தெய்வங்கள்

தெய்வங்கள்

மதமின்றி மனிதனாக முடியுமா


01.12.12 அன்று எழுதியதின் மறுப் பதிவு



மீண்டும் அந்தநாள் வருமா
மேகமெல்லாம் கூடி மழை தருமா
ஆற்றில்  நீர் பெருக்கெடுத்து-அருகருகே
அங்கங்கே ஏரி குளம் நிறையுமா

மீனும் தவளையும் துள்ளி விளையாடி
மீண்டும் நீரில் மகிழ்ந்து செல்லுமா
பாம்பும் தேளும் பணிந்துபோய்-அன்பாக
பார்ப்போரை வணங்கி திரும்புமா

மாடும் கன்றும் பச்சை தழையை
மீண்டும் மீண்டும் புசியுமா
ஆடு கோழி அனைத்து உயிரும்-அங்கங்கே
ஆனந்தமாய்  உணவு பெறுமா

கோள்கள் ஒன்பதும் கூடி மக்கள்
குறை தீர்க்க நாடி வருமா
கூப்பிட்டதும் கடவுளும் நமக்கு-வாழ
குறையில்லா அருள் தருமா

சுத்தமான காற்றும் சுவையான நீரும்
எத்திசையும் பசுமையான செடிகொடியும்
எழுந்தோடும் பறவை கூட்டமும்-வருமா
 எண்ணில்லாப் பூச்சி புழுவும்  காணுமா

தேன்  வண்டு திரிந்தோடி பறந்து
வானெங்கும் வாசம் வீசும் மலர்கள்
நாம்  உண்ணும காய் கனிகள்-சுத்தமாக
நாள்தோறும் கிடைக்க முடியுமா

மாண்டோர் வாழ்ந்த மகிழ்ச்சியான
மனிதநேயம் மக்களிடம் திரும்புமா
மனத்தாங்கல் இன்றி ஒற்றுமையாய்
மதமின்றி மனிதனாக முடியுமா

Comments

  1. தங்கள் கேள்விகளை மறுக்க முடியுமா ! ?

    ReplyDelete
    Replies
    1. உங்களைப்போல எல்லோரும் விரும்புவது ,மனித நேயம் மறக்க முடியுமா

      Delete
  2. மதம் பிடித்தவர்களுக்கு - மதம்பிடித்திருக்கிறது
    அதனால் அவர்களுக்கு மனிதம் பிடிப்பதில்லை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி,உண்மை மனிதம் இருந்தால் மதமும் தேவையில்லை

      Delete
  3. மனிதர் நினைத்தால் முடியும்...

    ஆனால் மதத்தை மறக்கும் மனிதர் தற்போது இல்லாமல் இருப்பது அவலமே...

    ReplyDelete
    Replies
    1. உண்மை,மனிதம் என்பதை உணர்ந்தால் நன்று
      தங்களின் வருகைக்கு நன்றி

      Delete
  4. அர்த்த முள்ள கேள்விகள். உணருவார் யாரோ ?

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி,நமக்கு அந்த கடமை உள்ளதென்று நினைக்கிறேன்

      Delete
  5. யாராக இருந்தாலும் மனிதனாக மதிக்க வேண்டும்... (முதலில் நம் மனதையும், உடல்நலத்தையும்)

    ReplyDelete
    Replies
    1. மனிதனை மதித்தால் மனிதனாக முடியும் உண்மை நண்பரே

      Delete
  6. "மதமின்றிப் " நிச்சயம்போனால்
    நிச்சயம் விலங்கான மனிதன்
    மனிதனாகிப்போவான்
    அருமையான உயர்வான சிந்தனை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மனதை மதமாக்காமல் இருந்தால் சாதி மத சண்டை வராது

      Delete
  7. மாண்டோர் வாழ்ந்த மகிழ்ச்சியான
    மனிதநேயம் மக்களிடம் திரும்புமா
    மனத்தாங்கல் இன்றி ஒற்றுமையாய்
    மதமின்றி மனிதனாக முடியுமா


    ஆஹா மிகவும் அற்புதமான வரிகள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி தொடர்ந்து படியுங்கள்

      Delete
  8. மதம் என்பது மக்களை மயக்கும் போதைபொருள்
    இதை உணர்ந்தால் மட்டுமே மனிதனாக முடியும்
    அதை உணர்வது கூட கடினம்

    ReplyDelete
    Replies
    1. மனதை மதமாக்காமல் இருந்தால் சாதி மத சண்டை வராது

      Delete
  9. மனிதநேயம் மக்களிடம் திரும்புமா
    மனத்தாங்கல் இன்றி ஒற்றுமையாய்
    மதமின்றி மனிதனாக முடியுமா

    மதசகிப்புத்தன்மை மனதில் மலர்ந்தால் சாத்தியமே ..!

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more