இழிபிறவி எடுத்தவர்கள்
ஏய் இழி பிறப்பே ! உச்சகட்டவெறியோடு ஊரிலுள்ள பெண்களை துச்சமென நினைத்தே துரதித்துரத்தி கெடுத்தாயே-நீ பிச்சையெடுத்தாலுமுன் பிணியுணக்கு தீராது எச்சியிலை நாய்கள்போல் எக்குதப்பாய் கடித்திட்டு இச்சையினை முடித்திட்டு எவளருக்கே படுத்தாயே-தாய் மிச்சஉயிர்போகுமுன்னே மகன்வாழ வேண்டுமென்றும் பிச்சிப்போட்ட இலையைப்போல் பிரண்டியவள் தங்கையென்றே மதித்திருந்தால் இழிவாக மடத்தனமாய் செய்வாயா ? புத்தன் வாழ்ந்த பூமியிலே-பெண்ணை புனிதமாக எண்ண வேண்டும் இவ்வுலகில் எத்தனை நாள் இன்னும் நீ இருந்தாலும் இழிவுடனே பெரும்துயரை இணைத்து நீ வாழ்ந்தாலும் புத்திகெட்ட உன்செயலை-நீ புலம்பி நாளும் திரிந்தாலும் செத்தவனாய் நடைபிணமாய் செழிப்பிழந்து அழிவாயே செய்திட்ட தவறெல்லாம் தினமுனக்கு பகையாகி பித்தனாக திரிவாயோ பிணமாகிப்போவாயோ ! கவியாழி.கண்ணதாசன்