உலகமே உறவாகிவிட்டது
உலகமே உறவாகி விட்டது
உரிமையுள்ள துணையாகி விட்டது
வலைப்பக்கம் தினம் வராவிட்டால்
வருத்தமாகி மனம் தவிக்கின்றது
இளமைக்கும் முதுமைக்கும் இதுவே
இன்பமான தளமாக உள்ளது
எத்திசையும் உறவு கொள்ள
ஏழுகடல் தாண்டியும் இணைக்கின்றது
எண்ணங்களைப் பகிர முடிகிறது
எழுத்துலகில் நீந்தத் துடிக்கிறது
சின்ன வயது பையனோடும்
சரிசமாய் பேசத் துடிக்கின்றது
புதுஉலகம் புதுஉறவை பார்க்க
புத்தகமாய் நினைவைக் கோர்க்க
எத்தனையோ தூரத்துக்கும் செல்கிறது
எழுத்துலகே என்னையும் ஈர்க்கின்றது
இத்தனைநாள் மறைத்து வைத்த
இன்பமான தருணத்தை ரசிக்கின்றது
இனிமையான நினைவுகளை இப்போதும்
இனிமையாக எழுத முடிகின்றது
இனிமையான நினைவுகளை இப்போதும்
ReplyDeleteஇனிமையாக எழுத முடிகின்றது
இனிமையான பகிர்வுகள்..!
வருகைகைக்கு நன்றிங்கம்மா
Deleteநீங்கள் சொல்வது மிகச் சரி
ReplyDeleteநேற்று ஒரு நாள் உங்களை பதிவில்
காணவில்லையென்றதும் கொஞ்சம்
என்றையும் விட உங்களை கூடுதலாகவே
நினைத்துக் கொண்டேன்
தமிழ்மண தரவரிசையில்
ஐந்தை எட்டியமைக்கு வாழ்த்துக்கள்
ஒன்று இனி தொட்டுவிடும் தூரம்தான்
வாழ்த்துக்களுடன்....
இன்று பெரும்பாலான பதிவர்களின் அன்றாட வேலையே பதிவுலகை வலம்வருதல் தான்.எதை மறந்தாலும் உங்களைபோன்ற நல்இதயங்களை நாளும் ஏன்? நிமிடமும் மறக்க முடியாது
Deletetha.ma 2
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றிங்க சார்.உங்களின் ஆதரவினால்தான் எனக்கு இந்த ஐந்தாவது நிலையை அடைய முடிந்தது
Deleteதரமான கவிதைகளைப் படைக்கும் தாங்கள் இனிய உறவான இணைய நண்பர்களை அதிக அளவில் பெற்றது மகிழ்ச்சி...
ReplyDeleteநன்றிங்க மாணவரே நல்ல மனம் கொண்டவரே.நாளும் வருக நல்வரவு ஆகுக
Deleteஉலகமே உறவாகி விட்டது
ReplyDeleteஉரிமையுள்ள துணையாகி விட்டது
>>
நிஜம்தான். ரத்த சொந்தங்களை விட, இதுதான் நெருங்கிவிட்டது. கூடவே தோளும் கொடுக்குது
நல்லா சொன்ன நாலுவார்த்தை உண்மைதான்
Deleteஇணையத்தால் எல்லோருமே உறவாகிப் போனோம்.
ReplyDeleteகவிதை அருமை.
முகமே தெரியாமல் முகநூளில் பழகுவதும் இனிமைதானே
Delete// உலகமே உறவாகி விட்டது
ReplyDeleteஉரிமையுள்ள துணையாகி விட்டது
வலைப்பக்கம் தினம் வராவிட்டால்
வருத்தமாகி மனம் தவிக்கின்றது //
உண்மைதாங்க.. ஆனால் இணையத்தால் புதிய உறவாகிப்போனதால் இதுவும் ஒரு சுகமே...
