Tuesday, 30 July 2013

விலை பேச வேண்டாமே...

விழியோரம் கண்ணீர்
விரலாலே தட்டி விட்டேன்
விதியாக வந்த சொல்லை
விதி மாற்ற முடியுமா

கதை தோறும் காட்சியும்
கண்டதாய் சொன்னபோது
கதை மாறிப் போகுமா
கதையென்றே மாறுமோ

சினம்கொண்டச் செயலால்
சிதைத்து விடும் மனதையே
சீர்நோக்கிப் பார்த்தாலே
சீக்கிரமே புரியாதோ

விலைப் பேச வேண்டாமே
விதி மாற்றக் கூடாதே
மதியாலே மாறிவிடு
மக்களையே வாழவிடு

விலைபோயிப் பயனென்ன
விடிந்ததுமே சேதிவரும்
உலைவாயை மூடினாலும்
ஊர்வாயும் மூடாதே

கலையாக பார்த்தாலே
கல்வியும் மகிழ்ந்திடுமே
கடவுளாம் சரஸ்வதியும்
கருணை வழி காட்டுமே

27 comments:

 1. கல்வி கொடுப்பது தெய்வீகமாய் மதிக்கப் பட்ட காலம் போய் .சம்பாதிக்க நினைக்கும் பரத்தையர் நிலைக்கு கொண்டு வந்து விட்டார்கள் அதை நடத்துபவர்கள் !மாறும் என நினைத்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும் !

  ReplyDelete
  Replies
  1. கல்வியை நியாயமாக வளர்க்கும் நிறுவனங்களும் உண்டு .ஆனால் ஆரம்ப கல்விக்கே இவ்வளவு அவஸ்தை தேவயில்லையே

   Delete
 2. /// சினம்கொண்டச் செயலால்
  சிதைத்து விடும் மனதையே... ///

  வாழ்த்துக்கள் ஐயா...

  ReplyDelete
  Replies
  1. நான் சொல்வது சரியா இல்லையா நண்பரே.வாழ்த்துக்கு நன்றி

   Delete
 3. இப்படி நாம பேசினா கம்யூனிட்டான்னு கேக்குறாங்க...

  யாருக்கு இப்போ சமூக அக்கறை இருக்கு..
  எல்லாமே காசுதான்...

  இதில் கல்வி என்ன.. கடவுள் என்ன...

  ReplyDelete
  Replies
  1. ஆரம்ப கல்வியிலேயே அரங்கேற்றி விடுகிறார்கள்

   Delete
 4. கலையாக பார்த்தாலே
  கல்வியும் மகிழ்ந்திடுமே
  கடவுளாம் சரஸ்வதியும்
  கருணை வழி காட்டுமே

  கருணை விழி பார்க்கட்டும் ..!

  ReplyDelete
  Replies
  1. யார் இப்போ கலையாகப் பார்கிறார்கள்.

   Delete
 5. சினம்கொண்டச் செயலால்
  சிதைத்து விடும் மனதையே
  சீர்நோக்கிப் பார்த்தாலே
  சீக்கிரமே புரியாதோ

  அடுத்தவர்களின் உணர்வுகளைப்
  புரிந்துகொள்ளாமல் கண்டபடி பேசுவது தவறுதான் .
  புறஞ்சொல்லித் திரிவோர்களால் ஏற்படும் இத் துன்பம்
  தீராத கவலையே .சிறப்பான வரிகள் வாழ்த்துக்கள்
  சகோதரரே .

  ReplyDelete
  Replies
  1. மாணவர்களின் மனதை அறியாமல் வதைக்கும் செயல் நன்றல்ல

   Delete
 6. சரஸ்வதி தேவியை கோவிலில் பார்க்கணும் என்றாலும் காசு வேண்டுமே...!

  ReplyDelete
  Replies
  1. காசேதான் கடவுளடா? உண்மைதானே

   Delete
 7. நல்ல சமூகச் சிந்தனை!
  அருமையான வரிகள்!
  வாழ்த்துக்கள் சகோ!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

   Delete
 8. விலை போன கல்வி குறித்த ஆதங்கம் புரிகிறது! அருமையான படைப்பு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. ஆரம்ப கல்வியையே அவலமாகும் நிலைமைதான் மோசம்

   Delete
 9. உலைவாயை மூடினாலும்
  ஊர்வாயும் மூடாதே

  உண்மைதான்!

  ReplyDelete
  Replies
  1. ஆனால்.ஊர்வாயும் ஒத்துழைப்பு தருகிறதே என்ன செய்ய

   Delete
 10. தனியாருக்கு கொடுக்க வேண்டிய மதுவை அரசாங்கமும், அரசாங்கம் நடத்த வேண்டிய பள்ளியும், மருத்துவமனையும் தனியார் வசம் போனதன் விளைவு இது.

  ReplyDelete
  Replies
  1. சரியாச்சொன்னீங்க ராஜி.இதெல்லாம் அரசாங்கத்தின் வேலை

   Delete
 11. 'குடிக்கும் நீரை விலைகள் பேசி...' என்று எல்லாமே, எல்லாமே வியாபாரமாகி விட்ட காலம். கல்வி மட்டும் விதிவிலக்கா என்ன!

  ReplyDelete
  Replies
  1. காலத்தின் மாற்றமா? ஆனாலும் கல்விக்கு உண்ணும் உணவைவிட அதிகமாய் செலவு செய்ய வேண்டி உள்ளது

   Delete
 12. வியாபாரம் என்பது
  வாங்குவோர் விற்போர் சம்பந்தப்பட்டது
  வாங்குவோர் இல்லையெனில் நிச்சயம்
  வியாபாரம் இல்லாமல்தானே போகும் ?

  ReplyDelete
  Replies
  1. என்ன செய்ய ? கல்விக்கு காசும் தேவை என்பதை சிறு பிள்ளைகளே உணர்கின்றனர்

   Delete
 13. இன்றைய கல்வி பற்றிய உங்கள் வருத்தங்கள் மிகவும் நியாயமானவை. உங்கள் நிலையில்தான் நாங்களும் இருக்கின்றோம். எப்போது இந்நிலை மாறும்?

  ReplyDelete

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்