Posts

Showing posts with the label கவிதை/காதல்/உளவியல்

தெய்வங்கள்

தெய்வங்கள்

இடையில் ஏதோ மனதில்.....

வயதில் மூத்தவன் னானாலும் வாலிபம் மறந்து போனாலும் நினைவில் ஒதுங்கி நின்றாலும் நிழலோ படிப்பைத் தேடி துணையாய் யாரும் இல்லை தூரத்து வயதில் தொல்லை தனியாய் தினமும் வந்தே தனிமைப் பிரிவை உணர்ந்தான் இனிய பொழுதை தினமும் இடரே யின்றி படிப்பில் தொடராய் படித்து மகிழ்ந்து தொடந்தான் படிப்பை உணர்ந்து இடையில் ஏதோ மனதில் இருட்டாய் இருந்த இடத்தில குடையுள் விளக்கை பிடித்து குமரியும் எதிரே தெரிந்தாள்  .... பருவம் பதினெட்டில்................7 ...........(கவியாழி)......................

பகிர்ந்திட உடனே நினைக்கும்.....

மேனகை அவளின் முகமோ மிதமான புன்னகை தெரியும் தேனடை நிறத்தில் தெளிவாய் தேகமோ மெலிதாய் இருக்கும் பார்த்திட மனது துடிக்கும் பகிர்ந்திட உடனே நினைக்கும் பூத்திட்ட பூவாய் இருந்தும் புயலென மனதில் உதிக்கும் வேர்த்திடும் இடங்களில் மிச்சம் வேதனை மட்டுமே மிஞ்சும் நேர்ந்திடும் பொழுதினில் மனதில் நிறைந்திட வறுமை கொஞ்சும் பூத்திடும் மலரின் வாசமாய் புதிதாய் தொடங்கி யடங்கும் புதிராய் நிகழும் பெண்மை புரிய மறுக்கும் ஏழ்மையால்.......... தொடரும்....... பருவம் பதினெட்டில்......6 . .......(கவியாழி).......

பருவம் பதினெட்டில்.......4

பணியில் இருந்தும் அவனோ படிப்பில் கவனம் தொடர்ந்தும் பிணியாய் மனதில் தொடரும் பிள்ளைகள் மனமோ கொஞ்சம் நிம்மதி இல்லை வீட்டில் நித்தமும் சண்டை கூச்சல் சொந்தமும் சுற்றமும் வருகை சோதனை வேதனைத் தொடரும் எதிலும் மனமோ ஒதுக்கும் ஏளனம் தினமும் தொடரும் முந்தைய நாட்களை நினைத்து முழுவதும் கவலைகள் மறையும் சிந்தனை செய்ததில் மனமோ சிறந்தது படிப்பே என்றே வந்ததை மறந்திட வழியாய் வசந்தமோ ஐம்பத்து ரெண்டில்.........5 (கவியாழி)

பருவம் பதினெட்டில்.......3

பருவம் பதினெட்டில்................. ------------------------------------------ பாதியில் விட்டப் படிப்பை பட்டமேல் படிப்பில் சேர்ந்து போதிக்கும் கல்வி வேண்டி பொழுது சாய்ந்த நேரத்தில் மீதியும் படித்து முடிக்க மீசைதாடி துறக்க மறுத்து வீதிக்கும் வீட்டுக்கும் அலைந்து விதியென கருத்தாய் படித்தார் வயதில் நண்பரோ மூத்தவன் வாலிபம் முழுதாய் துறந்தவன் இதயத்தில் காதல் இன்னமும் இருப்பதை சொல்ல மறுப்பவன் படிப்பில் ஆர்வம் இருந்ததால் படிக்க மீண்டும் தொடர்ந்தார் அடிக்கடி மனதில் ஏதோ ஆசையும் கூடவே சேர்ந்தது ....... ....................(கவியாழி)................

ரசித்தவர்கள்