Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

சகோதரியின் அன்பு

அம்மாவின் அன்பு முதன்மையானது அதற்க்கு ஈடு இணை சொல்லவே முடியாது அதற்க்கு நன்றி சொன்னால் அர்த்தமாகாது  மனைவி என்பவள் வாழ்க்கையின் அங்கம அவளும் வாழ்வில் அங்கமே தானே ஒழிய அவளுக்கும் நன்றி சொல்ல நிர்பந்தமில்லை ஆனால்,இடைப்பட்ட இளவயது காலங்களில்  நமக்கு வாழ்க்கை கல்வியை கற்றுத்தருவது அம்மாவோ ஆசிரியரோ அப்பாவோ இல்லையென்று சொல்வேன் அதற்க்கு அர்த்தம் நமது உடன்பிறந்த சகோதரிகள் மட்டுமே சகோதரனை தவிர்க்கலாம் காரணம் அன்பு ஆசை நேசம் எல்லாமே சகோதரியிடம் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும் அவர்கள் வாழும் தத்துவமாக வழிகாட்டியாக இருந்திருப்பதால் தான் நம்மால் ஒழுக்க நேரியோடும் உயர்வான படிப்போடும் உன்னதமான அன்போடும் இருக்க முடியும் எனவே வாழ்க்கையயில்  சகோதரிகளின் அன்பு பண்பு பாசம் நேசம் மறக்க முடியாதது  மறக்கவும் கூடாதது

மின்சார இரவு

Image
  மின்சாரம் இல்லாததால் மின்விசிறி தன் சுவாசம் இல்லாமல்  இருந்தது இடியுடன் மழை இருவரையும் சேர்த்து-சுகமாய் இன்னிசை வேண்டியது  ஏக்கத்துடன் பார்த்தது இருவரையும் சுவைத்த இரு கொசுக்கள் இணைந்து பாட்டு பாடியது  இன்னலாய்  பசிதுறந்தும் பக்கமிருந்தும் வெட்கமாய் -மனதை வேண்டியது வீழ்த்த தூண்டியது வேண்டியது மேடான பகுதிகளில் மெல்ல மெல்ல சூடான  மூச்சு காற்றுடன் நகர்ந்து மேலிதழை கவ்வி கொண்டான்-மங்கையை மீண்டும் மீண்டும் சுவைத்தான்  மகிழ்ந்தான் தீராத மோகத்தில் தினமும் ஏங்கி பூவாக இருந்தவளை கசக்கி பிழிந்தான் மேலோடு மேல் மோதி மெல்லிய-வலியுடன் மார்போடு  அணைத்தான்  மீண்டும் செய்தான் யாரோடு தர்க்கம் எதற்காக தயக்கம் தேனுண்ட வண்டாய் திகட்டிய வேளையிலே இசை வருவதுபோல் இளங்காற்று வீசியது-இன்பத்தை  இசையோடு போற்றியது இன்பத்தேர் ஒட்டியது நன்றி சொன்ன நம் தலைவன்  நாணத்தோடு இன்னும் வேண்டுமா  இந்நிமிடம் போதுமா உண்ணும போதெல்லாம் உன்வாசம் -இரவு சொன்ன  கனவிதுவே சுவைக்கூடி கண்டதுவே

அம்மா வருவாயா ?

Image
உயிர் பிடித்து உடல் கொடுத்து உள்ளத்தில் நல் அன்பை விதைத்து நல்பிள்ளையாய் நாளும் வளர்த்து-என்னை செல்லமாய்  நன்கு  சீராட்டி வளர்த்தவளே அப்பனை அடையாளம் காட்டி எனக்கு அன்பையும் பண்பையும் ஊட்டி வளர்த்து அண்ணன் தம்பி  உறவுகளும் சொல்லி-உரிமைக்கு அக்கா தங்கை கடமைகளும் போதித்தாய் கதைசொல்லி தூங்க வைப்பாய் கருத்துக்களை பேசவைப்பாய் நாளும் காண்பவர் எல்லோரின் உறவு சொல்வாய்-விழித்ததும் கண்டவரின்  கண்படுமென பொட்டு வைப்பாய் தான் உணவு உண்ண மறந்தாலும் நான்  தூங்க தாலாட்டு சொன்னவளே ஏனென்ற கேள்வி இன்றி எதிலும்-தப்பின்றி எந்நாளும் என்னுள் அன்பை சேர்த்தவளே கள்ளமில்லா அன்பை  கனிவுடன் தந்தவளே கருவாக  என்னை உருவாக்கி சுமந்தவளே பெரிதாக  அன்பும்  குடும்ப நெறியும்-குறைவின்றி உருவாக்கி வளர்த்தவளே உலகை உணர்தியவளே   சொல்லோர்கள் தப்பாய் என்னை  சொன்னாலும் எல்லோரையும் பதில்  எச்சரித்து அனுப்பிடுவாய் செல்லமாக செய்யாதே என கண்கலங்குவாய்-யாரின்று மெல்ல புரியவைத்து  மேனியை தட்டுவார்கள் என்னால் எழுத முடியவில்லை உருவாய் எதிரில் நீயே நிற்பதுபோல்எண்ணுகிறேன் சொன்னால் வார்த்தையில் அடங்காது-இறந

