Posts

Showing posts with the label கவிதை/சமூகம் / காதல்

தெய்வங்கள்

தெய்வங்கள்

தேனெடுக்கும் அவசரத்தால்.....

நீரி ருக்கும் நிலத்தினிலே நிச்சயமாய் வாழ்ந்து வரும் நிம்மதியாய் வளர்ந்து வந்து நிறம் மாறி பூவாகும் பூப்பூக்கும் முன்னே தேனீ புகுந்து உள்ளே தேனெடுக்க தேன் குடிக்கும்அவசரத்தால் தெரியாமல் பூத்து விடும் குருவிகளும் கொத்தித் தின்ன கொள்கையுடன் படை யெடுக்க கொஞ்ச நேர இடைவெளியில் வண்டுகளே தேன் குடிக்கும் வண்ட துவும்  கொண்டாடி வேலையினை செய்த பின்பு கண்டதுமே பறிக்கத் தூண்டும் கண்ணி மைகள் ஊஞ்சலாடும் வண்ணங்களோ பலநிறத்தில் வயது வந்த பெண்களையும் எண்ணமதை கவ்விச் சென்று எடுத்துடனே சூடச் சொல்லும் பெண்மணியின் பூ வாசம் பொறுமை யின்றி ஆண்களையே போரின்றி உடன்படிக்கை பெண் மனதில் குடியேறும் கண்ணி ரண்டும் ஒப்பந்தம் கண்ணடித்து செய்து கொண்டு எண்ணியதை இணை யிரண்டும் இனிமையாக உறவு கொள்ளும் (கவியாழி) காதலர் தின வாழ்த்துக்கள்...

காதல்...நெஞ்சம் மகிழ வென்றிடுமாம்....

எல்லா வயது மனிதருக்கும் என்றும் தொடர்வது காதலாம் இல்லா நிலையில் உள்ளோர்க்கும் இனிமைத் தருவது காதலாம் ஏக்கம் கொண்டே எப்பொழுதும் ஏங்கித் தவிக்கும் காதலாம் தூக்கம் கெட்டும் தினந்தோறும் துணையாய் நிற்கும் காதலாம் சொல்லா மொழியில் உணர்ச்சிகளை சொல்லித் தருவதும் காதலாம் சொல்லே இன்றிப் பார்வையாலே சொல்லும் மொழியும் காதலாம் பார்த்த உடனும் வந்திடுமாம் பழகிப் பேசியும் மகிழ்ந்திடுமாம் பாசம் கொண்டே வளர்ந்திடுமாம் பகைமை இல்லாக் காதலாம் உண்மையை விரும்பும் காலமும் உணர்ச்சியை தூண்டும் காதலாம் உறவைவும் நட்பும்  வளர்வதற்கு உரிமைமைச் சொல்லும் காதலாம் காதல் நன்றே எப்பொழுதும் காசு பணத்தைப் பார்ப்பதில்லை காமம் இல்லா நட்புடனே கடைசி வரையும் தொடர்ந்திடுமாம் நேசம் அன்பு நட்புடனே நிறமோ மொழியோ பாராமல் நேர்மையான காதலே இறுதியில் நெஞ்சம் மகிழ வென்றிடுமாம்

உத்தமியே நற்சுவையே ...

தூக்கத்திலே தொல்லைத் தரும் தூரதேசப் பேரழகித் தமிழே ஏக்கத்திலே  எப்பொழுதும் நீ என்னை ஏன் இம்சிக்கிறாய் ஆக்கத்திலே உன் பெயரை அனுதினமும் உச்சரித்து ஆனந்த பாடுகிறேன் உன்னை ஆண்டவ நெனனான் போற்றுகிறேன் பாக்களிலும் பரவசம் தந்தாய் பார்த்தவுடன் நவரசமும் ஈந்தாய் ஈரெழுத்து மூவெழுத்து சீருடன் எழுத வைத்தாய் சிரித்தாய் சீர்கொடுத்துச் செம்மைப் படுத்தி சின்னஞ்சிறுப்  பிழையும் பொறுத்து எதுகை மோனையுடன் என்னை எழுதத் தூண்டியே  மகிழ்கிறாய் என்னை ஆட்கொண்டத் தமிழே எண்ணமதில் சிறைபிடித்த அமுதே உன்னை எப்படி மறப்பேன் உத்தமியே நற்சுவையே இனியே..

கொஞ்சிக்கிறேன் நில்லு பொண்ணே

ரவிக்கைத் துணி யுடுத்தி ரத்தக் கலர்ப் பொட்டிட்டு உத்தரவு இல்லாமலே மனசில் உள் நுழைந்த பைங்கிளியே அஞ்சுமுழ மல்லிகைப் பூ ஆடுகிற காது சிமிக்கி பஞ்சுபோல உன்சிரிப்பால் பாடாய் என்னைப் படுத்துறியே திட்டம் போட்ட கெட்டிகாரி திரும்பிப் பார்க்க வைக்கிறியே பட்டம் போட்டு பரிசம்போட பக்குவமாய் நானும் வாறேன் இரட்டை சடை போட்டவளே ராத்திரிய கேடுத்தப் புள்ள கெட்டிக்காரி உன் குறும்பு கட்டி யள்ள தோணுதடி மஞ்சக் கயிறும் தாலியும் மாமன் உனக்கு வாங்கியாறேன் கொஞ்ச நேரம் நின்னுபேசேன் குறையிருந்தா சொல்லிப்போடேன் பஞ்சு மெத்தை தைச்சிருக்கேன் பட்டுத்துணியும் வாங்கிருக்கேன் மஞ்சகொடித் தாலிப் போட்டு கொஞ்சிக்கிறேன் நில்லு பொண்ணே பரிசம் போட நானுவந்தா பதிலைச் சொல்லி அனுப்பாம பாசக்கார மாமன் என்னை-விரட்டி பரிதவிக்க என்னை விட்டுடாதே தொடரும்.....

ரசித்தவர்கள்