உண்மைதான் தம்பி.இதுவும் சுகம்தான்
Deleteஅருமையா சொன்னிர்கள் அய்யா... இணையம் நிறைய புது உறவுகளை நாளும் நாளும் அறிமுகப் படுத்திக் கொண்டே இருக்கிறதுதான்.. அழகிய கவிதை :)
ReplyDeleteஉறவுகளைவிட மனதுக்கு ஆறுதலும் உற்சாகமும் தரும் வலைத்தள நண்பர்கள்தான் அதிகம்.வருகைக்கு நன்றி
Deleteஇதைத்தாங்க வலையில் மாட்டியவர்கள்ன்னு சொல்றாங்க...
ReplyDeleteநல்லது
சரியாச்சொன்னீங்க .தினமும் நாலுதடவைப் பார்க்கம இருக்க முடியலையே
Deleteஎன் எண்ணங்களுக்கு கவிதை எழுதிய மாதிரி இருந்தது.
ReplyDeleteஅத்தனையும் உண்மை.
அருமை.
" இனிமையான நினைவுகளை இப்போதும்
இனிமையாக எழுத முடிகின்றது"
வாழத்துக்கள்
நன்றிங்கயா மருத்துவரின் மனதையே ஆட்கொண்ட இந்தமயவலையை
Deleteமறந்திடமுடியுமா இதையும் மறுக்கத்தான் இயலுமோ.தாங்கள் வந்தமைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றிங்க
உறவெது என்று உணர்ந்திடச் சொன்னீர்
ReplyDeleteபிறப்பொடு தொடரா பெரும்பே றிதென்றே!
அருமை. அழகிய சிறந்த சிந்தனை!
வாழ்த்துக்கள் சகோதரரே!
த ம.7
நீங்களும் எனது தவிக்க இயலாத உறவானமைக்கு இந்த வலையே காரணம்.முகத்தைப் பார்க்காமல் இனத்தைப் பார்க்காமல் நலத்தை மட்டுமே நாளும் விரும்பும் இந்த வலையுலக நட்பு எளிதில் மாறாதது
Deleteபரபரப்பாக முன்னேறிக் கொண்டிருக்கும் கவிஞருக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க ரமேஷ்.தொடர்ந்து வாங்க
Deleteஉண்மையான வரிகள்! ஒரு நாள் பதிவுலகில் சஞ்சரிக்காவிடினும் ஏதோ நம்மை வாட்டி எடுக்கிறது! சிறப்பாக கவிதை வடித்தமைக்கு நன்றி! வாழ்த்துக்கள்!
ReplyDeleteவலையின் சூட்சுமத்தை அறிந்தவர் இல்லை.எல்லோருமே வலையோபோபியாவால் தாக்கப்பட்டுள்ளோம்.வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க
Delete(நமது) இனிமையான நினைவுகள் என்றும் தொடரும்...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
நிச்சயம்தொடரும்நீண்டுவளரும்
Delete
ReplyDeleteவணக்கம்!
உலகை உறவாக்கு! நம்முள்ளம் மின்னும்
மலரை நிகா்க்கும் மணந்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
வருகைக்கு நன்றிங்கய்யா
Deleteஇதுவும் ஒரு பார்வைதான்.
ReplyDeleteஉண்மைதானே.வருகைக்கு நன்றி
Deleteபதிவுலகம், டுவிட்டர் பேஸ்புக்ன்னு நாள்தோறும் வரமுடியலைன்னா வருத்தமாதான் இருக்கு, எதையோ பறி கொடுத்தா மாதிரி.
ReplyDeleteஇதுவும்
Deleteவியாதிபோலஆகிவிட்டது
எண்ணங்களைப் பகிர முடிகிறது////
ReplyDeleteஇனிமையான நினைவுகளை இப்போதும்
இனிமையாக எழுத முடிகின்றது//
ஆம் , உண்மை.
அழகாய் சொன்னீர்கள் கவிதையில்
எல்லா வயதுக்கும் ஏற்ற உறவு இங்கேதான் கிடைகிறது
Delete