இளமையில் இன்பம் இழப்பதோ நெஞ்சம்

Image
கல்லூரி செல்லாமல் கண்டபடி சுத்துறான் கண்டதையும்  பார்த்து கனவிலே மிதக்கிறான் உண்டதை மறந்து உடனுணவு  தின்கிறான்- வயிற்றில்  உபாதை கெட்டதும் மருத்துவரை பார்க்கிறான்   இள வயதில் நலமின்றி தவிக்கிறான் இமை மூடா காணொளியில் கிடக்கிறான் துணை நாடி வலைப்பக்கம் போகிறான்-வீட்டில் இணை வந்தபின் முடியாது போகிறான் நலனை  நாடாமல் நேரத்தில் உண்ணாமல் பலமணி நேரம் வேலை செய்து பத்திரத்தில்  பணத்தை முழுதும் போடுறான்-அப்புறம் பாதுகாத்து  பல நாட்களை கழிக்கிறான் கஷ்டமான  நேரத்திலும் காசு சேர்க்கிறான் கஷ்டமெல்லாம்  தீர்ந்தப் பின்னே  அதை இஷ்ட மான இடத்தில் பதுக்கி- வயித்துக்கு இஷ்டம்  வரும்போது சாப்பிட மறுக்கிறான்   பலநூறு செலவு செய்து பயந்து பலவேறு பரிசோதனை செய்கிறான் பலலட்சம் பணம் கொடுத்து - தொலைக்கிறான் பயந்து நடுங்கி தினமும் சாகிறான் ஜோடியாய் சேர்ந்து சோதனைக்கு சென்றால் ஜொள்ளு  விடும் கூட்டம் அங்கே வேடிக்கை பார்த்து விதமாய் சிரிக்குது-அங்கே வாடிக்கையாக்கி தினம் பணம் பாக்குது வாழ்க்கையை தொலைத்து விட்டு தினம் வாடிக்கையாகி அங்கே பணம் செலவழித்து தேடிய செல்வம் மறந்து பித்தனாகி

பெண்மையின் பேரின்பம்

Image
       நாள்பார்த்து நல்ல நேரம் பார்த்து நல்லோர்கள் வாழ்த்து நல் சொல்ல பார்த்து பேசி இருவீட்டாரும்-மகிழ்ந்து சேர்த்து வைத்த திருமணம் சிறப்பாக தாலி கட்டியதும் தவம் ஆரம்பம் தனியறையில் நாளும்   ஏற்படும் பூகம்பம் தாகமென கடக்கும் முப்பதுநாளும்_ ஆசை தாகமது மட்டும் தணியும் முடியும்! கருவுற்றதும் கனவுகள் ஆரம்பம் அதை கருத்தாய் கவனித்து சினம் கொள்ளாமல் சிறிதளவும் அசைக்காமல் உருவேற்ற- உள்ளத்தில் சீரான முகமாக்கி ரணத்தையே உணவாக்குவாள்! அன்பையும் நற்பன்பையும் நாளும் சொல்லி அன்னையின் தவிப்பை அன்றே சொல்லிடுவாள் வயிட்றை தடவி வழியெல்லாம் பார்த்த- அறிவை பயிற்றுடுவாள் மகிழ்வாள் மனமெல்லாம் பூரிப்பாள்! பிறக்குமுன்னே பிள்ளை   செய்யும் சேட்டையை பிறரிடம் சொல்வாள் நாளும் சிரிப்பாள் பித்தாய் இருப்பாள் பிறப்பை கேட்பாள்- பூவே இத்தனை நாளாய் இதற்குத்தானே என்பாள்! நல்லோரின் நல் ஆசியுடன் பெயரை எல்லோர் நினைவில் சொல்லி வைத்து பல்லாண்டு வாழ்கவென வாழ்த்தி-குழந்தைக்கு எல்லோரும் கூடி தாயை-சேயை வாழ்த்துவார்கள்

ரசித்தவர்கள்