Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு

ஆத்திரக் காரனுக்கு புத்திமட்டு  என்ற பழமொழி  பெரும்பாலானவர்களுக்கு தெரிந்ததே  இருப்பினும் இன்றைய தலைமுறையினரில் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை அதனால் எனக்கு தெரிந்த சிலவற்றை உதாரணங்களுடன்  இங்கு கூற உள்ளேன்.  அவசரக்காரனும் ஆத்திரக்காரனும் ஒண்ணுதான் .அதனால்தான் புத்தி மட்டு என்று சொல்கிறார்கள் மட்டு என்றால் குறைவு அதாவது அறிவு குறைவு என்று அர்த்தம். அவசரத்திலும் ஆத்திரத்திலும் செய்யும்  செயல்கள் சரியான முடிவைத்தராது. திட்டமிடல் இல்லாததனால் எல்லாமே நிகழ்வுகளும் நிச்சயமான வெற்றியைத் தராது.அதனால் யோசித்து செய்யும் செயல்கள் சரியாய் இருக்கும். தொழில் ,படிப்பு ,பயணம்,ஆராய்ச்சி,படிப்பில் ஆர்வமுள்ள அனைவருமே திட்டமிட்டு  நல்ல வெற்றியை பெறுகிறார்கள் அதனால் அவர்கள் செய்த உழைப்பு எல்லோருக்குமே பயனுள்ளதாய் இருக்கும்.இதில் ஆத்திரமோ அவசரமோ இல்லாததினால் எல்லாமே வெற்றியை முடிகிறது ,இங்கு அவசரமாய் எந்த முடிவும் எடுப்பதில்லை ஆழ்ந்து  சிந்தித்து செய்கிறார்கள்  பெரும்பாலான அசம்பாவிதங்கள் கொலை.கொள்ளை , கற்பழிப்பு ,திருட்டு போன்றவைகள் இங்கு நான் குறிப்பிட்டபழமொழிக்குப்பொருந்தும். குறிப்பிட்ட எல

பருகச்சொல்லி அழைப்பாரா.....

இமை இரண்டும் சேர்ந்திருக்க இதழிரண்டில் தேனொழுக அமைதியான ஆற்றலுடன் -அவன் அடியெடுத்து வைத்தவுடன் தடைசொல்லி மறுப்பாரா தயவினையும் வெறுப்பாரா இடையிடையே சிணுங்கி-இன்பமதை இறுக்கமின்றி விடுவாரா சிரிப்புடனே செவ்விதழை சினுங்காமல் கடிப்பாரா சின்னச்சின்ன அசைவுகளை-வெறுத்து சினத்துடனே இழப்பாரா கதை தொடர காத்திருந்து கதவை மூடி வைப்பாரா படையெடுத்து வருபவரை-ஏற்று பாங்குடனே வைப்பாரா பத்துமாதம் முடியுமுன்னே பாசமதை தடுப்பாரா பழுத்துவிட்ட கனியதனை-குழந்தையை பருகச்சொல்லி அழைப்பாரா

இன்பமான வாழ்க்கைக்கு...

    கடந்த வாரம்  எனது நண்பர்வீட்டு நிச்சயதார்த்த நிகழ்ச்சி சேலத்தில் நடைபெற்றது.அதற்காக காலை ஐந்து மணிக்கே எழுந்து  எனது இருசக்கர வாகனத்தில காலையிலேயே ரயில் நிலையம் சென்றேன் .அந்த பொழுதே மிகவும் ரம்மியமாக இருந்தது அதுவும் சொந்த ஊருக்குப் போவதற்கு கசக்கவா செய்யும்.       விடிந்தும் வெளிச்சம் தர மறுத்த சூரியன்,அதிகாலை தென்றல் காற்று ஆஹா எத்தனை சுகம் எனக்கு மெதுவாக அந்த காற்றை சுவாசித்தபபடியே சென்றேன்.நேரமாவதுகூட தெரியாமல் மெதுவாக காற்றின் ரிதம் கலையக்கூடாதென  சென்றது மனதுக்கு இதமாய் இருந்தது.       எத்தனைமுறை சொந்த ஊர் சென்றாலும் எங்கிருந்தோ இனம் புரியாத ஆனந்தம் எப்படி வருகிறது  புரியவில்லை. சொந்த ஊரில் சொந்தங்களோடும் நண்பர்களோடும் பழகிய நாட்கள் இடங்கள் எல்லாம் பறந்துவந்து கதைச் சொல்வது எல்லாமே மகிழ்ச்சியாய் உள்ளதேன்.       அன்றும் அப்படித்தான் அசைபோட்டுச் செல்லும்போது அருகிலேயே அவருக்கு - 75அந்தம்மாவுக்கு -70  எடை 50  கிலோவுக்கு குறைவாகவும் ஒல்லியான தேகத்தோடும்  இருந்தார்கள் .மனமொத்த தம்பதிகள் இருவரும் மனமகிழ்ந்து பேசுவதும் சிரிப்பதும் கண்டு எனக்கும் மகிழ்ச்சியாய் இருந்தது. ஒருவ

மீண்டும் அந்தநாள் வாராதோ !

11.03.1990 அந்தநாள் ஞாபகம் 11.03.2013  அன்றும் வருவதால் வாழ்ந்த நாள் எண்ணிக்கையில் வருடம் இருபத்து மூன்றாகிறது கொஞ்சநாள் வாழ்க்கையில்லை குறைவான மகிழ்ச்சியில்லை நிறைவான நாட்களிலே-எங்களுக்கு நெடுந்தூரப் பயணமிது எல்லாமும் பார்த்துவிட்டோம் ஏழ்மையைத்  தாண்டிவிட்டோம் எங்களுக்கு ஒரே பெண்ணென-இறைவன் எழுதியதாய் நிறுத்திவிட்டோம் தொலைவானப் பயணத்திலே தோல்விகளும் பார்த்திருந்தும் இனிதான வாழ்க்கைக்கு-இனியும் இணைந்தே வாழ உள்ளோம் இந்நாளில் எல்லோரும் இனிய வாழ்த்துச் சொல்லி இனிவரும் நாட்களையும்-சேர்ந்து இன்பமாக்க வாழ்த்துங்களேன்

அவள்தான் மனைவி........

வாலிப வயது வந்தவுடன் வாழ்கையை முடிவு செய்து வளர்த்த வீட்டை மறந்து-இன்பமாய் வாழ்ந்திட துடித்திடுவாள் பெற்றோரின் முன்னிலையில் பேரின்பம் காண வேண்டி பொறுமையாய்  இருந்திடுவாள்-ஆதலால் பெண்மையை காத்திடுவாள் திருமணம் முடிந்ததும் திரும்பியே கையசைத்து விரும்பிய வாழ்க்கைக்கு-கணவருடன் விருப்பமுடன் சென்றிடுவாள் எண்ணியதை தந்திடுவாள் எண்ணமதை அறிந்திடுவாள் கண்குளிர அமர்ந்து கொஞ்சி-அவனின் கண்மூடி விளையாடி டுவாள் பொன்னே மணியே என்று போதையை ஏற்றிடுவாள் பெண்மையை தருவதற்கு-நித்தம் பொறுமையை வென்றிடுவாள். அன்புடன் தந்திடுவாள் ஆசையாய் உணவளிப்பாள் அத்தனையும் பகிர்ந்துவிட்டு அருகிலேயே துணையிருப்பாள் அவள்தான்  மனைவி ! ஆயுட்காலத் துணைவி !!

ரசித்தவர்கள்