இன்றும் வாழும் பாரதியே....
இன்றும் வாழும் பாரதியே
எப்படி மறப்பேன் உனையே !
எழுச்சித் தமிழை உணர்த்தி-அன்று
எல்லோர் மனதிலும் இடம் பிடித்தாய்!
உன்னை விட்டு வைத்தால்
உலகையே மாற்று வாயென,
பெண்மை யொத்த சிலரால்-மனதால்
பெரும்பிணி யேற்றும் வாழ்ந்தாய்
கண்ணைபோல் வளர்த்த மகளை
கலப்புத் திருமணம் செய்து
கடவுள் இதையும் ஏற்பாரென-விரும்பி
கண்குளிர பார்க்க எண்ணியதை,
திண்ணைத் தோறும் சென்று
தீராப்பழி சுமத்தி வந்தோர்
பெண்ணை மயக்கிப் பிரித்தே-நீயின்றி
திருமணம் செய்து வைத்தார்
கண்ணை இழந்துக் கலங்கிக்
கடின வாழ்க்கை வாழ்ந்தும்
காளையெனச் சுற்றித் திரிந்ததை-சூழ்சியால்
கண்துயில வைத்து விட்டனரே!
(கவியாழி)
வணக்கம்
ReplyDeleteஐயா
பாரதியை பாரில் புகன்ட வரிகள் மிக அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
த.ம1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமை.
ReplyDeleteமனதில் உறுதி வேண்டும்...!
ReplyDeleteஅருமை ஐயா
ReplyDeleteபாரதி என்றும் வாழ்வார்
தம5
ReplyDeleteபாரதி என்றும் வாழ்வார்
ReplyDeleteஐயா பாரதியின் வாழ்க்கை நிகழ்வை இவ்வளவு நேர்த்தியாக பகிர்ந்து விட்டீர்களே. சிறப்பான வரிகள் ஐயா.
ReplyDeleteசிறப்புக் கவிதை அருமை
ReplyDeleteபகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
tha.ma 8
ReplyDeleteசிறப்பான வரிகல் நண்பரே!
ReplyDeleteபாரதியோடு தமிழும் வாழும்
ReplyDeleteபாரதி கவிதை அருமை.
ReplyDeleteபாரதியை சிறப்பிக்கும் கவிதை அருமை! நன்றி!
ReplyDeleteபாரதியின் கவிதை அருமை ஐயா வலைச்சரத்திஸ்....
ReplyDeletehttp://blogintamil.blogspot.ae/2014/12/blog-post_12.html?showComment=1418474635473#c4989795754924664076
பாரதிக்கு அருமையான புகழஞ்சலி.
ReplyDeleteஅருமை.....
ReplyDeleteநீண்டு செல்லும் பாரதியின் நினைவுகள்
ReplyDeleteஎன்றும் நினைவை விட்டு நீங்கா!