தெய்வங்கள்

தெய்வங்கள்

பொறுப்பில்லா பிள்ளையினால்....

பொறுப் பில்லா பிள்ளையினால்
பொறுமை யிழந்து  தவிப்பவரே
வெறுப் படைந்து  வேதனையால்
வெம்பியே வருந்த வேண்டாம்

தடுத்திடும் காரண மறிந்து\
தைரியம் தனைக் கொடுத்து
மிடுக்குடன் நடக்க சொல்லி
மக்களை  நீர் வளர்த்தால்

இலக் கங்கே தருகையிலே
இயலாமல் தவிக்கையிலே
கலக்க மின்றி யோசித்தால்
காணும் பலன் கிடைப்பதையும்

துடுக்குடனே செய்யும் வேலை
துன்பமதைத் தடுக்கு மென்றும்
துணிந்து நின்று முயற்சிக்க
துணையாய் சொல்லும் வார்த்தை

கவனமாக உணர்தினாலே
கவலை யெல்லாம் தீர்த்திடுமே
கனிவுடனே இருக்கு மெனவே
கடுமை யின்றி சொல்வீரே

(கவியாழி)


Comments

  1. வணக்கம் சகோதரர்
    பிள்ளை வளர்ப்பு எப்படி இருக்க வேண்டுமென்பதையும், பிள்ளைகளினால் தொல்லை என்று வந்தால் சமாளிக்க பழகிக்கொள்ள வேண்டுமென்பதையும் மிக நேர்த்தியாக சொல்லிய விதம் அருமை. பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  2. சரியாகச் சொன்னீர்கள் ஐயா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. நல்லதொரு கவிதைப் பகிர்வு! பிள்ளைகள் பொறுப்பில்லாமல் இருந்தால் கண்டிப்பாக ஒரு குடும்பம் சீரழியும்! பெற்றோர்கள் அதைக் கவனித்து கையாளும் முறையில் கையாண்டால் தீர்வுண்டு!

    அழகாகச் சொல்லி உள்ளீர்கள்!

    நன்றி!

    ReplyDelete
  4. பிள்ளைகளின் தொல்லைகளை சமாளிக்க நல்ல வழி சொன்னவரே நீர் வாழ்க உம் கவிதை வாழ்க...

    ReplyDelete
  5. வளர்க்கும் முறையினால் தான் குழந்தைகள் வளர்கின்றன. இதனை மனதில் கொள்ளவேண்டியது அவசியம். தங்களின் கவிதை இதனைச் சிறப்பாக உணர்த்துகிறது. நன்றி.

    ReplyDelete
  6. //கடுமையின்றி சொல்வீரே// இது மிக முக்கியம்!!
    நல்லாச் சொன்னீங்க ஐயா..
    த.ம.5

    ReplyDelete
  7. பிள்ளை வளர்ப்பை சரியாக போதிக்கும் கவிதை! அருமை! நன்றி!

    ReplyDelete
  8. //கவனமாக உணர்தினாலே
    கவலை யெல்லாம் தீர்த்திடுமே
    கனிவுடனே இருக்கு மெனவே
    கடுமை யின்றி சொல்வீரே//
    ஆம் ஐயா இன்றைய பிள்ளைகளை
    அன்பினால்தான் திருத்த முடியும்.
    நன்றி ஐயா

    ReplyDelete
  9. பிள்ளைகளால் பல நேரங்களில் மன சஞ்சலங்கள் வரலாம். ஒரு வேளை எதிர்பார்ப்புகள் அதிகமாகத் துயரும் அதிகமாகிறதொ.? ஐயா உங்கள் மின் அஞ்சல் முகவரி கிடைக்குமா. நாங்கள் 16-ம் தேதி முதல் நான்கைந்து நாட்கள் சென்னையி இருப்போம். சந்திக்க முடிந்தால் மகிழ்வேன் என் மினஞ்சல் முகவரி gmbat1649@gmail.com

    ReplyDelete
  10. அன்பான அறிவுரைகளால் அகத்தை வெல்வது சுலபமே .
    சிறப்பான கவிதைக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்கள் சகோதரா .

    ReplyDelete
  11. சிறந்த கருத்துரை

    ReplyDelete
  12. பெற்ற பிள்ளைகள் வரங்களாகவும்,சமயங்களில் சாபங்களாகவும் மாறிப்போவது சங்கட,சந்தோஷ நிகழ்வுகளே/

    ReplyDelete
  13. பதிவிட்டமைக்கு நன்றி. அன்பார்ந்த தமிழ் அன்பர்களுக்கு தமிழ் மூலமாக ஆங்கிலம் கற்க அற்ப்புத வலைப்பின்னல் http://aangilam.blogspot.in/ படித்து பயன் பெருக நன்றி வணக்கம்.

    ReplyDelete
  14. நன்றாக சொன்னீர்கள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. நல்ல பகிர்வு. நன்றி....

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்