பசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே !
உலகில் தோன்றும் உயிர்கள் யாவும்
இறைவன் கொடுத்த வரமாய் எண்ணும்
உயர்ந்த எண்ணம் கொண்டோர் பலரும்_ பெண்ணை
குறையாய் எண்ணி கொடுமை செய்தே !
இறைவன் கொடுத்த வரமாய் எண்ணும்
உயர்ந்த எண்ணம் கொண்டோர் பலரும்_ பெண்ணை
குறையாய் எண்ணி கொடுமை செய்தே !
கருவில் வளரும் சிசுவை அறிந்தும்
கட்டளை விடுவார் கருவில் சிதைப்பார்
உருவாய் வளர்ந்து மகளாய்ப் பிறந்தால்- உடனே
உயிரையும் எடுப்பார் உணர்வை இழந்தே !!
கட்டளை விடுவார் கருவில் சிதைப்பார்
உருவாய் வளர்ந்து மகளாய்ப் பிறந்தால்- உடனே
உயிரையும் எடுப்பார் உணர்வை இழந்தே !!
கடவுள் உருவாய் கருணை மழையாய்
காலையும் மாலையும் பாலைத் தந்திடும்
பசுவும் ஈன்றிடும் கடுவன் சிசுவைக்-கொல்வார்
பாலை மட்டும் உணவாய் கொண்டே !!!
காலையும் மாலையும் பாலைத் தந்திடும்
பசுவும் ஈன்றிடும் கடுவன் சிசுவைக்-கொல்வார்
பாலை மட்டும் உணவாய் கொண்டே !!!
பசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே
பார்த்திடும் கண்கள் வேதனை கொண்டே
சிசுவை கொல்லுதல் முறையாய் என்றே- மனதில்
சிவனைக் கேட்கிறேன் கேள்வியாய் இன்றே !!!!
பார்த்திடும் கண்கள் வேதனை கொண்டே
சிசுவை கொல்லுதல் முறையாய் என்றே- மனதில்
சிவனைக் கேட்கிறேன் கேள்வியாய் இன்றே !!!!
------- கவியாழி-------
சுயநல மனிதன் செய்யும் கொடுமைகள்.
ReplyDeleteகசப்பான உண்மைகள்
Deleteஅவர்கள் மனிதர்களே அல்ல...
ReplyDeleteஉண்மைதான் நண்பரே
Deleteவணக்கம் திரு கண்ணதாசன் அவர்களே
ReplyDeleteஅருமையான கவிதை
தங்கள் பெயருக்கு முன்னால் இருக்கும் கவியாழி என்பது உங்க சொந்த ஊர் பெயரா ?
தங்களின் பாராட்டுக்கு நன்றி.கவியாழி என்ற பெயரை நானே வைத்துக்கொண்டேன்
DeleteThanks sir .Please continue
ReplyDelete