கடந்தும் செல்வது நலமோ.............
எத்தனைப் பெரிய மனிதர்கள்
எப்படி எளிமையாய் இருந்தே
சத்தியம் தவறா வழியில்
சமத்துவம் போற்றி வாழ்ந்தே
நித்தமும் மகிழ்வாய் உணர்ந்த
நேர்வழி நெறிமுறை வளர்த்தே
சித்தமும் சிவனுமாய்ப் போற்றிச்
சீராய்த் திருத்திச்.சொல்லி
குற்றமும் தவிர்க்க வேண்டிக்
குறைகளைக் கண்டு களைந்தே
அப்பனும் பாட்டனின் வழியில்
அன்று வாழ்ந்ததைச் சொல்லி
சிற்பமாய் அறிவால் செதுக்கிச்
சீராக்கி நேர்வழியில் வாழ
அற்பமாய்ச் செய்யும் தவறும்
அறியச் சொல்லிக் கொடுத்தே
தப்பேதும் இல்லா வாழ்வை
தினமும் சொல்லி வந்தே
முப்போதும் மகிழ்ந்து வாழ
முறையாய் சொல்லி வாழ்த்தினர்
இப்போது நிலைமை இல்லை
இருப்பதோ நிலைமை தலைகீழ்
தப்பதை உணர்ந்து வருந்தி
தகையோரை மதிப்போர் உளரோ
கற்பதை முறையாய் சொல்லாக்
கல்வியால் வந்த வினையோ
காலத்தை உணர்ந்தே நாமும்
கடந்தும் செல்வது நலமோ
எப்படி எளிமையாய் இருந்தே
சத்தியம் தவறா வழியில்
சமத்துவம் போற்றி வாழ்ந்தே
நித்தமும் மகிழ்வாய் உணர்ந்த
நேர்வழி நெறிமுறை வளர்த்தே
சித்தமும் சிவனுமாய்ப் போற்றிச்
சீராய்த் திருத்திச்.சொல்லி
குற்றமும் தவிர்க்க வேண்டிக்
குறைகளைக் கண்டு களைந்தே
அப்பனும் பாட்டனின் வழியில்
அன்று வாழ்ந்ததைச் சொல்லி
சிற்பமாய் அறிவால் செதுக்கிச்
சீராக்கி நேர்வழியில் வாழ
அற்பமாய்ச் செய்யும் தவறும்
அறியச் சொல்லிக் கொடுத்தே
தப்பேதும் இல்லா வாழ்வை
தினமும் சொல்லி வந்தே
முப்போதும் மகிழ்ந்து வாழ
முறையாய் சொல்லி வாழ்த்தினர்
இப்போது நிலைமை இல்லை
இருப்பதோ நிலைமை தலைகீழ்
தப்பதை உணர்ந்து வருந்தி
தகையோரை மதிப்போர் உளரோ
கற்பதை முறையாய் சொல்லாக்
கல்வியால் வந்த வினையோ
காலத்தை உணர்ந்தே நாமும்
கடந்தும் செல்வது நலமோ
வணக்கம்
ReplyDeleteஐயா
கவிதையின் வரிகள் மனதை நெருடியது... அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அறிவுரை நன்று!
ReplyDeleteநல்லது ஐயா... வாழ்த்துக்கள்...
ReplyDeleteபடித்துவிட்டு சும்மா கடந்து செல்ல மனம் வரவில்லை ,எனவே +1 ,
ReplyDeleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/11/blog-post_30.html) சென்று பார்க்கவும்... நன்றி...
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்! அற்புதமான கருத்து! நன்றி!
ReplyDeleteவலைசர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteநல்ல பகிர்வு...
ReplyDeleteத.ம. 8