Posts

Showing posts with the label கவிதை/ சமூகம்/வாழ்க்கை

தெய்வங்கள்

தெய்வங்கள்

பசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே !

உலகில் தோன்றும் உயிர்கள் யாவும் இறைவன் கொடுத்த வரமாய் எண்ணும் உயர்ந்த எண்ணம் கொண்டோர் பலரும்_ பெண்ணை குறையாய் எண்ணி கொடுமை செய்தே ! கருவில் வளரும் சிசுவை அறிந்தும் கட்டளை விடுவார் கருவில் சிதைப்பார் உருவாய் வளர்ந்து  மகளாய்ப் பிறந்தால்- உடனே உயிரையும் எடுப்பார் உணர்வை  இழந்தே !! கடவுள் உருவாய் கருணை மழையாய் காலையும் மாலையும் பாலைத் தந்திடும் பசுவும் ஈன்றிடும் கடுவன் சிசுவைக்-கொல்வார் பாலை மட்டும் உணவாய்  கொண்டே !!! பசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே பார்த்திடும் கண்கள் வேதனை கொண்டே சிசுவை கொல்லுதல் முறையாய் என்றே- மனதில் சிவனைக் கேட்கிறேன் கேள்வியாய் இன்றே !!!! ------- கவியாழி-------

கல்லறை வரையில் துணையே.......

இதயம் அடிக்கடித் துடிக்கும் இமையும் இணைந்தே அடிக்கும் கருவைச் சுகமாய்ச் சுமக்கும் கருவறை சிறையாய் இருக்கும் பிறந்ததன் கதைகளைச் சொல்லி பெரியவர் வரையில் தொடர்ந்து உழைக்கும் மனித வாழ்க்கை உறவுகள் இணைந்தால் சிறக்கும் இளமைக் கனவுகள் பலிக்கும் இணைந்ததும் சுகமாய் இருக்கும் பிறவிப் பலனை அடைந்தே பெரியவராக்கி உண்மையைச் சொல்லும் உறவுகள் தொடந்தே வாழும் உரிமைகள் மகிழ்ந்தே தொடரும் பிரிவைத் வெறுத்தே ஒதுக்கும் பிள்ளைகள் இணைந்தால் மகிழும் கடனே இல்லா வாழ்க்கை கடந்தும் இருந்தால் நன்று கல்லறை வரையில் துணையே கிடைத்தால் வாழ்கை மகிழ்ச்சி (கவியாழி)

பொறுப்பில்லா பிள்ளையினால்....

பொறுப் பில்லா பிள்ளையினால் பொறுமை யிழந்து  தவிப்பவரே வெறுப் படைந்து  வேதனையால் வெம்பியே வருந்த வேண்டாம் தடுத்திடும் காரண மறிந்து\ தைரியம் தனைக் கொடுத்து மிடுக்குடன் நடக்க சொல்லி மக்களை  நீர் வளர்த்தால் இலக் கங்கே தருகையிலே இயலாமல் தவிக்கையிலே கலக்க மின்றி யோசித்தால் காணும் பலன் கிடைப்பதையும் துடுக்குடனே செய்யும் வேலை துன்பமதைத் தடுக்கு மென்றும் துணிந்து நின்று முயற்சிக்க துணையாய் சொல்லும் வார்த்தை கவனமாக உணர்தினாலே கவலை யெல்லாம் தீர்த்திடுமே கனிவுடனே இருக்கு மெனவே கடுமை யின்றி சொல்வீரே (கவியாழி)

கடந்தும் செல்வது நலமோ.............

எத்தனைப் பெரிய மனிதர்கள் எப்படி எளிமையாய் இருந்தே சத்தியம் தவறா வழியில் சமத்துவம் போற்றி  வாழ்ந்தே நித்தமும் மகிழ்வாய்  உணர்ந்த நேர்வழி நெறிமுறை வளர்த்தே சித்தமும் சிவனுமாய்ப் போற்றிச் சீராய்த் திருத்திச்.சொல்லி குற்றமும்  தவிர்க்க வேண்டிக் குறைகளைக் கண்டு களைந்தே அப்பனும் பாட்டனின் வழியில் அன்று வாழ்ந்ததைச் சொல்லி சிற்பமாய் அறிவால் செதுக்கிச் சீராக்கி நேர்வழியில் வாழ அற்பமாய்ச் செய்யும் தவறும் அறியச் சொல்லிக் கொடுத்தே தப்பேதும் இல்லா வாழ்வை தினமும் சொல்லி வந்தே முப்போதும் மகிழ்ந்து வாழ முறையாய் சொல்லி வாழ்த்தினர் இப்போது நிலைமை இல்லை இருப்பதோ நிலைமை  தலைகீழ் தப்பதை உணர்ந்து வருந்தி தகையோரை மதிப்போர் உளரோ கற்பதை முறையாய் சொல்லாக் கல்வியால் வந்த வினையோ காலத்தை உணர்ந்தே நாமும் கடந்தும் செல்வது நலமோ

ரசித்தவர்கள்