Tuesday, 16 December 2014

தூக்கி செல்ல நால்வர்........

உடலும் கழிவாய் மாறும்
உயிரும் பிரிந்து போனால்
உணர்ந்தே நாளும் வாழ்ந்தால்
உண்மை வாழ்க்கை  புரியும்

தூக்கி செல்ல நால்வர்
துவண்டே அழவும் சிலபேர்
தொடர்ந்தே வந்திட உற்றார்
தொலைத்த குடும்ப உறவோர்

வாழ்ந்த வாழ்க்கை  போற்றி
வாழ்த்தும் நண்பர் கூட்டம்
வணங்கிச் செல்லும் மக்கள்
வருந்தி அழைத்தால் வருமா

ஆக்கம் செய்த பணிகள்
அனைத்தும் முன்னே வருமாம்
அன்பால் செய்த செயலே
அருகில் நின்று அழுமாம்

ஏக்கம் இல்லா வாழ்வும்
ஏழ்மை உணரா உயர்வும்
என்றும் நன்மை செய்யா
எவரும் நம்மை மதியார்

தூக்கம் விழித்துப் பார்க்கத்
தோழமை வேண்டும் உலகில்
தொடர்ந்தே குழிவரை வருவோர்
துயரம் கண்டிட வேண்டும்

உயிரும்  உள்ள போதே
உரிமை  கொண்டோர் மகிழ
உணர்வை மதித்துச் செய்தால்
உடலும் மனமும் அழுமே

எல்லா உயிரும் இதுபோல்
ஏந்தல் செய்வது மில்லை
பொல்லா மனித இனமே
புரிந்தால் வாழ்க்கை நலமே


---------கவியாழி----------25 comments:

 1. அருமையான கருத்து! ஊனும் ஒரு நாள் அழிந்தே போகும். இருக்கும் வரை மனிதர் ஒருவருக்கொருவர் அன்பு செய்து வாழப் பழகுவோம்....காயமே அது பொய்யடாஅ...காற்றடைத்த பையடா....

  ReplyDelete
 2. நாலு பேருக்கு நன்றி! அந்த நாலு பேருக்கு நன்றி!
  த.ம.2

  ReplyDelete
 3. விண்ணிலே வெடித்த கல்லோ
  விரைந்ததோ உன்னுள் சீரிப்

  பண்ணிலே தெறித்த சொல்லோ
  பறந்ததோ நெஞ்சைக் கீரிக்

  கண்ணிலே துளிர்த்த நீரோ
  கண்டதை உருகி நின்றேன்

  மண்ணிலே சிதைந்த பின்னே
  மகுடம் என்ன செய்யும்?

  அற்புதமான நெறியில் பண் பதிந்தீர். நன்றி அய்யா.

  ReplyDelete
 4. மகுடமே யென்ன செய்யும்? என்று திருத்தி வாசித்துக் கொள்ளுங்கள் அய்யா. நன்றி.

  ReplyDelete
 5. அருமை ஐயா
  தங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன்

  http://blogintamil.blogspot.ae/2014/12/p-1985.html

  ReplyDelete
 6. தூக்கம் விழித்துப் பார்க்கத்
  தோழமை வேண்டும் உலகில்
  தோழமைக்கு நிகர் யார்
  தம 4

  ReplyDelete
 7. அய்யா, மறுபடியும் எனை உணர்ந்தேன். கீரி அல்ல அது கீறி. நன்றி..

  ReplyDelete
 8. சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 9. கவிதை அருமை. தற்போது நால்வர் தூக்கிச் செல்வது குறைந்துவிட்டதே. இறுதிப்பயணம் தற்போது அமரர் ஊர்தியில் அல்லவா பெரும்பாலும்.

  ReplyDelete
 10. வாழ்வின் இறுதி நிகழ்வுகளை இதைவிட சிறப்பாக கூறுவது அதுவும் கவி வடிவில் தருவது கடினம் அய்யா!
  அனைவரும் படித்து பண்புடன் வாழ இந்த கவிதை துணை புரியும் என்பதில் துளியும் அய்யம் இல்லை.
  அன்புடன்,
  புதுவை வேலு

  (எனது இன்றைய பதிவு "நாராய்! இளந் நாராய்! கவிதையை கண்ணுற வாருங்கள்)

  ReplyDelete
 11. தூக்கி செல்ல நால்வர் தேவை
  ஆக்கி வைத்த நல்லுறவே உதவும்
  சிறந்த பாவரிகள்
  சிந்திக்கவைக்கிறது
  தொடருங்கள்

  ReplyDelete
 12. பொல்லா மனித இனமே
  புரிந்தால் வாழ்க்கை நலமே


  சிந்தனை சிறகடிக்கும் வரிகள் அருமை.

  ReplyDelete
 13. வணக்கம் ஆறாவது வாக்கு...!
  கவிதை அருமை

  ReplyDelete
 14. கவிதை நன்று . மீண்டும சூடு பிடித்து விட்டது கவியாழியின் கவிதைகள்

  ReplyDelete
 15. மிக மிக அற்புதம்
  ம்ண்டும் மீண்டும் படீத்து ரசித்தேன்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 16. சிறப்பான கவிதை பகிர்வுக்கு நன்றி..த.ம.9

  ReplyDelete
 17. காஷ்மீரில் குளிரிலேயும்
  கட்டெறும்பு கடிச்சா கடுக்கும்
  கண்டாங்கி கட்டிகிட்டு நீ
  பட்டணத்துக்கு போனாய்
  ஏன் என்னை தனியே விட்டு
  பளுப்பு துனிகட்டிக்கட்டு
  பட்டிக்காட்டில் நீ என்னுடனே
  இருந்தால் தானே இனிக்கும்
  வாடி புள்ள வாக்குவாதமில்லாம
  அம்மா வீட்டுக்கு இனி விருந்தாளி
  நான் உன் கண்ணுக்கு கருந்தேளா சொல்
  வந்துவிடு வசந்தவிழா எடுத்திடுவேன்

  சொக்கன் சுப்பிரமணியன்
  ஆஸ்திரேலியா.

  கவிதை பற்றி உங்கள் கருத்துக்கள் ப்ளீஸ்

  ReplyDelete
 18. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  அன்புடனும், நட்புடனும்

  துளசிதரன், கீதா

  ReplyDelete
 19. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஐயா...

  ReplyDelete
 20. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 21. எனது அருமை நண்பர்/அவர் தம் குடும்பத்தினர்,
  அனைவருக்கும் மனங் கனிந்த இனிய இறையருள்மிக்க,

  "புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்"

  என்றும் நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.fr

  ReplyDelete

 22. பொலிக.. பொலிக.. புத்தாண்டு!

  புத்தம் புதுமலராய்ப் புத்தாண்டு பூக்கட்டும்!
  சித்தம் செழித்துச் சிறக்கட்டும்! - நித்தமும்
  தேனுாறும் வண்ணம் திளைக்கட்டும்! செந்தமிழில்
  நானுாறும் வண்ணம் நடந்து!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்