உத்தமியே நற்சுவையே ...
தூக்கத்திலே தொல்லைத் தரும்
தூரதேசப் பேரழகித் தமிழே
ஏக்கத்திலே எப்பொழுதும் நீ
என்னை ஏன் இம்சிக்கிறாய்
ஆக்கத்திலே உன் பெயரை
அனுதினமும் உச்சரித்து
ஆனந்த பாடுகிறேன் உன்னை
ஆண்டவ நெனனான் போற்றுகிறேன்
பாக்களிலும் பரவசம் தந்தாய்
பார்த்தவுடன் நவரசமும் ஈந்தாய்
ஈரெழுத்து மூவெழுத்து சீருடன்
எழுத வைத்தாய் சிரித்தாய்
சீர்கொடுத்துச் செம்மைப் படுத்தி
சின்னஞ்சிறுப் பிழையும் பொறுத்து
எதுகை மோனையுடன் என்னை
எழுதத் தூண்டியே மகிழ்கிறாய்
என்னை ஆட்கொண்டத் தமிழே
எண்ணமதில் சிறைபிடித்த அமுதே
உன்னை எப்படி மறப்பேன்
உத்தமியே நற்சுவையே இனியே..
நல்லதொரு ரசனை ஐயா... ரசித்தேன்... வாழ்த்துக்கள்...
ReplyDeletearumai thodara vaaazhththukkaL
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றிங்க சார்
Deletetha.ma 2
ReplyDeleteநன்றிங்கய்யா
Deleteதமிழ் அழகி பற்றிய கவிதை ரசிக்க வைத்தது.
ReplyDeleteவாழ்த்துகள்!
வாழ்த்துக்கு நன்றிங்க
Deletekaithai arumai.... elimaiyaaka ullathu.... thodarungal thodarkirom !
ReplyDeleteதித்திக்கும் தேன் சுவயாம் உம்கவி
ReplyDeleteதெவிட்டாத பழச் சுவையாம் தத்தி
தவழ்ந்து வந்து தமிழ்மொழியாள் உம்மிடம்
வித்திட்டாளோ விளைய கவி மேலுமென்று!..
அருமை! மிகமிக அழகிய கவி படைத்தீர்கள் சகோதரரே!
நல் வாழ்த்துக்கள்! தொடருங்கள் இன்னும் இன்னும்....
த ம. 5
அருமை அய்யா அருமை
ReplyDeleteநன்றிங்கயா
Deleteத.ம.6
ReplyDeleteஉங்கள் தமிழ் காதல் வாழ்க :)
நன்றிங்க கிரேஸ்
Deleteநல்ல ரசனை...
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க கருண்.தொடர்ந்து வாங்க
Deleteரசிக்க வைத்த அருமையான வரிகள்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க .தொடர்ந்து வாங்க
Delete