Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

என் மகளே!

துள்ளி விளையாடி தோள்மீது சிந்தும் கிள்ளியும் கேலி செய்தும் நீ நல்ல சிரிப்பும் நகையாடிய பொழுதில் கள்ள சிரிப்பும் கும்மாளமும்  பிடித்தது மெல்ல அருகில் வந்து மெதுவாய் சொல்லிய வார்த்தைக்கு  நூறு  பதில் அள்ள அள்ள குறையாத அன்புக்கு தெள்ள தெளிவாய்  பதில் சொன்னேன் நல்லதும் கெட்டதும் நாட்டில் நடப்பதும் உள்ளது உள்ளபடியே உரைத்தேன் சொன்னேன் செல்ல கிளியே செந்தமிழ் மொழியே உள்ளம் இனிக்குது உன்னால் மகிழ்ந்தது சொன்னதும் செய்தாய் சிரிப்போடு இருந்தாய் சொர்கமை இருந்தது சொந்தமாய் முத்தம் கன்ன குழிவிழ கண்சிமிட்டி சிரிதாயே கண்ணினின்மொழி பேசி மகிழ்ந்தாயே என்னை சீன்டியதும்இடைமறித்து உன்னை திட்டியதாய் உள்வாங்கி கண்ணை கசக்கி கடும் கோபமுடன் அன்னையையும் அடித்தாய் அழுதாயே அத்தனையும் நடந்தது அமுதுன்னும் பித்தில்லா பிள்ளை பருவத்தில் சித்தனாக பித்தனாக நானிருந்தேன் சிறிதும் கொபமில்லாது மகிழ்ந்தேன் முப்பது மாதம் தான் முடிந்தது முன்பருவ பள்ளியில் சேர்த்தபோது முடியாது மறுத்து அழுதாய்  பின் முகமலர்ந்து தொடங்கினாய் படிப்பை அன்றே உரைத்தது அவ்வளவுதான் அன்பால் அடித அடியும் மறந்தது அன்பால் கடித்தது கட்டி பிடித்தது அன்பாய்  சிரி

எனக்கு வேண்டும்

எனக்கும் ஆசை எப்படியும் முடியுமென என்னவள் மறுக்கிறார் என்னசெய்யலாம்? ஆசையும் இருப்பதால் அது முடியுமா என்று ஒவ்வொரு நாளும் உள்ளம்தான் சொல்லுது இந்தமுறை இருக்கலாம் என்று? சொல்லி பார்த்தேன் சொந்தமாய் வேண்டுமென்று! எள்ளி நகைகிறாள் என்னை இன்னும் முறைக்கிறாள்! பள்ளி படிப்பும் பள்ளியறை இல்லையென்றால், என்ன செய்வேன் எப்படி கொஞ்சுவேன்? கண்ணே மணியே கண்ணனின் மகனே என்று!!! இராம.கண்ணதாசன் சென்னை

கடவுள் இருந்தால் கஷ்டமும் தருவானா?

கடவுளே கடவுள் இருந்தால் கஷ்டமும் தருவானா? கயவர்கள் நிம்மதியாய் காசு பார்க்க விடுவானா? திருடன்  துரோகிஎல்லாம் தைரியாமாய் திரிவானா? காசு பணத்திற்காக கள்ள தொழில் செய்வானா? இல்லாதவன் ஏங்குகிறான் இருப்பவனோ  பதுக்குகிறான் உள்ளதை சொல்பவன் உயர்வின்றி தவிக்கிறான் நல்லவனாய் இருப்பவன் நாளும்  மனதால்இறக்கிறான் பொல்லாங்கு சொல்பவன் புகழோடு இருக்கிறான் உனக்காக செய்வதை ஏழைக்கு கொடுக்கசொல்! உயர்வாக உன்னிடம் ஒழுக்கத்தை பயிலசொல்! தனக்காக உள்ளதுபோக தருமம் செய்யச்சொல்! மனித நேயம்  மறக்காமல் மனிதனை இருக்கசொல்! மனிதனாக இருக்க மனிதாபிமானம் மதிக்கசொல்! பெற்றோரை,மற்றோரை மாண்புடனே மதிக்கசொல்! தனியோளுக்கம் கற்றுதந்த ஆசிரியரை மதிக்கசொல்!!!

கன்னி பெண்ணே வருவாயா?

Image
முக்குடமும் தளும்ப முந்தானை விலக்கிவிட்டு சொக்கிவிடும் சுந்தரியே! சூரியனும்  நானும் சுட்டுவிட போகிறோம் ? தாகமெனக்கு தருவாயா? தங்கமேனியே வருவாயா? தாகம்  தீர்க்க குடம் தண்ணீர் தருவாயா? பூமியும் தெரியவில்லை பொழுதும் அடங்கவில்லை கூவும் குயிலும் குரல் கொடுக்கும் தவளையும் மேவி அழைக்குது மேகமும் கருக்குது மோகம்  குறையவில்லை மேனியோ அடங்கவில்லை போக பெண்ணே நீ போதை ஏற்றாதே! பார்போரிடம் என்னை தூற்றாதே தவறியும், கால சக்கரமும் கண்டிப்பாய் உருண்டோடும் கைபிடிக்க காத்திருக்கேன் கரையேறி வருவாயா? கனிந்த முத்தம் தருவாயா  கட்டியனைப்பாயா? இராம.கண்ணதாசன் சென்னை

என்ன ஆச்சு?

பார்த்ததும் ? நான்...... தோற்றுவிட்டேன் கை பட்டதும்........... பயந்துவிட்டேன் தொட்டவுடன் துவண்டு விட்டேன்! நேற்றுவரை புரியவில்லை நிகழபோவது என்னவென்று? பூத்தது போலானேன்! தேனூருது தென்றலும் வீசுது தேகமெல்லாம் நடுங்குது ஏனோ?       .................... இராம.கண்ணதாசன் சென்னை

ரசித்தவர்கள்