Posts

Showing posts with the label கவிதை/சமூகம்/கல்வி

தெய்வங்கள்

தெய்வங்கள்

கல்விக் கற்க உதவுங்கள்

பணம் மட்டும் வாழ்வாகாது பணத்தை  உண்ண முடியாது பணமும்  குணத்தை வாங்காது பணமே வருந்தி அழாது மனிதம் கண்டு மகிழுங்கள் மக்கள் மனதில் நில்லுங்கள் மட்டில்லாத உதவி செய்து மற்றோர் மனதில் வாழுங்கள் நேரில் பார்க்கா தெய்வத்தை நேர்மை இருந்தால் காணலாம் நன்மை நாளும் செய்தாலே நன்றே மகிழ்ந்து காணலாம் உண்மை உழைப்பு சத்தியத்தை உலகில் அனைவரும் போற்றியும் பெண்ணை மதித்து வாழ்ந்தாலே பேரும் புகழும் கிடைக்குமே கல்விக் கற்க உதவுங்கள் கருணை கொண்டே செய்யுங்கள் கஷ்டம் கொண்டே படிப்போரை கண்டு உதவி செய்யுங்கள் படிக்கும் பிள்ளைகள் யாவருமே பதராய் போக மாட்டார்கள் பண்பைச் சொல்லிக் கொடுத்தாலே படிப்பில் மேன்மைக் கிடைத்திடுமே

விலை பேச வேண்டாமே...

விழியோரம் கண்ணீர் விரலாலே தட்டி விட்டேன் விதியாக வந்த சொல்லை விதி மாற்ற முடியுமா கதை தோறும் காட்சியும் கண்டதாய் சொன்னபோது கதை மாறிப் போகுமா கதையென்றே மாறுமோ சினம்கொண்டச் செயலால் சிதைத்து விடும் மனதையே சீர்நோக்கிப் பார்த்தாலே சீக்கிரமே புரியாதோ விலைப் பேச வேண்டாமே விதி மாற்றக் கூடாதே மதியாலே மாறிவிடு மக்களையே வாழவிடு விலைபோயிப் பயனென்ன விடிந்ததுமே சேதிவரும் உலைவாயை மூடினாலும் ஊர்வாயும் மூடாதே கலையாக பார்த்தாலே கல்வியும் மகிழ்ந்திடுமே கடவுளாம் சரஸ்வதியும் கருணை வழி காட்டுமே

கல்விப்பணி செய்வீரே....

நல்ல உள்ளம் கொண்டோரே நாளும் மகிழ்ச்சியைக் கேட்போரே இல்லா நிலையில் உள்ளோர்க்கு இதயம் கனிந்தே உதவிடுங்கள் கல்விப் பணியைச் செய்திடுங்கள் கருணைக் கொண்டே வாழ்ந்திடுங்கள் நல்லச் செயலைச் செய்வதற்கு நான்குபேரைத் தத்தெடுங்கள் காசுப் பணமாய் கொடுக்காமல் கட்டணம் மட்டும் செலுத்தினாலே பேசும் உலகம் உங்களையே போற்றி மகிழும் நற்செயலை இன்றைய நாளில் தவிப்போரை இயலா நிலையில் உள்ளோராம் அருகில் சென்று கேட்டறிந்து அவரை உயரச் செய்வீரே கல்விப் பணியை முடிந்தவரை கடமையாகச் செய்து வந்தால் எல்லா தெய்வமும் துணைவந்தே ஏற்றம் நன்றாய் கொடுத்திடுமே

ரசித்தவர்கள்