தேனெடுக்கும் அவசரத்தால்.....
நீரி ருக்கும் நிலத்தினிலே
நிச்சயமாய் வாழ்ந்து வரும்
நிம்மதியாய் வளர்ந்து வந்து
நிறம் மாறி பூவாகும்
பூப்பூக்கும் முன்னே தேனீ
புகுந்து உள்ளே தேனெடுக்க
தேன் குடிக்கும்அவசரத்தால்
தெரியாமல் பூத்து விடும்
குருவிகளும் கொத்தித் தின்ன
கொள்கையுடன் படை யெடுக்க
கொஞ்ச நேர இடைவெளியில்
வண்டுகளே தேன் குடிக்கும்
வண்ட துவும் கொண்டாடி
வேலையினை செய்த பின்பு
கண்டதுமே பறிக்கத் தூண்டும்
கண்ணி மைகள் ஊஞ்சலாடும்
வண்ணங்களோ பலநிறத்தில்
வயது வந்த பெண்களையும்
எண்ணமதை கவ்விச் சென்று
எடுத்துடனே சூடச் சொல்லும்
பெண்மணியின் பூ வாசம்
பொறுமை யின்றி ஆண்களையே
போரின்றி உடன்படிக்கை
பெண் மனதில் குடியேறும்
கண்ணி ரண்டும் ஒப்பந்தம்
கண்ணடித்து செய்து கொண்டு
எண்ணியதை இணை யிரண்டும்
இனிமையாக உறவு கொள்ளும்
(கவியாழி)
காதலர் தின வாழ்த்துக்கள்...
நிச்சயமாய் வாழ்ந்து வரும்
நிம்மதியாய் வளர்ந்து வந்து
நிறம் மாறி பூவாகும்
பூப்பூக்கும் முன்னே தேனீ
புகுந்து உள்ளே தேனெடுக்க
தேன் குடிக்கும்அவசரத்தால்
தெரியாமல் பூத்து விடும்
குருவிகளும் கொத்தித் தின்ன
கொள்கையுடன் படை யெடுக்க
கொஞ்ச நேர இடைவெளியில்
வண்டுகளே தேன் குடிக்கும்
வண்ட துவும் கொண்டாடி
வேலையினை செய்த பின்பு
கண்டதுமே பறிக்கத் தூண்டும்
கண்ணி மைகள் ஊஞ்சலாடும்
வண்ணங்களோ பலநிறத்தில்
வயது வந்த பெண்களையும்
எண்ணமதை கவ்விச் சென்று
எடுத்துடனே சூடச் சொல்லும்
பெண்மணியின் பூ வாசம்
பொறுமை யின்றி ஆண்களையே
போரின்றி உடன்படிக்கை
பெண் மனதில் குடியேறும்
கண்ணி ரண்டும் ஒப்பந்தம்
கண்ணடித்து செய்து கொண்டு
எண்ணியதை இணை யிரண்டும்
இனிமையாக உறவு கொள்ளும்
(கவியாழி)
காதலர் தின வாழ்த்துக்கள்...
வணக்கம்
ReplyDeleteஐயா.
கண்ணி ரண்டும் ஒப்பந்தம்
கண்ணடித்து செய்து கொண்டு
எண்ணியதை இணை யிரண்டும்
இனிமையாக உறவு கொள்ளும்
என்ன வரிகள்.......... ரசித்தேன்... வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
எங்கேயோ போயிட்டீங்க ஐயா...! வாழ்த்துக்கள்...
ReplyDelete//கண்ணி ரண்டும் ஒப்பந்தம்
ReplyDeleteகண்ணடித்து செய்து கொண்டு
எண்ணியதை இணை யிரண்டும்
இனிமையாக உறவு கொள்ளும்//
ஆஹா! என்ன இனிமை! அருமை!
வாழ்த்துக்கள்!
"பூப்பூக்கும் முன்னே தேனீ
ReplyDeleteபுகுந்து உள்ளே தேனெடுக்க
தேன் குடிக்கும்அவசரத்தால்
தெரியாமல் பூத்து விடும்" என்ற
அருமையான மாற்றத்தை
அழகாகப் பதிவு செய்தீர்கள்
படித்தேன்... ரசித்தேன்...
ReplyDelete"அது துன்பமான இன்பமானது" என்று எதையோ கவிஞர் கண்ணதாசன் வருணித்தார், அது, நினைவுக்கு வருகிறது!
ReplyDeleteசிறப்புக் கவிதை சிறப்பு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteகாதல் என்பது ஒப்பந்தம்தான்
ReplyDeleteஅது முறியாமல் பாதுகாக்க வேண்டியது காதலர்கள்
ம்ம்ம்ம் அட்டகாசமா வந்துருக்கு கவிதை அண்ணே !
ReplyDeleteவித்தியாசமான அருமையான சிறப்புப் பதிவு
ReplyDeleteபகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
காதலர் தின சிறப்புக் கவிதை நன்று......
ReplyDelete