பாடம் செய்ய சொன்னா
விடியகாலை செய்வேன் என்று
ஓடிபோகும் உட்கார்த்தே சாப்பிடும்-அம்மாவிடம்
கூடி பேசிய கும்மாலத்தையும் சொல்லும்

Comments

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more