தெய்வங்கள்

தெய்வங்கள்

ஏனய்யா சாதி(தீ)யும் மதமும்

கோள்களில் பூமி
கொண்ட தனித்தோர்
மனித இனம்
மற்றெல்லா உயிரினம்
செடி மரம் பூச்சிகள்
செழுந்திரலான விலங்குகள்
கடல் நீர் காற்று
கணக்கிலடங்கா மலைகள்

எங்கெங்கும்  காண்பதெல்லாம்
எண்ணற்ற மதப் பற்றே
ஏழ்மைப் பசிப் பஞ்சம்
ஏற்றதாழ் விருந்தாலும்
எல்லா மக்களும்
இன்பமாய் வாழ்ந்தாலும்
ஏனய்யா சாதியும் மதமும்
என்ன அதனால் சாதித்தாய்

ஒன்றே குலமென
ஒவ்வோர் மதமும்
நன்றே சொன்னாலும்
நல்லவை போதித்தாலும்
அன்றே அனைத்தையும் மறந்து
அறிவிழியாய் மாறுவதேன்
மனிதத்தை போற்றினால்
மதமென்ன தடையா சொல்லும்

Comments

  1. மனிதத்தை போற்றினால்
    மதமென்ன தடையா சொல்லும்/

    /அசத்தலான வரிகள்
    மதம் எப்போதும் தடை செய்வதில்லை
    செய்வதெல்லாம் மதவாதிகள்தான்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஆம் நியாயம்தானே மதமோன்றும் சொல்லவில்லையே

      Delete
  2. மனிதம் போற்றும் நல்ல கவிதை!

    ReplyDelete
    Replies
    1. நன்றி நாளும் வருக நல்கவிதைப் படிக்க

      Delete
  3. // எங்கெங்கும் காண்பதெல்லாம்
    எண்ணற்ற மதப் பற்றே
    ஏழ்மைப் பசிப் பஞ்சம்
    ஏற்றதாழ் விருந்தாலும்
    எல்லா மக்களும்
    இன்பமாய் வாழ்தாலும்
    ஏனய்யா சாதியும் மதமும்
    என்ன அதனால் சாதித்தாய்//

    சாதி மதத் தீயே -என்ன
    சாதித்தாய் நீயே
    ஆதியிலே இல்லை-என்றும்
    அழியாத தொல்லை
    பாதியிலே வந்தாய் -தீராப்
    பகைமிகவே தந்தாய்
    ஓதியநல் தாச -மக்கள்
    உணர்ந்திடவே நேச



    ReplyDelete
    Replies
    1. \\ஆதியிலே இல்லை-என்றும்
      அழியாத தொல்லை//
      உண்மை ஐயா இப்போதுதான் இந்த நூற்றாண்டில்தான் அதிக பேதங்கள் எல்லாம் வந்தது

      Delete
  4. // ஏனய்யா சாதியும் மதமும்
    என்ன அதனால் சாதித்தாய் //

    சமத்துவ சிந்தனை! நல்ல கவிதை!
    ( கட்டுரைகளில் பிழை இருந்தால் அவ்வளவாக தெரியாது. ஆனால் கவிதைகளில் பிழைகள் இருப்பின் கவித்துவமே தன்மை மாறிவிடும். எனவே பதிவிடுவதற்கு முன் ஒருமுறை சரிபார்த்துக் கொள்ளவும். விசைப்பலகையில் ( Key Board) குறையிருப்பின் சிலசமயம் இதுமாதிரி நிகழும். சொன்னதில் தவறிருப்பின் மன்னிக்கவும்!)

    செளுந்திரளான > செழுந்திரளான
    வாழ்தாலும் > வாழ்ந்தாலும
    அறிவிளியாய் > அறிவிலியாய்



















    ReplyDelete
    Replies
    1. உண்மை பிழை உள்ளதை அறிந்தேன் தவறு என்னுடையது திருத்திக்ககொள்கிறேன்.வந்தமைக்கு நன்றி இனிமேல் தவறாமல் வரவேண்டும் ஒன்றி

      Delete
  5. ஒன்றே குலமென
    ஒவ்வோர் மதமும்
    நன்றே சொன்னாலும்
    நல்லவை போதித்தாலும்
    அன்றே அனைத்தையும் மறந்து
    அறிவிளியாய் மாறுவதேன்
    மனிதத்தை போற்றினால்
    மதமென்ன தடையா சொல்லும்

    மனிதம் போற்றும் அருமையான படைப்புக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி ,நாளும் வருக நல்லூக்கம் தருக

      Delete
  6. ஒன்றே குலமென
    ஒவ்வோர் மதமும்
    நன்றே சொன்னாலும்
    நல்லவை போதித்தாலும்
    அன்றே அனைத்தையும் மறந்து
    அறிவிழியாய் மாறுவதேன்
    மனிதத்தை போற்றினால்
    மதமென்ன தடையா சொல்லும்//
    அருமையாக சொன்னீர்கள்.
    மனிதத்தை போற்ற வேண்டும் என்று உரைக்கும் அருமையான கவிதைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்கம்மா.இப்போதும் வந்து
      இனிமையான கருத்தை தந்து
      வாழ்த்தியமைக்கு நன்றி

      Delete
  7. மதத்தின் பின் மறைந்து மனிதம் மறந்த மனிதன்.மதம் பிடித்தவன்!
    நன்று

    ReplyDelete
    Replies
    1. உண்மை ,மதமும் சாதியும் மனிதனை பிரிக்கின்றன
      வந்ததுக்கும் கருத்து தனத்துக்கும் நன்றி

      Delete
  8. எங்கெங்கும் காண்பதெல்லாம்
    எண்ணற்ற மதப் பற்றே
    ஏழ்மைப் பசிப் பஞ்சம்
    ஏற்றதாழ் விருந்தாலும்
    எல்லா மக்களும்
    இன்பமாய் வாழ்ந்தாலும்
    ஏனய்யா சாதியும் மதமும்
    என்ன அதனால் சாதித்தாய்

    ரொம்ப அழகா சொல்லிருக்கிங்க ஐயா. சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க தம்பி ,இப்போதெல்லாம் இதுதான் சொல்லவேண்டியுள்ளது

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more