கல்விப்பணி செய்வீரே....
நல்ல உள்ளம் கொண்டோரே
நாளும் மகிழ்ச்சியைக் கேட்போரே
இல்லா நிலையில் உள்ளோர்க்கு
இதயம் கனிந்தே உதவிடுங்கள்
கல்விப் பணியைச் செய்திடுங்கள்
கருணைக் கொண்டே வாழ்ந்திடுங்கள்
நல்லச் செயலைச் செய்வதற்கு
நான்குபேரைத் தத்தெடுங்கள்
காசுப் பணமாய் கொடுக்காமல்
கட்டணம் மட்டும் செலுத்தினாலே
பேசும் உலகம் உங்களையே
போற்றி மகிழும் நற்செயலை
இன்றைய நாளில் தவிப்போரை
இயலா நிலையில் உள்ளோராம்
அருகில் சென்று கேட்டறிந்து
அவரை உயரச் செய்வீரே
கல்விப் பணியை முடிந்தவரை
கடமையாகச் செய்து வந்தால்
எல்லா தெய்வமும் துணைவந்தே
ஏற்றம் நன்றாய் கொடுத்திடுமே
நாளும் மகிழ்ச்சியைக் கேட்போரே
இல்லா நிலையில் உள்ளோர்க்கு
இதயம் கனிந்தே உதவிடுங்கள்
கல்விப் பணியைச் செய்திடுங்கள்
கருணைக் கொண்டே வாழ்ந்திடுங்கள்
நல்லச் செயலைச் செய்வதற்கு
நான்குபேரைத் தத்தெடுங்கள்
காசுப் பணமாய் கொடுக்காமல்
கட்டணம் மட்டும் செலுத்தினாலே
பேசும் உலகம் உங்களையே
போற்றி மகிழும் நற்செயலை
இன்றைய நாளில் தவிப்போரை
இயலா நிலையில் உள்ளோராம்
அருகில் சென்று கேட்டறிந்து
அவரை உயரச் செய்வீரே
கல்விப் பணியை முடிந்தவரை
கடமையாகச் செய்து வந்தால்
எல்லா தெய்வமும் துணைவந்தே
ஏற்றம் நன்றாய் கொடுத்திடுமே
நல்ல கருத்துக்கள்... வாழ்த்துக்கள் ஐயா...
ReplyDeleteவாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க நண்பரே
Deleteஇன்றைய சமூக சூழலுக்கு ஏற்ற கருத்து...
ReplyDeleteஉண்மைதான் ப்ரியா அவர்களே
Deleteகல்விப் பணியை முடிந்தவரை
ReplyDeleteகடமையாகச் செய்து வந்தால்
எல்லா தெய்வமும் துணைவந்தே
ஏற்றம் நன்றாய் கொடுத்திடுமே//
காலத்துக்கு ஏற்ற கவிதை.
நம்மால முடிந்த உதவி செய்தால் பரவாயில்லை
Deleteஅருமையான கருத்துள்ள கவிதை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க
Deleteகண்ணெனப் போற்றும் கல்விதனை இல்லாதோர்க்கு
ReplyDeleteஉணர்ந்திரங்கி உதவுமென்று நன்றாய்ப்பாடினீர் சிறந்தே.
அருமை. வாழ்த்துக்கள் சகோ!
த ம.4
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க சகோ
Deleteஅருமையானதொரு கருத்து ஐயா. வாழ்த்துகள் !!!
ReplyDeleteவாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்கம்மா
Deleteகல்வி மட்டுமே
ReplyDeleteமனிதனை
கரை சேர்க்கும்
அருமையான கவிதை அய்யா
கல்விக் கண் திறக்க
இயன்றவரை
உதவுவோம்
நன்றி
கல்விக்கு உதவினால் கடவுளைக் காணலாம்
Deleteகல்விப் பணியை முடிந்தவரை
ReplyDeleteகடமையாகச் செய்து வந்தால்
எல்லா தெய்வமும் துணைவந்தே
ஏற்றம் நன்றாய் கொடுத்திடுமே
கடமை தவறாமல்
கல்விப்பணி ஆற்ற அருமையான பகிர்வுகள்..
நல்லதை நாலுபேருக்கு சொன்னால் ஒருவருக்காவது உதவிகிடைக்குமே என்ற நப்பாசைான்
Deleteதங்கள் கவிதைகளிலேயே என்னை மிகவும் ஈர்த்த, மிகவும் உயர்ந்த, சமுதாய நோக்கமுடைய கவிதை இது.
ReplyDeleteநன்றிங்கையா
Deleteமுடிந்ததை
சொல்வதுகடமைஅல்லவா
கோயில் கட்டுவதை விட பள்ளிக்கூடம் கட்டுவது மிகப்பெரிய சமூக என்கிறார்கள்,கல்ப்பணி மகத்தானது.
ReplyDeleteஉண்மைதான் கல்விப்பணி மகத்தானது
Delete