தெய்வங்கள்

தெய்வங்கள்

காதல்...நெஞ்சம் மகிழ வென்றிடுமாம்....



எல்லா வயது மனிதருக்கும்
என்றும் தொடர்வது காதலாம்
இல்லா நிலையில் உள்ளோர்க்கும்
இனிமைத் தருவது காதலாம்

ஏக்கம் கொண்டே எப்பொழுதும்
ஏங்கித் தவிக்கும் காதலாம்
தூக்கம் கெட்டும் தினந்தோறும்
துணையாய் நிற்கும் காதலாம்

சொல்லா மொழியில் உணர்ச்சிகளை
சொல்லித் தருவதும் காதலாம்
சொல்லே இன்றிப் பார்வையாலே
சொல்லும் மொழியும் காதலாம்

பார்த்த உடனும் வந்திடுமாம்
பழகிப் பேசியும் மகிழ்ந்திடுமாம்
பாசம் கொண்டே வளர்ந்திடுமாம்
பகைமை இல்லாக் காதலாம்

உண்மையை விரும்பும் காலமும்
உணர்ச்சியை தூண்டும் காதலாம்
உறவைவும் நட்பும்  வளர்வதற்கு
உரிமைமைச் சொல்லும் காதலாம்

காதல் நன்றே எப்பொழுதும்
காசு பணத்தைப் பார்ப்பதில்லை
காமம் இல்லா நட்புடனே
கடைசி வரையும் தொடர்ந்திடுமாம்

நேசம் அன்பு நட்புடனே
நிறமோ மொழியோ பாராமல்
நேர்மையான காதலே இறுதியில்
நெஞ்சம் மகிழ வென்றிடுமாம்



Comments

  1. காதலின் பெருமை சொல்லும்
    அருமையான கவிதை
    காதல் கவிதை என்பதாலோ
    வார்த்தைகள் இயல்பாய்
    துள்ளி விளையாடுகின்றன ?
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஏதோ பழைய ஞாபகம் இப்போவும் தொந்தரவு செய்கிறது.உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி

      Delete
  2. இன்றுதான் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு
    முன்பாக ஒரு பின்னூட்டம் இட முடிந்திருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. குருவிற்கு நன்றி... ஹிஹி...

      Delete
    2. குருவோடு -சிஷ்யன் வருகைக்கும் நன்றி

      Delete
  3. வென்றிடும் காதலை ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. .. நேசம் அன்பு நட்புடனே
    நிறமோ மொழியோ பாராமல்
    நேர்மையான காதலே இறுதியில்
    நெஞ்சம் மகிழ வென்றிடுமாம் ..

    அற்புதமான வரிகள்...

    ReplyDelete
    Replies
    1. நேர்மையான காதல் நிச்சயம் செயிக்கும்.வருகைக்கு நன்றி

      Delete
  5. இப்போ நாடிருக்கும் சூழல்ல காதல்ன்ற பேரை கூட உச்சரிக்க ப்யமா இருக்கே!

    ReplyDelete
    Replies
    1. உதறலா? உளறலா? எனக்கும் பயமா இருக்கு

      Delete
  6. இறுதியில்
    நெஞ்சம் மகிழ வென்றிடுமாம்.....

    ReplyDelete
    Replies
    1. நேர்மையான காதலே நெஞ்சம் மகிழ வென்றிடுமாம்

      Delete
  7. எங்க ஐயா வெல்லுது.....

    கவிதை நன்று

    ReplyDelete
    Replies
    1. நேர்மையான காதலே நெஞ்சம் மகிழ வென்றிடுமாம்.காதலில் நேர்மை வேண்டும் .வருகைக்கு நன்றி

      Delete
  8. காதல் என்றாலே காததூரம் ஓடச் சொல்லும் இன்றைய உலகில் காதலைச் சிறப்பித்த கவியாழிக்கு பாராட்டு. ( கவிஞருக்கு, தங்கள் பெயருக்கு முன்னல் இருக்கும் கவியாழி என்பது எப்படி அமைந்தது?)

    ReplyDelete
    Replies
    1. கவிதை+யாழிசை+ கவியாழி என்பது எனது வலைத்தளத்தின் பெயர்தான்.வருகைக்கு நன்றிங்கயா

      Delete
  9. அழகான வரிகள் ஐயா. வாழ்த்துகள் !!!

    ReplyDelete
  10. காதலுக்காகத்தான் எத்தனை மரணங்கள், இருந்தாலும் காதலுக்கு மரணமே இல்லை இல்லையா...!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் நண்பரே.ஜெயித்தக் காதல்கள் சரித்திரம் சொல்லும் .தோற்றக் காதல்களால் தரித்திரம் கொள்ளும் நிலைதான் உள்ளது

      Delete
  11. நேசம் அன்பு நட்புடனே
    நிறமோ மொழியோ பாராமல்
    நேர்மையான காதலே இறுதியில்
    நெஞ்சம் மகிழ வென்றிடுமாம்

    சிறப்பான ஆக்கம் ..!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றிங்கம்மா.உண்மையான காதலுக்கு எப்போதும் உயிருக்கும்.

      Delete
  12. ஏக்கம் கொண்டே எப்பொழுதும்
    ஏங்கித் தவிக்கும் காதலாம்
    தூக்கம் கெட்டும் தினந்தோறும்
    துணையாய் நிற்கும் காதலாம்

    அருமை!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வரவு நல்வரவாகுக.வருகைக்கு நன்றிங்கயா

      Delete
  13. நம்ம இப்படி கவிதையிலும், கதைகளிலும், கட்டுரைகளிலும் சொல்லிக்க வேண்டியதான், காதல் உயர்ந்தது, புனிதமானது அது இதுனு. நம்ம கலாச்சாரத்தில் இன்னும் காதல் கெட்டவார்த்தைதான். காதலிக்க ஒருவன், கல்யாணம் செய்து வாழ இன்னொருவன் என்பதுதான் நம் இன்றை சாதிக் கலாச்சாரத்தின் நிதர்சனம். (பெரும்மாபான்மை மக்கள் வாழும் வாழ்க்கை!)

    உங்க "comments spam box" சை அப்பப்போ செக் பண்னுங்க. ஒரு சில காமெண்ட்ஸ் அங்கே போயிடுதுனு நெனைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வதும் உண்மைதான் கலாச்சாரம் மாறவேண்டும். பார்த்துவிட்டேன் கமெண்ட் பெட்டியில் எதுவும் இல்லையே?
      வருகைக்கு நன்றி

      Delete
  14. காதல் ஆஹா அருமைக்கவிதை.நேசம் எப்போதும் வெல்லும் காதலில்!

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் வெல்லும் நேசம் மட்டுமே.வரவுக்கு நன்றி

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more