உலகம் முழுவதும் உயிரோடு உறவாடு......
உலகம் முழுவதும் அங்கங்கே உரிமைப் பிரச்சனை வருகிறதே உயிர்கள் பலவும் மடிகிறதே உயர்வும் அதனால் தடுக்கிறதே கலகம் கலவரம் திருட்டுகளும் கயவர் கூட்டக் கொள்ளைகளும் கடிந்தே தினமும் நடக்கிறதே கவலை மனதில் தருகிறதே விலையும் தினமும் ஏறுவதால் விஞ்சிக் கவலைத் தருகிறதே பொன்னும் பொருளும் இல்லாமல் புலம்பும் நிலையே வருகிறதே திண்ணைப் பேச்சு இப்பொழுதே தினமும் வீணாய் போகிறதே பண்ணை எங்கும் காணாமல் பரந்த வெளியாய் இருக்கிறதே கவலை இல்லா வாழ்க்கைதனை கடக்கும் நிலையும் திரும்புமோ நிலைமை எப்போ மாறுமோ நிம்மதி மீண்டும் திரும்புமோ சண்டை என்றும் இல்லாமல் சமத்துவம் எங்கும் விரும்பினால் அனைத்துமே நிலைமை மாறிடும் அகிலமே அன்பால் செழித்திடும்