தெய்வங்கள்

தெய்வங்கள்

ஆனந்த வாழ்வு....

மேகமெல்லாம்  ஒன்று சேராதோ
மோதிக்கொண்டு மழையும் தராதோ
தாகமெ ல்லோர்க்கும் தனியாதோ-தமிழ்
தரணியெல்லாம் முழுதுமாய் நனையாதோ

விவசாயம் மீண்டும் நன்கு பெருகாதோ
விளைச்சலுக்கு நல்ல விலை அடங்காதோ
உழைப்புக் கேற்ற ஊதியம் கிடைக்காதோ  -அதனால்
உழவனுக்கு  மீண்டும்  வாழ்வு ஒளிராதோ

பாடுபட்டுச் சேர்த்தப் பணம்
பன்மடங்காய் மீண்டும் உயராதோ
பணிசெய்வோர் கடன் சுமையும்-சிறிதும்
பனியாக உருகிக் குறையாதோ

தேகமெல்லாம் சேர்ந்த நோய்கள் தீர
தெளிவான மருந்தொன்று படைக்காதோ
தேடித்தேடி நல்லுணவை ருசித்து-இன்பமாய்
தினமெல்லோரும் புசித்து மகிழ்வாரே

கடனில்லா இல்வாழ்க்கை அமையாதோ
கஷ்டமெல்லாம் நிம்மதியாய்  தீராதோ
அளவான குடும்பங்கள் மகிழ்ச்சியாய்
ஆனந்த வாழ்வு மீண்டும் கிடைத்திட்டால்

கனவில்லா நெடுந்தூக்கம் வந்திடுமே-மகிழ்ச்சி
கடலெனவே நல்வாழ்க்கை அமைந்திடுமே
தினந்தோறும் மகிழ்ச்சி கிடைத்திடுமே-மக்கள்
தீராத நோயெல்லாம் விரைவில் தீர்ந்திடுமே







Comments

  1. நினைப்பதெல்லாம் நடக்கட்டும்... அனைவரின் வாழ்வும் ஆனந்த வாழ்வாகட்டும்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் நண்பரே மழையும் சீக்கிரம் வரும் மலர்ச்சி அனைவருக்கும் கிடைக்கும்

      Delete
  2. நினைப்பதெல்லாம் நல்லவைகளாக இருப்பதால்
    நிச்சயம் உங்களுக்கு மட்டும் அல்ல
    உங்கள் தொடர்புடைய அனைவருக்கும்
    வளமான வாழ்வே அமையும்
    மனம் தொட்ட பதிவு
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க சார்.உங்களுக்கும் உங்களின் குடும்பத்தாருக்கும் நன்றிங்கள்

      Delete
  3. எல்லோரும் நலமாக வாழ நல்ல தேவைகளை கேட்கும் கவிதை.
    ஆனந்த வாழவு எல்லோருக்கும் வந்து அடைய வாழ்த்துக்கள்.
    அருமையான கவிதை அளித்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

      Delete
  4. ரொம்ப நல்லாயிருக்கும் நீங்க சொல்லியிருக்கறதெல்லாம் நடந்தால்....










    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் நடக்கும் எல்லோருக்குமே நிம்மதி கிடைக்கும்

      Delete
  5. சகோதரரே!...
    வானம் பொழிந்தால் யாவும் சிறக்கும். சிறந்த சிந்தனை.
    அருமையான கவிதை. வாழ்த்துக்கள்!

    ஆனந்த வாழ்வு அழகாய் அமையவேண்டி
    வானம் பொய்க்காது வளமான மழைவேண்டி
    தானம் தந்தன தாளம்போட்டு நல்ல
    கானம் இயற்றிக் களமிறங்கினீர் வாழ்த்துக்கள்!

    பி.கு: தமிழ்மண ஓட்டுப்பட்டை நான் போகும் வலைப்பதிவர்களிடம் யாரிடம் காண்கிறேனோ அங்கெல்லாம் என் வாக்குகளையும் பதிந்திடுவது வழமை. குறிப்பிட்டுச் சொல்வதில்லை.
    ஒவ்வொருமுறையும் அப்படி குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமா?
    இதுபற்றி எனக்கொன்றும் தெரியாது அதனால் கேட்டேன்.
    தவறெனில் பொறுத்துக்கொள்ளவும். நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் ஒவ்வொரு முறையும் வந்து கருத்திட்டாலுமே எனக்கு மகிழ்ச்சிதான்.நானும் உங்களைப் போலத்தான் வாக்கிடுவேன் தவறில்லை

      Delete
  6. விவசாயம் மீண்டும் நன்கு பெருகாதோ
    விளைச்சலுக்கு நல்ல விலை அடங்காதோ
    உழைப்புக் கேற்ற ஊதியம் கிடைக்காதோ -அதனால்
    உழவனுக்கு மீண்டும் வாழ்வு ஒளிராதோ...
    விவசாயின் நிலை உயர வேண்டும் நல்ல கருத்துள்ள வரிகள்.

    ReplyDelete
    Replies
    1. விவசாயம் சார்ந்த உங்களுக்கும் மகிழ்ச்சியான நல்ல விவசாயம் செழித்து வளமுடன் வாழ வாழ்த்துகிறேன்

      Delete
  7. ஆனந்த வாழ்வு காண்போம் அடங்கிய ஆசைகளுக்குள் .........

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் எல்லாத்துக்கும் எப்போதும் நல்லதே

      Delete
  8. மழை வந்தால் மண் செழிக்கும்.. மனுஷன் வாழ்வும் வளமாகும்!

    ReplyDelete
    Replies
    1. பசுமை வந்தால் பஞ்சம் தீரும் மக்கள் மனதில் உற்சாகம் பிறக்கும்

      Delete
  9. நீங்கள் சொல்வதெல்லாம் நடந்தால் நன்றாகத்தான் இருக்கும்.
    அதற்கு,
    மேகமெல்லாம் ஒன்று சேராதோ
    மோதிக்கொண்டு மழையும் தராதோ
    என்று நானும் பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் பிராத்தனையாலும் சீக்கிரம் மழைபொழிய வேண்டும்

      Delete
  10. மழை வேண்டி கவிதையா? கவிதை கண்டாவது மழை வரட்டும்!

    ReplyDelete
    Replies
    1. ஒருவேளை தவறில்லாமல் நீங்கள் வெண்பாக்கள் சந்தம்,எர்க்ய்கை மோனையுடன் எழுதினால் நூறு சதவீதம் நிச்சயம் மழை கிடைக்கும்

      Delete
  11. நீங்கள் சொல்லும் ஆனந்த வாழ்வு அமைந்தால் நல்லதுதான்..விவசாயம் செழித்தால் அனைத்தும் செழிக்கும்..
    //மேகமெல்லாம் ஒன்று சேராதோ
    மோதிக்கொண்டு மழையும் தராதோ//
    மேகங்கள் சேரட்டும் மழை பொழியட்டும்!

    ReplyDelete
    Replies
    1. வந்தமைக்கு நன்றிங்க,வேண்டும் மழை வேண்டும் மீண்டும் நீங்களும் வரவேண்டும்

      Delete
  12. சார், இந்த கவிதை நம் அனைவரின் ஏக்கத்தை பிரதிபலிப்பதாய் உள்ளது. வான் மழை வரும் வரை உங்கள் கவிதை மழையில் நனைந்து கொள்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. தம்பி நீண்ட நாளுக்கப்புறம் வரீங்க மத்ததும் படிங்க

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more