மின்சார இரவு
மின்சாரம் இல்லாததால் மின்விசிறி
தன் சுவாசம் இல்லாமல் இருந்தது
இடியுடன் மழை இருவரையும் சேர்த்து-சுகமாய்
இன்னிசை வேண்டியது ஏக்கத்துடன் பார்த்தது
இருவரையும் சுவைத்த இரு கொசுக்கள்
இணைந்து பாட்டு பாடியது இன்னலாய்
பசிதுறந்தும் பக்கமிருந்தும் வெட்கமாய் -மனதை
வேண்டியது வீழ்த்த தூண்டியது வேண்டியது
மேடான பகுதிகளில் மெல்ல மெல்ல
சூடான மூச்சு காற்றுடன் நகர்ந்து
மேலிதழை கவ்வி கொண்டான்-மங்கையை
மீண்டும் மீண்டும் சுவைத்தான் மகிழ்ந்தான்
தீராத மோகத்தில் தினமும் ஏங்கி
பூவாக இருந்தவளை கசக்கி பிழிந்தான்
மேலோடு மேல் மோதி மெல்லிய-வலியுடன்
மார்போடு அணைத்தான் மீண்டும் செய்தான்
யாரோடு தர்க்கம் எதற்காக தயக்கம்
தேனுண்ட வண்டாய் திகட்டிய வேளையிலே
இசை வருவதுபோல் இளங்காற்று வீசியது-இன்பத்தை
இசையோடு போற்றியது இன்பத்தேர் ஒட்டியது
நன்றி சொன்ன நம் தலைவன் நாணத்தோடு
இன்னும் வேண்டுமா இந்நிமிடம் போதுமா
உண்ணும போதெல்லாம் உன்வாசம் -இரவு
சொன்ன கனவிதுவே சுவைக்கூடி கண்டதுவே
ம்ம்ம் ..மின்சார இரவுதான்
ReplyDeleteநன்றி
ReplyDeleteவெளியில் மின்தடை
ReplyDeleteஉள்ளத்தில் மின்சாரமோ ?
அதனால்தான் சம்சாரத்தின் தேவை பெரும்பாலும்அதிகரிக்கும்
ReplyDelete