கல்விக் கற்க உதவுங்கள்
பணம் மட்டும் வாழ்வாகாது
பணத்தை உண்ண முடியாது
பணமும் குணத்தை வாங்காது
பணமே வருந்தி அழாது
மனிதம் கண்டு மகிழுங்கள்
மக்கள் மனதில் நில்லுங்கள்
மட்டில்லாத உதவி செய்து
மற்றோர் மனதில் வாழுங்கள்
நேரில் பார்க்கா தெய்வத்தை
நேர்மை இருந்தால் காணலாம்
நன்மை நாளும் செய்தாலே
நன்றே மகிழ்ந்து காணலாம்
உண்மை உழைப்பு சத்தியத்தை
உலகில் அனைவரும் போற்றியும்
பெண்ணை மதித்து வாழ்ந்தாலே
பேரும் புகழும் கிடைக்குமே
கல்விக் கற்க உதவுங்கள்
கருணை கொண்டே செய்யுங்கள்
கஷ்டம் கொண்டே படிப்போரை
கண்டு உதவி செய்யுங்கள்
படிக்கும் பிள்ளைகள் யாவருமே
பதராய் போக மாட்டார்கள்
பண்பைச் சொல்லிக் கொடுத்தாலே
படிப்பில் மேன்மைக் கிடைத்திடுமே
பணத்தை உண்ண முடியாது
பணமும் குணத்தை வாங்காது
பணமே வருந்தி அழாது
மனிதம் கண்டு மகிழுங்கள்
மக்கள் மனதில் நில்லுங்கள்
மட்டில்லாத உதவி செய்து
மற்றோர் மனதில் வாழுங்கள்
நேரில் பார்க்கா தெய்வத்தை
நேர்மை இருந்தால் காணலாம்
நன்மை நாளும் செய்தாலே
நன்றே மகிழ்ந்து காணலாம்
உண்மை உழைப்பு சத்தியத்தை
உலகில் அனைவரும் போற்றியும்
பெண்ணை மதித்து வாழ்ந்தாலே
பேரும் புகழும் கிடைக்குமே
கல்விக் கற்க உதவுங்கள்
கருணை கொண்டே செய்யுங்கள்
கஷ்டம் கொண்டே படிப்போரை
கண்டு உதவி செய்யுங்கள்
படிக்கும் பிள்ளைகள் யாவருமே
பதராய் போக மாட்டார்கள்
பண்பைச் சொல்லிக் கொடுத்தாலே
படிப்பில் மேன்மைக் கிடைத்திடுமே
கல்வியின் மேன்மை அருமை ஐயா... வாழ்த்துக்கள்...
ReplyDeleteவாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க
Deleteகல்வியின் சிறப்பை உலகிற்கு கவி மூலம் உணர்த்திய உங்கள் சிறப்பு அளப்பதற்கரியது
ReplyDeleteதலையிலே ஏதோ வித்தியாசம் தெரியுதே
Deleteகல்வியின் சிறப்பை
ReplyDeleteகவியின் மூலம் சொன்னவிதம் வெகு சிறப்பு
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
நல்ல அருமையான கவிதை.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கு நன்றிங்கம்மா
Deleteகல்வி உதவுவது போல் பணமும் உதவாது ,,,உணர்த்திய விதம் அருமை !
ReplyDeleteத .ம.4.
உண்மைதான்.வருகைக்கு நன்றி
Deleteஉண்மை நிறைந்த வரிகள். ஆனால், இதனை உணர்ந்து நடப்பவர்கள் மட்டும் ஏனோ மிகமிக குறைவு.
ReplyDeleteபகிர்ந்தமைக்கு நன்றிகள் ஐயா.
எல்லாமே துன்பமயம் என்னத்த சொல்ல
Delete// நன்மை நாளும் செய்தாலே
ReplyDeleteநன்றே மகிழ்ந்து காணலாம் //
ஆம். இதுவொன்று தான் நல்வழி இறைவனைக்
காண , அடைய !
நன்று.
இறைவழி அடைய ஒரே வழி கல்விப்பணி
Deleteமீன் திங்க குடுப்பதை விட, மீன் பிடிக்க கற்று கொடுப்பதே கல்வி இல்லையா ?
ReplyDeleteசூப்பர் அண்ணே....!
ஆம்.நம்மாலான உதவியை கல்விக்கு செய்யுவோம்
Deleteகல்வியைக் கண்ணிற்கு ஒப்பிடுவர். அத்தகைய கல்வியின் சிறப்பைச் சிறப்பாக கவிவரிகளில் கூறினீர்கள்!
ReplyDeleteவாழ்த்துக்கள்!
நன்றிங்க சகோ
Delete//படிக்கும் பிள்ளைகள் யாவருமே
ReplyDeleteபதராய் போக மாட்டார்கள்
பண்பைச் சொல்லிக் கொடுத்தாலே
படிப்பில் மேன்மைக் கிடைத்திடுமே// ஒவ்வொரு ஆசிரியரும் மனதில் பதித்து வைத்துக் கொள்ள வேண்டிய வரிகள். .
//நேரில் பார்க்கா தெய்வத்தை
நேர்மை இருந்தால் காணலாம்// முற்றிலும் உண்மையான சிந்தனை வரிகள். எழுத்தறிவிப்பவன் மட்டுமல்ல அந்த எழுத்தறிய உதவுபவனே முதன்மையான தெய்வம் என்பது எனது கருத்து.
உண்மைதான்.
Deleteபடிக்கும் பிள்ளைகள் யாவருமே
ReplyDeleteபதராய் போக மாட்டார்கள்
நம்பிக்கையான வரிகள்
அருமையான கவிதை ரசித்தேன்
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
த ம 6
வணக்கம்
ReplyDeleteஇன்று வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூ அறிமுகம்மாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்க்கவும்http://blogintamil.blogspot.com/2013/09/2.html?showComment=1379461793265#c1036978093212335884
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கும் நன்றி
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅன்பின் கவியாழி கண்ணதாசன் - வலைச்சர அறிமுகம் மூலமாக வந்தேன் - கவிதை நன்று - கல்வி கற்க உதவ வேண்டும் என்ற நற்சிந்தைனையில் விளைந்த நல்லதொரு கவிதை - கல்வி கற்கவில் க்கன்னா வேண்டுமா - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDelete