தெய்வங்கள்

தெய்வங்கள்

போரின்றி ஈழம் கிடைக்காதோ




ஒற்றுமையாய் தமிழர்கள் இருப்பாரோ
ஓரணியில் சேர்ந்து உழைப்பாரோ
போரின்றி ஈழம் கிடைக்காதோ-ஐநா
புகுந்து வாக்கெடுப்பு நிகழ்த்தாதோ

பார்போற்ற மகிழ்ச்சித் திரும்பாதோ
பைந்தமிழன் வாழ்வும் சிறக்காதோ
பூவுலகில் தமிழன் புகழ் இருக்க-புதிய
விஞ்ஞான நிகழ்வும் நடக்காதோ

விஜய வருடத்தில் விடிவும்
விடுதலைக்கான தூய தெளிவும்
வீதியெல்லாம் கோலம் போட்டு-தமிழன்
வீடெல்லாம் மகிழ்ச்சி பொங்காதோ

அயல்நாட்டில் வாழும் அனைவரும்
அப்பா அம்மா கூட்டுக்குடும்பமாய்
எப்போ ஒன்றாய் மகிழ்ந்து-இன்பம்
தப்பா வாழ்வு மீண்டும் கிடைக்குமா

சிண்டு சிறுசும் ஓடியாடி விளையாடி
கெண்டு கிழங்கள் பேசி மகிழ்ந்து
திண்டு திண்ணை சுற்றம் கூடி-இன்பம்
கண்டு மகிழும் நாளும் வாராதோ

Comments

  1. இந்த விஜய வருடத்தில் எல்லார் வாழ்விலும் நல்வாழ்வு மலரட்டும்...

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க நண்பரே.நம் விருப்பம்போல் நடக்கட்டும் .

      Delete
  2. விஜய வருடத்தில் விடிவும்
    விடுதலைக்கான தூய தெளிவும்
    வீதியெல்லாம் கோலம் போட்டு-தமிழன்
    வீடெல்லாம் மகிழ்ச்சி பொங்காதோ//

    நம்பிக்கை தான் வாழ்க்கை. நீங்கள் சொன்னது போல் வீடெல்லாம் மகிழ்ச்சி பொங்கும், எல்லோரும் ஒன்று கூடி வாழும் காலம் வரும்.நம்பிக்கையுடன் வாழ்த்துவோம். வாழ்த்தி , வாழ்த்தி வாழ்வில் நலம் பெறுவோம்.
    அருமையான கவிதைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் நம்பிக்கையே வாழ்க்கை,நிச்சயம் நடக்கும் நிம்மதி கிடைக்கும்

      Delete
  3. அருமை. அழகிய கவிதை. பொருள் மனதைக் கவருகின்றது.

    கனவு மெய்ப்பட வேண்டும்
    கைவசமாவது விரைவில் வேண்டும்...

    வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
    Replies
    1. கவிஞனின் வாக்குப் பொய்யாகாது,நடக்கும்

      Delete
  4. இல்லை இல்லை அப்படி சொல்லதீங்க எல்லாம் நல்லதாய் முடிய வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் ஈனக நினைத்தபடி நல்லதாய் நடக்கும்

      Delete
  5. கேள்விக்கவிதை!விடை விரைவில் கிடைக்கட்டும்

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி பெருகட்டும் மக்கள் மனது குளிரட்டும்

      Delete
  6. அருமை அருமை

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க நண்பரே தொடர்ந்து வாங்க

      Delete
  7. எல்லோரும் விரும்பும் இன்பம் என்று கிடைக்கும் என ஏக்கம் . காலம் தான் இக்கவிதைக்கு பதில் சொல்லும்

    ReplyDelete
    Replies
    1. எப்படியோ அமைதி ஏற்பட்டால் நல்லதுதானே,நீங்க வந்ததுக்கு நன்றிங்க

      Delete
  8. அமைதி ஏற்பட்டால் நல்லது.
    அருமையான கவிதைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க குமார். தொடர்ந்து வாங்க நண்பரே

      Delete
  9. வந்து விட்டேன் தந்து விட்டேன்!

    ReplyDelete
    Replies
    1. கண்டுவிட்டேன் உண்டுவிட்டேன் நன்றியும் சொல்லிவிட்டேன்

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more