இளமையில் இன்பம் இழப்பதோ நெஞ்சம்
கல்லூரி செல்லாமல் கண்டபடி சுத்துறான்
கண்டதையும் பார்த்து கனவிலே மிதக்கிறான்
உண்டதை மறந்து உடனுணவு தின்கிறான்- வயிற்றில்
உபாதை கெட்டதும் மருத்துவரை பார்க்கிறான்
இள வயதில் நலமின்றி தவிக்கிறான்
இமை மூடா காணொளியில் கிடக்கிறான்
துணை நாடி வலைப்பக்கம் போகிறான்-வீட்டில்
இணை வந்தபின் முடியாது போகிறான்
நலனை நாடாமல் நேரத்தில் உண்ணாமல்
பலமணி நேரம் வேலை செய்து
பத்திரத்தில் பணத்தை முழுதும் போடுறான்-அப்புறம்
பாதுகாத்து பல நாட்களை கழிக்கிறான்
கஷ்டமான நேரத்திலும் காசு சேர்க்கிறான்
கஷ்டமெல்லாம் தீர்ந்தப் பின்னே அதை
இஷ்ட மான இடத்தில் பதுக்கி- வயித்துக்கு
இஷ்டம் வரும்போது சாப்பிட மறுக்கிறான்
பலநூறு செலவு செய்து பயந்து
பலவேறு பரிசோதனை செய்கிறான்
பலலட்சம் பணம் கொடுத்து - தொலைக்கிறான்
பயந்து நடுங்கி தினமும் சாகிறான்
ஜோடியாய் சேர்ந்து சோதனைக்கு சென்றால்
ஜொள்ளு விடும் கூட்டம் அங்கே
வேடிக்கை பார்த்து விதமாய் சிரிக்குது-அங்கே
வாடிக்கையாக்கி தினம் பணம் பாக்குது
வாழ்க்கையை தொலைத்து விட்டு தினம்
வாடிக்கையாகி அங்கே பணம் செலவழித்து
தேடிய செல்வம் மறந்து பித்தனாகி -இறுதியில்
ஓடிச்சென்று உளம் மறந்து நோகிறான்
உள்ளதை சொல்லி உதவி கேட்டால்
நல்லதை சொல்லி நல்வழி படுத்தி
வாழ்வை வசந்தமாக்கி வைப்பார்கள்-மேலும்
தாழ்வை நீக்கி தடம் காட்டுவார்கள்
பணம் தேவைதான்! ஆனால் பணமே வாழ்க்கை அல்ல! என விளக்கும் கவிதை! நன்று!
ReplyDeleteநன்றி இயா,
Deleteஇப்போதைய இளைஞர்கள் பணம் பற்றியே சிந்திக்கிறார்கள் மற்றதெல்லாம் அப்புறமென நினைத்து இறுதில் உடல் வலுவை இழக்கிறார்கள்
அருமை.
ReplyDeleteநன்றி.
நன்றி ஐயா,
Deleteஉங்களுக்கு ஆதமார்தமான நன்றி
சிறந்த கருத்துள்ள நல்ல கவிதை சார்
ReplyDeleteகருத்துக்கு நன்றி .இன்னும் நன்றாக எழுத உங்களது கருத்து உறுதுணையாக இருக்கும்
Delete