தெய்வங்கள்

தெய்வங்கள்

எனக்கு வேண்டும்

எனக்கும் ஆசை
எப்படியும் முடியுமென

என்னவள் மறுக்கிறார்
என்னசெய்யலாம்?

ஆசையும் இருப்பதால்
அது முடியுமா என்று

ஒவ்வொரு நாளும்
உள்ளம்தான் சொல்லுது

இந்தமுறை
இருக்கலாம் என்று?

சொல்லி பார்த்தேன்
சொந்தமாய் வேண்டுமென்று!

எள்ளி நகைகிறாள்
என்னை இன்னும் முறைக்கிறாள்!

பள்ளி படிப்பும்
பள்ளியறை இல்லையென்றால்,

என்ன செய்வேன்
எப்படி கொஞ்சுவேன்?

கண்ணே மணியே
கண்ணனின் மகனே என்று!!!


இராம.கண்ணதாசன்
சென்னை

Comments

ரசித்தவர்கள்

252,158

பதிவுகள் இதுவரை

Show more