மகிழ்ச்சியைத் துறப்பவள்
இளமைக் காலம் முதலே
இளையவர் நன்கே வளர
இன்முகம் காட்டி சிரித்தவள்
இளமை மறந்து வாழ்ந்தவள்
விடைலை வயதில் நின்றவள்
வீதியில் வீம்பாய் நடந்தவள்
வேடிக்கைப் பார்த்துச் சென்றவள்
வாழ்க்கைச் சிறையில் மகிழ்ந்தவள்
குடும்பம் தொடங்கி வைப்பவள்
குழந்தை சிலதைப் பெற்றவள்
குறும்புத் தனத்தை மறந்தவள்
குழந்தை வளர்வதால் நிமிர்ந்தவள்
சோதனைக் காலம் கண்டவள்
துணையுடன் மகிழ்ந்து வாழபவள்
துயரம் மிகுந்தும் நகைப்பவள்
தூய்மை அன்பைக் கொடுப்பவள்
ஆக்கம் கொடுத்த தாய்
அவள்தான் எனது சகோதரி
அன்பாய் இருக்கும் மனைவி
அடுத்தது எனது மகளே
******கவியாழி*******
இளையவர் நன்கே வளர
இன்முகம் காட்டி சிரித்தவள்
இளமை மறந்து வாழ்ந்தவள்
விடைலை வயதில் நின்றவள்
வீதியில் வீம்பாய் நடந்தவள்
வேடிக்கைப் பார்த்துச் சென்றவள்
வாழ்க்கைச் சிறையில் மகிழ்ந்தவள்
குடும்பம் தொடங்கி வைப்பவள்
குழந்தை சிலதைப் பெற்றவள்
குறும்புத் தனத்தை மறந்தவள்
குழந்தை வளர்வதால் நிமிர்ந்தவள்
சோதனைக் காலம் கண்டவள்
துணையுடன் மகிழ்ந்து வாழபவள்
துயரம் மிகுந்தும் நகைப்பவள்
தூய்மை அன்பைக் கொடுப்பவள்
ஆக்கம் கொடுத்த தாய்
அவள்தான் எனது சகோதரி
அன்பாய் இருக்கும் மனைவி
அடுத்தது எனது மகளே
******கவியாழி*******
வணக்கம்
ReplyDeleteஐயா
கவிதையின் வரிகள் மனதை கவர்ந்தது அருமை வாழ்த்துக்கள் ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க ரூபன்
Deleteவணக்கம்
ReplyDeleteதமிழ்மண வாக்கு. ok..ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி
Deleteஒரு பெண்ணின் பல ரூபங்களைப் பிரதிபலிக்கும் அழகிய கவிதை, கடைசி வரி மனதைத் தொட்டது...
ReplyDelete//குறும்பு தனத்தை மறந்தவள்//
குறும்புத் தனத்தை மறந்தவள் என்றும்
//தூய்மை அன்பைக் கொடுப்பவள்//
தூய அன்பைக் கொடுப்பவள்
என்றும் மாற்றிக்கொள்ளுங்கள் ஐயா...
த.ம. 3
வருகைக்கும் நன்றிங்க சரவணன்
Deleteதுயரம் மிகுந்தும் நகைப்பவள்
ReplyDeleteதூய்மை அன்பைக் கொடுப்பவள்
மனதைத் தொட்டது
உண்மைதானே?வருகைக்கு நன்றிங்க
Deleteஅற்புதம்
ReplyDeleteபெண்மையின் மூன்று உன்னத
பரிமானங்களைச் சொல்லிப்போனவிதம்
அருமை.தொடர வாழ்த்துக்கள்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க
Deleteபெண்மையின் கவிதை. அருமை ஐயா!
ReplyDeleteஉண்மைதான் இல்லையா?
Deleteமுப்பெரும் தேவியரை போற்றிய விதம் அருமை !
ReplyDeleteத.ம.6
நீங்க ஜோக்காளி தான் ஒத்துக்கிறேன்.அதுக்காக த.ம.6 இது தவறு
Deleteத.ம.6
ReplyDeleteபெண்களின் ஒவ்வொரு ரூபமும் சக்தியின் ஸ்வரூபமே என்று உணரவைத்த வரிகள் அற்புதம் கண்ணதாசன்.
உண்மைதான் மஞ்சு (லு)
Deleteநன்று!
ReplyDelete/// ஆக்கம் கொடுத்த தாய்...!
ReplyDeleteஅவள்தான் எனது சகோதரி...!!
அன்பாய் இருக்கும் மனைவி...!!!
அடுத்தது எனது மகளே.. //
அருமை ஐயா... வாழ்த்துக்கள்...
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க தனபாலன்
Deleteகவிதையை ரசித்தேன்.
ReplyDeleteநானும் மகிழ்ந்தேன்
Deleteஇளமை மறந்து வாழ்ந்தவள் - தாய்
ReplyDeleteவாழ்க்கைச் சிறையில் மகிழ்ந்தவள் - சகோதரி
குழந்தை வளர்வதால் நிமிர்ந்தவள் - மனைவி
தூய்மை அன்பைக் கொடுப்பவள் - மகள்
என
எங்க தாய்க் குலம் பற்றி
உங்க எண்ணங்களை வரவேற்கிறேன்!
பெண்மையின் உண்மை .தங்களின் வருகைக்கு நன்றி
Deleteமிக அருமை ஐயா...
ReplyDeleteநன்றிங்க நைனா
Deleteதாயைப் பற்றி மட்டும் சொல்கிறீர்கள் என்று நினைத்துப் படித்தேன். கடைசிப் பத்தி புத்தி சொன்னது! :))
ReplyDeleteகடைசிவரை படிக்க வேண்டும் .இறுதியில் உறுதியான கரு இருக்கும்
Delete